வெள்ளி, 29 நவம்பர், 2013

ஒரு ட்ரைவிலிருந்து இன்னொரு ட்ரைவிற்கு பைல்களை மாற்ற

மிக எளிதாக ஒரு ட்ரைவிலிருந்து இன்னொரு ட்ரைவிற்கு பைல்களை மாற்ற, விண்டோஸ் எக்ஸ்புளோரர் இரண்டு விண்டோவை திறந்து பயன்படுத்துகிறேன். ஆனால் ஒன்றுக்குப் பின் ஒன்று அமைந்துவிடுவதனால், ஒவ்வொரு பைலை இழுத்துவிடுகையிலும் சிக்கல் ஏற்படுகிறது. வேறு சுருக்கமான வழிகளில் இதனை மேற்கொள்ள முடியுமா?

விண்டோஸ் 7 தொகுப்பில் உள்ள ஆன் ஸ்கிரீன் கீ போர்டினை எப்படிக் கொண்டுவந்து இயக்குவது?

விண்டோஸ் 7 இயக்கத்தில் இது சற்று மேம்படுத்தப்பட்டுக் கிடைக்கிறது. ஸ்டார்ட் அழுத்திப் பின் சர்ச் பாக்ஸில் osk.exe என டைப் செய்து என்டர் அழுத்த ஆன் ஸ்கிரீன் கீ போர்டு கிடைக்கும்.

பயர்பாக்ஸ் ஷார்ட் கட் கீ தொகுப்புகள்

இணையத்தில் எளிதாகவும், வேகமாகவும் உலா வர கீழே தரப்பட்டுள்ள சுருக்கு வழிகள் நமக்கு அதிகம் பயன்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் நம் இணையப் பயணத்தில் நேரம் மிச்சமாவதுடன், நம் உழைப்பும் தேவையற்ற வகையில் செலவாகாது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கான விளக்கக் குறிப்புகள்

சிறு வயதிலிருந்து நாம் எதனையாவது கற்றுக் கொள்கிறோம் என்றால் படம் பார்த்து விளக்கம் பெற்றுத்தான் அதனை மனதில் இறுத்திக் கொள்வோம். கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கின்றன. அத்தனையும் ஒருவர் தன் வாழ்நாளில் கற்றுக் கொள்ள முடியாது. எனவே அவரவருக்கு எந்த பிரிவில் உதவி தேவைப்படுகிறதோ அதனை மட்டும் தேடிப் பிடித்து கற்றுக் கொள்கிறோம்.

வேர்டில் ஆபீஸ் அசிஸ்டன்ட்

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் புரோகிராம்களில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் பலரும் இதனைக் கவனமாகப் பார்த்திருக்க மாட்டீர்கள். ஒரு தாளில் பேப்பர் கிளிப் ஒன்று கண்ணாடி மாட்டிக் கொண்டு நீங்கள் தரும் கட்டளைக்காகக் காத்திருக்கும். இதுதான் ஆபீஸ் அசிஸ்டண்ட். ஆபீஸ் புரோகிராம் செயல்பாடு குறித்து ஏதேனும் உதவி வேண்டும் எனில் இதனைக் கிளிக் செய்து வரும் விண்டோவின் கட்டத்தில் உங்களுடைய சந்தேகத்தை அல்லது கேள்வியை டைப் செய்து தேடச் சொல்லலாம். உதவிக் குறிப்புகளும் வரிசையாகக் கிடைக்கும்.

இணையதளங்களில் ஹைலைட் செய்திடும் வயர்டு மார்க்கர்

வெப் பிரவுசர்களில், டெக்ஸ்ட் எடிட்டர்களில் இருப்பது போல, ஹைலைட் செய்வதற்கும், டெக்ஸ்ட்டைக் குறித்து வைப்பதற்கும் வசதிகள் இல்லை. இணைய தளங்கள் சிறிய அளவில் 500 முதல் 1000 சொற்களுக்குள் இருந்தால், இந்த தேவை எழாது. ஆனால் 200 பக்க இணைய தளம் ஒன்றை எண்ணிப் பாருங்கள். படித்துப் பார்க்கவும், படித்ததில் குறித்து வைத்ததைத் தேடிப் பார்க்கவும் சில நாட்கள் ஆகலாம்.

விண்டோஸ் 7 ரிப்பேர் டிஸ்க்

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், சிஸ்டம் ரிப்பேர் செய்திடும் டிஸ்க் ஒன்றை உருவாக்க வசதிகள் தரப்பட்டுள்ளன. எப்போதாவது, விண்டோஸ் இயக்கத்தினைத் தொடங்கிய பின்னர், அதனுள் நுழைந்து செயல்படுவது, சிரமமாக உள்ளதா? அந்த நேரத்தில் இந்த ரிப்பேர் டிஸ்க் உங்களுக்கு கைமருந்தாக உதவும். இதில் பலவகையான ஆப்பரேட்டிங் சிஸ்டம் பழுதுகளுக்குத் தீர்வு தரும் புரோகிராம்கள் பதியப்படும். இவை ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கின்றன. அல்லது ரெஸ்டோர் புரோகிராம் போல, முந்தைய நாள் ஒன்றில் இருந்த நிலைக்கு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கொண்டு செல்கின்றன.

பயன்படுத்தாத விண்டோக்களை மினிமைஸ் செய்திட...

பல்வேறு புரோகிராம்களைப் பயன்படுத்துகையில், பல விண்டோக்களத் திறந்து வைத்துக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோம். சில வேளைகளில் வெகுநேரம் பயன்படுத்தாமல் இருந்தாலும், அந்த விண்டோவினை மினிமைஸ் செய்திடாமல், அப்படியே வைத்திருப்போம். இந்த பயன்படுத்தாத விண்டோக்கள், நாம் மற்ற விண்டோக்களைக் கிளிக் செய்து பயன்படுத்துகையில் தொல்லை கொடுக்கலாம்.

சார்ட்டிங் செய்தால் பார்மட் மாறுமா? -- எக்ஸெல் டிப்ஸ்

எக்ஸெல் தொகுப்பில், டேட்டாக்களை வரிசைப்படுத்துகிறீர்கள். டேட்டாக்கள், நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் ஏற்றபடி, வரிசைப்படுத்தப் படுகின்றன. டேட்டாக்களுக்குத் தரப்பட்ட பார்மட்டிங் வழிகள் என்னவாகின்றன? சில பார்மட்டிங் செட்டிங்ஸ் அப்படியே புதிய இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சில மாற்றப்படுகின்றன. இப்படி மாற்றங்கள் இல்லாமல், வரிசைப்படுத்திய பின்னரும், பார்மட்டிங் அமைப்பும் எடுத்துச் செல்லப்படும் வகையில் எக்ஸெல் தொகுப்பில் செட் செய்திடலாம்.

வேர்ட் டிப்ஸ்

விண்டோஸ் 2007 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தரப்படும் வேர்ட்பேட் தொகுப்பில், ஓப்பன் ஆபீஸ் தொகுப்பில் உருவான, பைல்களைத் திறக்கவும், எடிட் செய்திடவும் முடியும். டாகுமென்ட் ஒன்றை உருவாக்கி, அதனை சேவ் செய்திடுகையில், பைல் பெயருக்கு அடுத்தபடியாக இருக்கும், கீழ்விரி மெனுவினைப் பார்க்கவும். இதில் பல பார்மட்கள் தரப்படுகின்றன. இதில் நீங்கள் விரும்பும் பார்மட்டில், டாகுமெண்ட்டினை சேவ் செய்திடலாம். ஓப்பன் ஆபீஸ் தொகுப்பின் பார்மட்டில் சேவ் செய்திட.odt என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான பார்மட்.docx என்பதாகும். இவ்வகையில் மட்டுமின்றி மேலும் பல வழிகளில் வேர்ட்பேட் 2007 மேம்படுத்தப்பட்டதாகக் கிடைக்கிறது.

எக்ஸெல் பங்சன்கள்

பங்சன் என்பது எக்ஸெல் தொகுப்பு ஏற்கனவே உருவாக்கிய பார்முலாவினைக் குறிக்கிறது. எக்ஸெல் தொகுப்பில் இது போல பல பார்முலாக்கள் உள்ளன. அவற்றை நேரடியாக நாம் பயன்படுத்தலாம். அத்தகைய பொதுவான பங்சன்களில் சிலவற்றை இங்கு காணலாம்.

மவுஸ் ஏன் ? எதற்காக ?

கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு நாம் அதிகம் நம்பி இருப்பது மவுஸ் சாதனத்தைத்தான். கம்ப்யூட்டருடனான நம் தொடர்பை பெரும்பாலான வேளைகளில் அமைப்பது மவுஸ்தான். சிறிய அம்புக்குறி போன்ற கர்சரை மானிட்டர் திரையில் உள்ள பைலில் கொண்டு சென்று நமக்குத் தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ள இது உதவுகிறது. இதற்கு மவுஸ் பட்டன்களை நாம் செயல்படுத்துகிறோம். இவற்றில் இடது பட்டன் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. இதனை அழுத்திக் கிளிக் செய்வதனையே ஆங்கிலத்தில் ‘leftclicking’ எனக் கூறுகின்றனர்.

