வியாழன், 7 ஏப்ரல், 2016

'நலமாக இருக்கிறாரா விஜயகாந்த்?' -நெருக்கடியிலும் தலைகாட்டாத மர்மம்

மிகவும் சோதனையான காலகட்டத்தில் இருக்கிறது தே.மு.தி.க. சட்டமன்றத்தின் தே.மு.தி.கவின் முகமாக ஆளுங்கட்சியை அதிர வைத்த சந்திரகுமார், இப்போது விஜயகாந்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறார்.

புலிகளின் மீது புழுதி வாரித் தூற்றும் அந்த கூர்வாளின் நிழல்!

’ஒரு கூர்வாளின் நிழலில்’ புத்தக ஆசிரியரான புலிகளின் மகளிரணித் தலைவி தமிழினி, புத்தகம் சொல்லும் செய்தி மற்றும் கருத்துக்களை தன் வரலாறு என்று தலைப்பிட்டிருந்தாலும், அவர் போராளியாக இருந்த 18 ஆண்டு கால இயக்கத்தின் வரலாற்றையே அதிகம் பேசிச் சென்றிருக்கிறார்.

இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்- பாகம் -2

 “குட்டைகளிலிருந்தும், மணற்குன்றுகளிலிருந்து இழுத்துவரப்பட்ட விடுதலைப்புலிகளின் உடல்கள்!!

பொன்சேகா பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தாபய ராஜபக்சக்குப் பிரபாகரன் உடல் கண்டெடுக்கப்பட்டுவிட்டதைத் தெரிவித்தார். கோத்தாபய பொன்சேகாவின் சக அதிகாரியாயிருந்தவர்தான்.

ஆனால் இப்போது அவரது மேலதிகாரி. அது மட்டுமல்ல, இலங்கையிலேயே மிகுந்த அதிகாரமுடையவராகவும் விளங்கினார் அவர். பிரபாகரன் அளவுக்கே உறுதியுடன், அவரைப் போன்றே ஈவிரக்கமில்லாமல் செயல்படக்கூடியவர் ஒருவர் சிங்களத் தரப்பில் இருந்தார் என்றால் அது கோத்தாபயதான்.

இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்-பகுதி-1

 புலிகளின் தலைவர் பிரபாகரனின் கடைசி நாள்!! :

2009 மே 19, காலை. பனிப்படலம் நீங்குகிறது. இன்னமும் சூடாகவேயிருக்கும் யுத்தபூமி. வீரர் ஒருவர் குனிந்து குப்புற விழுந்து கிடந்த உடலை, முகத்தைப் பார்க்க வேண்டுமென்பதற்காகத் திருப்புகிறார்.

அது ஒரு சதுப்பு நிலம். உடல்கள் ஒட்டிக்கொண்டிருக்கும். எனவே தோள்களைச் சற்று இறுக்கமாகப் பிடித்துத்தான் திருப்ப வேண்டும்.

தமிழினி வாழ்க்கை பற்றி ‘கச்சான் விற்று பிழைப்பு’ நடத்தும் தமிழினியின் தாய் சின்னம்மா வழங்கிய சிறப்பு பேட்டி ( நிறைந்த சோகம்)

தமிழினி உயிரோடு இருக்கும் போது எதுவும் செய்யாதவர்கள் இனி செய்து என்ன பயன்? அவ இருக்கும்போது யாரும் வந்து பார்த்து எதுவும் செய்யவில்லை.
நாட்டுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த பிள்ளை நாங்கள் நல்லா இருக்க வேணும் என்று நினைச்ச போது யாரும் அதுக்கு உதவவில்லை.

தமிழியின் “ஒரு கூர்வாளின் நிழலில்“: “கள்ள இன்பம்“ தேடும் தமிழ்த்தேசியவாதிகள்!

இத்தனை பெரிய போராட்டத்தை நடத்தியும் ஏன் அது தோல்வியில் முடிந்தது? இவ்வளவு இழப்புகளும் ஏன் மதிப்பற்றுப் போயின? போராட்டத்தில் என்ன நடந்தது? யார் இதற்கெல்லாம் பொறுப்பாளிகள்?

மிகக் கடினமான ஒரு போராட்டத்துக்காக அதிகளவில் இழப்புகளைச் சந்தித்த மக்கள், ஏன் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் பதிலாக தோல்வியையும் துயரத்தையும் பெற்றார்கள்?

தமிழினியின் தங்கை ‘சந்தியா’ கிளிநொச்சியில் நடந்த சண்டையில் உயிரிழப்பு!!: (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து..- (பாகம் 7)


கொல்லர் புளியங்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த எமது முகாம் புதுக்குடியிருப்புக்கு மாற்றப்பட்டது. இயக்கத்தின் அனைத்துக் கட்டமைப்புகளும் புதுக்குடியிருப்பை மையப் படுத்தியே அமைக்கப்பட்டன.

இலங்கை இராணுவத்தினர் ஒருபோதும் புதுக்குடியிருப்பை நெருங்க மாட்டார்கள் என்ற ஒரு காரணமற்ற நம்பிக்கை, தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்துப் போராளிகளிடமும் இருந்தது.

‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம்!! (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)

தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் என்கிற கனவு எங்களுக்குள்ளே ஆழமாக இருந்தது.

அக்கனவே எமது மக்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கான எமது சமாதானமாகவும் அமைந்தது. அரசியல்துறையினால் மக்கள் மத்தியில் பல வேலைத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல