விமானத்தில் பணிப்பெண் செய்த அருவருக்கத்தக்க செயல்!
பிரசித்திபெற்ற எமிரேட்ஸ் விமானத்தில் பயணிகள் குடித்து மிஞ்சிய மதுவை அதன் பணிப்பெண் ஒருவர் மீண்டும் போத்தலுக்குள் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து துபாய் நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்திலேயே இந்தச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