வேர்ட் பேக் அப் வழிகள்

கம்ப்யூட்டரில் நாம் அதிகம் பயன்படுத்தும் வேர்ட் தொகுப்பு அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நாம் உருவாக்கிய ஆவணங்கள் மீண்டும் நமக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. நாம் என்ன திருத்தங்களை மேற்கொண்டோம் என்பது நினைவில் இருப்பதில்லை. அப்போதுதான், அடடா! இதற்கான இறுதி நிமிட பேக் அப் பைல் இருந்தால் நல்லது அல்லவா! என்று எண்ணுகிறோம். வேர்ட் இதற்கான வழிகளைக் கொண்டுள்ளது. நாம் தான் அதனை செட் செய்திட வேண்டும். அவை குறித்து இங்கு காணலாம்.

வேர்ட் தொகுப்பு இரண்டு வகையான பேக் அப் பைல் காப்பிகளை உருவாக்க வழி தருகிறது. முதலாவது பேக் அப், நீங்கள் குறிப்பிட்ட பைலில் ஏதேனும் மாற்றங்களை உருவாக்கும் முன் அமைக்கப்படுவது. இன்னொன்று குறிப்பிட்ட காலத்தில் ஏற்படுத்தப்படும் பேக் அப் காப்பி.

படங்களில் எழுத்துக்களைப் பதிக்கலாம்

பெரும்பாலானவர்கள், படங்களை வேர்ட் ஆவணங்களில் பதிக்கையில், அதன் மீது சொற்களுடன் பதிக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதற்கு வேர்ட் தொகுப்பினைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், போட்டோ ஷாப் தொகுப்பு, எளிதான வழிகளைத் தருகிறது. போட்டோ ஷாப் தொகுப்பிற்குப் பதிலாக, அதன் அண்மைக் கால புதிய தொகுப்புகளையும் பயன்படுத்தலாம். அத்தொகுப்புகளில் அதற்கான வழிகளை இங்கு காணலாம்.

ப்ரவுசர் ட்ரிக்ஸ் அண்ட் டிப்ஸ்

நாம் பயன்படுத்தும் அனைத்து பிரவுசர்களும், மேம்போக்காகத் தெரிவதைக் காட்டிலும், கூடுதலாகவே பல வசதிகளை நமக்குத் தருவதாய் அமைந்துள்ளன. நீங்கள் பயர்பாக்ஸ் நண்பராகவோ, அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பக்தராகவோ, குரோம் பிரவுசரின் தீவிர ரசிகராகவோ இருக்கலாம். அனைத்து பிரவுசர்களும் இந்த கூடுதல் வசதிகளைத் தருவதாகவே அமைந்துள்ளன. இங்கு அதற்கான டிப்ஸ்கள் தரப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்து வது உங்கள் கைகளில்தான் இருக்கின்றன. இந்த டிப்ஸ்களில் அறிமுகப்படுத்தப்படும் பல ஆட் ஆன் புரோகிராம்களும் இலவசமாகவும், எளிதில் பயன்படுத்தும் தன்மை கொண்டதாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பயர்பாக்ஸ் ரசிகர்களுக்கு மட்டும்:

அப்லோட் டவுண்லோடர்

இணையத்தில் பல தளங்கள், பைல்கள் ஸ்டோர் செய்வதற்கென செயல்படுகின்றன. இவற்றில் நம் விருப்பத்திற்கு ஏற்ப பைல்களை அப்லோட் செய்து வைத்து, அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். யு–ட்யூப் போன்ற தளங்களில், வீடியோக்களையும் அப்லோட் செய்து மகிழ்ச்சி அடையலாம். ஆனால் எந்த சாப்ட்வேர் புரோகிராமினையாவது டவுண்லோட் செய்திட வேண்டுமாயின்
நாம் சில தடைகளை அல்லது தாமதங்களை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது.

