திதி, அமாவாசை தினத்தில் காக்கைகளுக்கு உணவிடுவதன் மூலம் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர் என்பது ஐதீகம். எனவேதான் அமாவாசை நாளில் காகத்திற்கு உணவு படைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.