வெள்ளி, 20 மார்ச், 2015
பிரபாகரன் போரில் இறக்கவில்லை – சனல் 4 இயக்குனர் அதிர்ச்சி தகவல்-!
போரில் பிரபாகரன் இறக்கவில்லை எனவும், அருகிலிருந்து பிரபாகரன் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டு மரண தண்டணை நிறைவேற்றப்பட்டதாக “சனல் 4 ” இயக்குனர் கலம் மக்ரே அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். (கடைசிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு பிரபாகரன் இறந்ததாக ஏற்கனவே செய்திகள் கசிந்திருந்தன. இதை உறுதிப்படுத்துவதாகவே “சனல் 4 ” இயக்குனர் கலம் மக்ரே வழங்கிய செவ்வி அமைந்துள்ளது.) பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 இல் மூன்று பகுதிகளாக வெளியான ‘No Fire Zone’ என்ற ஆவணப்படம் மட்டுமே இலங்கையில் நடைபெற்ற இனவழிப்பின் உறுதியான ஆதரமாகத் திகழ்கிறது. நீண்ட முயற்சிகளுக்கு மத்தியில் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணப்படத்தின் இயக்குனர் கலம் மக்ரே.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