வேர்ட் டிப்ஸ்

சரியான அளவில் டேபிள் செல்கள்: வேர்டில் ஓர் அட்டவணையை அமைக்கும் போது எத்தனை வரிசை எத்தனை கட்டங்கள் என்று கம்ப்யூட்டர் கேட்கிறது. நாமும், நாம் அமைக்க இருக்கும் அட்டவணையில் தேவையான கட்டங்கள் மற்றும் வரிசைகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டவுடன், அட்டவணை குறிப்பிட்ட அளவில் அமைகிறது. அட்டவணையில் உள்ள கட்டங்களை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ மாற்றி அமைத்திட, ரூலரில் சென்று மவுஸ் இடது பக்கம் அழுத்தி இழுத்து மாற்றி அமைக்கிறோம். ரூலர் இருந்தாலும் கட்டம் ஒன்றின் அகலம் எவ்வளவு எனச் சரியாகத் தெரிவதில்லை. இத்தனை அங்குல அளவில் தான் அல்லது சென்டிமீட்டர் அளவில் தான் ஒரு கட்டம் இருக்க வேண்டும் என நாம் மிகத் துல்லிதமாக அமைக்க முடிவதில்லை. அவ்வாறு அமைத்திட சிறப்பான வழி ஒன்று உள்ளது. அளவுடன் அமைக்க வேண்டிய கட்டத்தில் கர்சரை நிறுத்திவிட்டு பின் மவுஸின் முனையை ரூலரில் கிடைக்கும் கட்டங்களின் முனையில் கொண்டு செல்க. இப்போது வெறுமனே மவுஸினை இழுக்காமல் ஆல்ட் கீயை அழுத்துக. இப்போது அந்த கட்டம் எவ்வளவு அங்குல அகலத்தில் இருக்கிறது எனக் காட்டப்படும். இனி உங்களுக்குத் தேவையான அகல அளவு கிடைக்கும் வரை மவுஸை அழுத்தியபடி நகர்த்தி கட்டத்தினை அமைத்திடலாம்.

Software ரகசியங்கள்

நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பல சாப்ட்வேர் தொகுப்புகளில், பல சொல்லப்படாத சுருக்கு வழிகள் தரப்பட்டுள்ளன. அது பிரவுசராக இருந்தாலும், அப்ளிகேஷன் தொகுப்புகளாக இருந்தாலும், அவற்றில் நாம் அறியாத, அடிக்கடி பயன்படுத்தாத, பல வழிகள் மறைந்துள்ளன. அவற்றை அறிந்து பயன்படுத்துவது நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை அதிகமாக்கும்.

விண்டோஸ் கீ: உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் அதி வேகத்தில் இயங்கினாலும், சில கீகளைப் பயன்படுத்தி, இன்னும் அதனைக் கூடுதல் வேகத்தில் இயக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களைப் பயன்படுத்தி, செயல்பாடுகளை மேற்கொண்டு பார்த்தால் இதன் உண்மை விளங்கும்.
சிஸ்டம் தகவல்கள் அறிய: உங்களுடைய சிஸ்டம் குறித்த தகவல்களை உடனே அறிய, Windows மற்றும் Pause கீகளை அழுத்துங்கள். உடன் சிஸ்டம் குறித்த சிஸ்டம் ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ காட்டப்படும்.

குழந்தைக்கான பால்மாவில் 2 அங்குல ஊசி

பிரித்­தா­னி­யாவை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு செயற்­படும் உலக பிர­பல குழந்­தை­க­ளுக்­கான பால்மா உற்­பத்தி நிறு­வ­னத்தால் உற்­பத்தி செய்­யப்­பட்ட குழந்­தை­க­ளுக்­கான பால்­மாவை வாங்­கிய தாயொ­ருவர் அத­னுள்ளே 2 அங்­குள்ள நீள­மான ஊசி­யொன்று இருப்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்ளார்.

நாய்கள் குரைத்தால் இயங்கும் சலவை இயந்திரம் (படங்கள் இணைப்பு)

விசேட தேவையுள்ளவர்களுக்கு உதவும் முகமாக அவர்களது நாய் குரைக்கும்போது செயற்படும் சலவை இயந்திரமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிளாஷ் ட்ரைவ் பயன்படுத்துவது எப்படி ?

முதலில் உங்கள் டெஸ்க் டாப் சென்று அதில் மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடவும். அந்த போல்டர் திறந்தவுடன் அப்படியே அதனை விட்டுவிட்டு அடுத்த ஸ்டெப் செல்லவும். அடுத்தபடியாக பிளாஷ் டிரைவிற்கான யு.எஸ்.பி. போர்ட்டில் ட்ரைவினைச் செருகவும். நீங்கள் விஸ்டா, விண்டோஸ் 7, விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவராக இருந்தால் பிளாஷ் ட்ரைவினை இயக்க அதற்கான ட்ரைவர் எதனையும் இயக்கிச் சேர்க்க வேண்டியதில்லை.

ட்ரைவினைச் செருகிவிட்டு திரையைப் பார்க்கவும்.

