ஞாயிறு, 12 டிசம்பர், 2010

அவசர போலீசுக்கு போன் செய்த பூனை

இங்கிலாந்தில் வேல்ஸ் நகரில் உள்ள ஓய்வு பெற்ற பேராசிரியர் ஹோவர்டு மோஸ் வீட்டுக்கு நள்ளிரவு நேரத்தில் போலீசார் விரைந்து வந்து கதவை தட்டினார்கள். தூக்க கலக்கத்தில் இருந்த அவர், வீட்டு முன்பு போலீசார் நிற்பது தெரியாமல் குழப்பத்துடன் விசாரித்தார்.

மினி ஸ்கர்ட் அணிந்த பெண் போலீஸ் கட் அவுட்

செக் குடியரசு நாட்டில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிய திட்டத்தை அமல்படுத்தி இருக்கின்றனர். போக்குவரத்து சிக்னல் விளக்குகளை பொருத்துவதற்கு பதிலாக நெரிசல் மிகுந்த முக்கிய சந்திப்புகளில், பெண் போக்குவரத்து போலீஸ் ஒருவர் மினி ஸ்கர்ட் (குட்டைப் பாவாடை) அணிந்து கொண்டு காலழகை காட்டியபடி நிற்பது போன்ற ஆள் உயர கட் அவுட்டுகளை நிறுத்தி வைத்திருக்கின்றனர். இதன் மூலமாக, வாகனங்களின் வேகம் குறையும் என அரசு போக்குவரத்து போலீசார் கருதுகின்றனர்.

ஒபாமா சிறப்பு தூதர் கவலைக்கிடம்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சார்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டிருப்பவர், ரிச்சர்டு ஹால்புரூக்கி (வயது 69). தூதரக நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்த இவர், 1995-ம் ஆண்டு பால்கான்ஸ் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றினார். எனவே, ஆப்கானிஸ்தானுக்கு இவரை ஒபாமா நியமித்துள்ளார்.

நடிகர் ராமராஜன் படுகாயம்; டிரைவர் பலி

மதுரை திருமங்கலம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகர் ராமராஜன் படுகாயம் அடைந்தார். கார் டிரைவர் உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த ராமராஜனுக்கு மதுரை ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் நடந்தது.

விக்கிலீக்ஸின் விவகாரத்தால் கொழும்பு அரசியலில் சர்ச்சை - நிதானமாக செயற்பட அரசு முடிபு

இலங்கை அரசியல் விவகாரம் தொடர்பில் விக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிட்டுள்ள ஆவணங்கள் கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளதாக தெரியவருகின்றது.

ஊடகவியலாளர் மீது தாக்குதல்

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று இரவு தாக்கப்பட்டு படுகாயம் அடைந் துள்ளார். 35 வயதான மாணிக்கபோடி சசிகுமார் என்பவரே தாக்கப்பட்டவராவார். நேற்று இரவு 7.30மணியளவில் இச்சம் பவம் இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பு ஜெயந்தி புரத்திலுள்ள அவரின் வீட்டுக்குச் சென்ற மூன்று பேர் கொண்ட ஒரு குழுவினர் அவரை வீட்டிலிரு ந்து வெளியே வருமாறு அழைத்து தாக்கு தல் நடத்தியதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஐ.நா செயலாளராக கோஃபி அனான் தெரிவு செய்யப்பட்ட நாள்

கோபி அனான் கானாவைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளர் நாயகம் ஆவார். 1996 இல் இப்பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்ட கோபி அன்னான் ஜனவரி 1, 1997 முதல் பதவி வகிக்கிறார். ஜனவரி 1, 2007 இல் ஓய்வு பெறுகிறார். இவரது இரட்டைச் சகோதரி 1991 இல் உயிரிழந்தார்.

இது எப்படி இருக்கு...

தலைநகர் கொழும்பிலும் அதன் புறநகரப் பகுதிகளிலும் தமிழர்கள் தங்களது திருமணப் பதிவை தாய் மொழியிலேயே செய்து கொள்வதற்கு வசதியாக தமிழ் விவாகப் பதிவாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றார்கள். தங்களது மொழியில் அலுவல்களைச் செய்து கொள்வதில் தமிழர்கள் அனுபவிக்கக்கூடியதாக இருக்கும் ஒரு சில ஏற்பாடுகளில் இதுவும் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

53வது டிவிஷனே பொறுப்பு - ஹுமன் ரைட்ஸ் வாட்ச்

இசைப்பிரியா
இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக தற்போது வெளியான வீடியோவில் இருக்கும் பெண்ணை விடுதலைப் புலிகளின் தொலைக் காட்சியில் பணிபுரிந்த இசைப் பிரியா என்று தாம் அடையாளம் கண்டுள்ளதாக ஹூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியிருந்தது.

12வது மாடியில் இருந்து விழுந்த பெண் பிழைத்தார்

சீனாவின் ஷாங்டாங் பகுதியை சேர்ந்த பெண் ஜாவ் ஷி. வயது 26. சிங்கப்பூரில் ஒரு  கேளிக்கை விடுதியில் பணியாற்ற கடந்த மாதம் சிங்கப்பூர் வந்தார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முடிவு செய்தார்.

வீல்சேரில் வந்து திருடியவருக்கு 21 ஆண்டு சிறை (படம் இணைப்பு)

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் பீட்டர் லாரன்ஸ். வயது 71.  உடல்நலக் குறைவால் சக்கர நாற்காலியில் வாழ்க்கையை கழிப்பவர். ஆதரவற்ற இவர், சமீபத்தில்  அங்குள்ள வங்கி ஒன்றில் வீல்சேருடன் வேகமாக புகுந்தார். அசல் துப்பாக்கியை போன்றிருந்த  பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டினார். $2,000 கொள்ளை அடித்தார்.

நீண்ட நேரம் சைக்கிள் ஓட்டினால் ஆண்மை குறையலாம்

‘வாரத்தில் 5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டினால் ஆண்களின் விந்து வீரிய சக்தி  குறையும் அபாயம் உள்ளது’ என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சதாமின் கடைசி நிமிடங்கள் :விக்கிலீக்ஸ் அம்பலம்

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டபோது, கடைசி நேரத்தில் நடந்த சம்பவங்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
சதாம் உசேன் கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி தூக்கிலிடப்பட்டார். அப்போது நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி அனுப்பியுள்ளனர். அந்த தகவல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. 

பெண்கள் "வாயாடி" களாவது நல்லது !

பெண்களுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. ஏதேனும் சக தோழியைக் கண்டால் உற்சாகமான உரையாடலை சட்டென ஆரம்பித்து விடுகிறார்கள். கடைவீதி, அலுவலகம், ஆலயம் ஏன் சுட்டெரிக்கும் தார் ரோடு என்றால் கூட இந்த உரையாடல் தடைபடுவதில்லை.

ரஜனிகாந் பிறந்த நாள்

நடிகராகும் ஆவலுடன் சென்னை சென்ற ரஜினிகாந், ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.

பிரிட்டனுக்கு செல்லும் அரச தலைவர்கள் எதிர்நோக்கக் கூடிய நெருக்கடியான சட்டங்கள் நீக்கப்படவுள்ளதாக செய்தி

பிரிட்டனுக்கு செல்லும் அரச தலைவர்கள் எதிர்நோக்கக் கூடிய நெருக்கடியான சட்டங்கள் நீக்கப்படவுள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இறுதிப் போர் குறித்த சர்வதேச விசாரணைக்கு அமெரிக்க செனட்டர்கள் 19 பேர் வலியுறுத்து

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போதான போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு சுயாதீன, சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்பதை வலியுறுத்துமாறு இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனுக்கு அமெரிக்க செனட்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

இசைப்பிரியா கொல்லப்பட்டதற்கு இராணுவத்தின் 53 ஆவது டிவிஷன்தான் பொறுப்பு

இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் யுத்த குற்றங்கள் தொடர்பாக தற்போது வெளியான வீடியோவில் இருக்கும் பெண்ணை விடுதலைப் புலிகளின் தொலைக் காட்சியில் பணிபுரிந்த இசைப்பிரியா என்று தாம் அடையாளம் கண்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் கூறியிருந்தது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல