இன்றைய நவீன உலகத்தில் மக்களிடம் பண புழக்கத்தை விட கார்டுகளின் புழக்கம் அதிகரித்துவிட்டது. இப்பொழுது வேலைக்கு செல்லும் அனைவரிடத்திலும் கிரெடிட் கார்டு உள்ளது, குறிப்பாக ஐடி துறை மற்றும் பண்நாட்டு நிறுவன பணியாளர்கள். பெரும்பாலும் எல்லோரும் சில வங்கிகளில் அல்லது நிதி நிறுவனங்களில் கொடுக்கப்பட்ட கிரெடிட் கார்டை வைத்திருப்பார்கள். ஷாப்பிங் செய்யவும், விடுமுறையை கொண்டாடவும் அல்லது பில்களை செலுத்துவதற்கும் பணத்தைக் கொண்டு சென்ற காலம் முடிந்துவிட்டது. கிரெடிட் கார்டை விற்பனை நிலையங்களில் அல்லது பில் செலுத்தும் இடத்தில் தேய்த்து உடனடியாக பணத்தை செலுத்திவிடலாம்.
புதன், 11 டிசம்பர், 2013
கேஷ் பேக் என்பது ஒரு புதை குழி!! உஷார்..
கேஷ் பேக் அளிக்கும் கிரெடிட் கார்டுகளை நோக்கி பல்வேறு வாடிக்கையாளர்களும் ஈர்க்கப்படுவதற்கு தாங்கள் செலவு செய்யத தொகையில் ஒரு தொகுதி பணத்தை நமக்கு வழங்கப்படுதாக சொல்லப்படுவது தான். கிரெடிட் கார்டுகளை நீங்கள் சாதூர்யமாக பயன்படுத்தினால் உங்களுடைய கட்டணங்களை செலுத்தும் வகையிலும் மற்றும் உபரி பணமாகவும் உங்களுக்கு மாதந்தோறும் போனஸ் கிடைக்கவும் செய்யும்.
Labels:
எச்சரிக்கைகள்,
பலதும் பத்தும்
புகையிரதம் -- ஓர் பார்வை
புகையிரதம் என்பது இரும்புப் பாதைகள் என்று சொல்லப்படும் தண்டவாளங்களின் வழியாக ஒரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து செல்லக் கூடியதுமான ஒரு போக்குவரத்து வண்டியாகும். இதற்கு பயன்படும் தண்டவாளங்கள் இரண்டு உருக்கினாலான தடங்களாகவோ, அல்லது புதுவரவான ஒற்றைத் தண்டவாளமாகவோ, அல்லது காந்தத் தண்டவாளமாகவோ இருக்கலாம்.
Labels:
பலதும் பத்தும்
அபிவிருத்தி என்ற போர்வையில் காணிகளை இழந்து நாடோடிகளாக திரியும் மக்கள்
மொத்தத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இருந்து தேசிய பாதுகாப்பு காரணமாக இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட மக்கள் இன்று அகதிகளாக வாழ்வுரிமை மறுக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் வாழ்வாதார உரிமைகளும் மறுக்கப்பட்டிருக்கின்றன. மறுக்கப்பட்டிருக்கின்றது என்பதிலும் பார்க்க அவர்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன என்றே கூறவேண்டியுள்ளது.
போருக்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் அரசாங்கம் பல பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்திருக்கின்றது. கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் போன்ற வேலைத்திட்டங்களின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், விவசாயம், நிர்வாகம் என பலதுறைகளில் இந்த தீவிர கவனம் செலுத்தப்பட்டு, பல மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டு அபிவிருத்தி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
வீரகேசரி
பிறிதொரு ஆடைக்கடைக்கு செல்ல அடம்பிடித்த காதலியால் சினமடைந்து மாடியிலிருந்து குதித்த காதலன்
தனது காதலியுடன் எதிர்வரும் நத்தார் பண்டிகைக்காக ஆடை வாங்குவதற்கு ஆடையகமொன்றுக்கு சென்ற காதலர் ஒருவர், காதலி பிறிதொரு ஆடைக் கடைக்கு செல்வதற்கு அடம் பிடித்ததால் சினமடைந்து ஆடையகம் அமைந்திருந்த 7 மாடிக் கட்டிடத் தொகுதியில் இருந்து குதித்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
பேஸ்புக்கில் மரணச்செய்திகள் மற்றும் துயரமான தகவல்களை படிப்பவர்கள் இனிமேல் Like செய்து சங்கடப்பட தேவையில்லை
உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ளப்படும் தகவல்களை வாசிப்பவர்கள் அனுதாப சமிக்ஞையை வெளியிடுவதற்கான 'அனுதாப பொத்தான்' ஒன்றை தான் தயாரித்துவருவதாக பேஸ் புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Labels:
பேஸ்புக் (Facebook)
“பிரபாகரன் உயிர் தப்பியிருக்கலாம்” என்று ப.சிதம்பரம் சொல்வதன் நிஜ பின்னணி தெரிய வேண்டுமா? 03
அமைச்சர் சிதம்பரம் தயாரித்துக் கொடுத்த ப்ரப்போசலின் ஆயுள் அத்துடன் முடிந்தது.
இந்த ப்ரபோசல் பிரபாகரனால் நிராகரிக்கப்பட்ட தகவல் புலிகளின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த நடேசனால், அமெரிக்க தமிழருக்கு சொல்லப்பட்டது. அவர் அதிர்ச்சியடைந்தார். இது எப்படி நடந்தது என்று விசாரித்துக்கொண்டு போனபோது, அமைச்சர் சிதம்பரத்தின் ப்ரபோசலுக்கு எதிராக வைகோ, மற்றும் நெடுமாறன் கொடுத்த ஆலோசனை விபரம் அவருக்கு தெரியவந்தது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
“பிரபாகரன் உயிர் தப்பியிருக்கலாம்” என்று ப.சிதம்பரம் சொல்வதன் நிஜ பின்னணி தெரிய வேண்டுமா? 02
கட்டுரையின் இந்தப் பகுதியில் உள்ள சில விபரங்களை உறுதி செய்து கொள்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, வெளியிடுவதில் சிறிது கால தாமதம் ஏற்பட்டது. தற்போது தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தாமதத்துக்கு மன்னிக்கவும். நீங்கள் படிக்கப்போவது, 2-ம் பாகம். இறுதிப் பாகம் அடுத்த 24 மணிநேரத்தில் நிச்சயம் அப்டேட் செய்யப்படும்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
“பிரபாகரன் உயிர் தப்பியிருக்கலாம்” என்று ப.சிதம்பரம் சொல்வதன் நிஜ பின்னணி - 01
சமீபத்தில் சென்னையில் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அக் கட்சியைச் சேர்ந்த கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேசிய பேச்சு, அந்த நேரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அது அத்துடன் முடிந்து போகும் என்று பார்த்தால், தற்போது அது பற்றிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி என்னதான் பேசினார்கள் அவர்கள் இருவரும்?
அப்படி என்னதான் பேசினார்கள் அவர்கள் இருவரும்?
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)











