ரம்சான் அலி ஷாவும் மனைவி நஸ்மாவும் உரிமை கோருகிறார்கள்!
சில தினங்களுக்கு முன்னம் வெளியான ''காட்டில் குரங்குகளுடன் வாழ்ந்த சிறுமியும் சில மர்மங்களும்!'' என்ற தலைப்பிலான செய்தி வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். வன இலாகா அதிகாரிகளினாலும் காவல்துறையினராலும் காட்டில் குரங்குகளுடன் குரங்காக வாழ்ந்து கொண்டிருந்த அந்தச் சிறுமி பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது அந்தச் செய்தியின் சாராம்சம்.