கம்ப்யூட்டர் சாவியாக யு.எஸ்.பி. ஸ்டிக்

நீங்கள் பணியாற்றும் சூழ்நிலை மிகவும் கும்பலான இடமாக இருந்து, உங்கள் கம்ப்யூட்டரில் வேறு யாரேனும் உட்புகுந்து இயக்கிவிடுவார்கள் என்று அஞ்சுகிறீர்களா? கம்ப்யூட்டரை எப்படி பூட்டிச் செல்வது? லாக் ஆப் செய்திடாமல் எப்படி இதனைப் பாதுகாப்பாக வைப்பது? என்ற கேள்விகளுக்குப் பதிலாக பிரிடேட்டர் (Predator) என்னும் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதனை ஒரு யு.எஸ்.பி. ஸ்டிக்கில் பதிந்து வைத்து, அந்த ஸ்டிக்கை, உங்கள் கம்ப்யூட்டருக்கான சாவியாகப் பயன்படுத்தலாம். இதனை எப்படி செயல்படுத்துவது எனப் பார்க்கலாம்.

ஹைபன்களும் டேஷ்களும்

வேர்டில் நமக்குப் பலவகை சிறு இடைக்கோடுகள் கிடைக்கின்றன. ஆங்கிலத்தில் ஹைபன், டேஷ் (Predator) என இவற்றை அழைக்கின்றோம். இவற்றிலும் சில வகைகள் இருக்கின்றன. வேர்ட் தொகுப்பினைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் கூட, இந்த வேறுபாட்டினை உணராமல், தேவைப்படும் கோடு இல்லாமல், எதனை வேண்டுமானாலும் பயன்படுத்தி வருகின்றனர். இவை குறித்து இங்கு காணலாம். வேர்ட் நமக்கு மூன்று வகையான ஹைபன்களையும், இரண்டு வகையான டேஷ் கோடுகளையும் தருகிறது. இவற்றில் உள்ள வேறுபாட்டினை அறிந்து கொண்டால், இவை அனைத்தையும் சிறப்பாகப் பயன்படுத்த முடியும்.

தொல்லை தரும் டச் பேட்

லேப்டாப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு பெரிய தலைவலியாய் இருப்பது, அதில் இயங்கும் டச் பேட் தான். கீ போர்டில் விரல்களை நகர்த்துகையில் பெருவிரலோ அல்லது உள்ளங்கையோ, டச் பேடில் பட்டுவிட்டால், கர்சர் இடம் மாறிச் சென்று, நாம் டைப் செய்வதனை வைக்கக் கூடாத இடத்தில் சேர்த்துக் கொண்டிருக்கும். வேலையை நிறுத்தி, எந்த எழுத்தில் இருந்து இந்த வேதனை என்று பார்த்து, அதனை அழித்துப் பின் மீண்டும் பழைய இடத்திற்குக் கர்சரைக் கொண்டு வந்து இயங்க வேண்டும். இந்த பிரச்னை வராமல் இருக்க, ஒரு சிலர் உள்ளங்கைகளைச் சற்று தூக்கிப் பிடித்தவாறே கீ போர்டில் டைப் செய்வதனைப் பார்க்கலாம். இது மிகவும் மோசமான விளைவினைத் தரும். தொடர்ந்து வலி உண்டாகும்.

கீ போர்டு / மவுஸ் லாக்

பல வேளைகளில் நாம் நம் கீ போர்டு, எந்த கீயைத் தொட்டாலும் செயல்படக் கூடாது என விரும்புவோம். எடுத்துக் காட்டாக, சிறிய திரைப்படம் ஒன்றை வெகு சுவராஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்போது நம்மைச் சுற்றி விளையாடும் குழந்தைகள், நம் அருகே வந்து, திரைப்படத்தையும் ரசனையோடு பார்பார்கள். அத்துடன் ஆர்வக் கோளாறில் ஏதேனும் ஒரு கீயை அழுத்துவார்கள். இதனால் படம் இயங்குவது நின்று போகலாம்.

பெரிய பட்ஜெட்.. பெரிய இழப்பு : சிந்திக்குமா சினிமா...!!

சினிமா என்பது கலை என்பது உண்மைதான். நடிகர்களும், இயக்குனர்களும் நாங்கள் கலைச்சேவை செய்ய வந்திருக்கிறோம் என்றும் சொல்லலாம். ஆனால் சினிமா தயாரிக்க வருகிறவர்கள் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் பணம்போட்டு லாபம் எடுக்கத்தான் வருகிறார்கள். அதுதான் உண்மை. சும்மா மேடையில் வேண்டுமானால் நாங்கள் கலைச்சேவை செய்ய வந்திருக்கிறோம் என்று சொல்லிக்கலாம்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல