ஞாயிறு, 5 ஜூலை, 2015

உங்­க­ளுக்கு வியாழ மாற்றம் எப்­படி அமையும்?

ஜாதக கிரக நிலையில் ஒரு­வரின் ஆளு­மைத்­தி­ற­னுக்கும் உயர்ந்த ஆய்வு நிலைக்கும், சமூக அந்­தஸ்­து­டைய கெள­ர­வ­மான வாழ்­விற்கும் முக்­கிய கார­ணி­யாக அமை­பவர் பிர­கஸ்­பதி எனப்­படும். குரு­ப­கவான். இவர் வரு­டத்­திற்கு ஒரு முறை ஒவ்­வொரு ராசி­யாக சஞ்­சாரம் செய்­பவர். அதன் மூல­மாக பன்­னிரு ராசி­க­ளுக்கும், பலா­ப­லன்கள் நன்மை, தீமை என அமை­வ­துண்டு. அந்த வகையில். வாக்­கிய பஞ்­சாங்க கணி­தப்­படி நேற்று ஞாயிறு பின்­னி­ரவு 11 மணி 41 நிமிட நேர­ம­ளவில் கட­க­ரா­சியில் இருந்து தனது நட்பு வீடான சிம்­ம­ரா­சிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். இந்தப் பெயர்ச்­சியின் மூலம் நல்ல அதிர்ஷ்டம், சுமா­ரான பலன், மத்­திம பலன் என பலா­ப­லன்கள் ஏற்­படும்.

தாடி, மீசை­யுடன் தோன்­றிய மணப்பெண் அழகு விதி­க­ளுக்கு சவால் விடுக்கும் புகைப்­ப­டங்கள் (படங்கள் இணைப்பு)

முகத்தில் ஆண்­களைப் போன்று முடி வளரும் விநோத பாதிப்­புக்­குள்­ளான பெண்­ணொ­ருவர் மணப்பெண் அலங்­கார புகைப்­ப­டங்­க­ளுக்­காக காட்­சி­ய­ளித்து பொது­வான அழகு விதி­க­ளுக்கு சவால் விடுத்­துள்ளார்.

பூனைகள் தமது சிறு­நீ­ரி­லுள்ள இர­சா­ய­னங்கள் மூலம் எலி­களைக் கட்­டுப்­ப­டுத்­து­கின்­றன ரஷ்ய ஆய்­வா­ளர்கள்

அதி வேக­மாக தப்­பி­யோடும் எலி­களை எவ்­வாறு பூனை­க­ளுக்கு மட்டும் பிடிப்­பது சாத்­தி­ய­மா­கி­றது என்ற மர்­மத்­திற்கு விடை கண்­டு­பி­டித்­துள்­ள­தாக ரஷ்ய ஆய்­வா­ளர்கள் உரிமை கோரி­யுள்­ளனர்.

மகனைக் காணாது அழுது புலம்பும் சொறிக்கல்முனை ஏழைத்தாயார் - தேடிக்­கண்­டு­பி­டித்­து­த்­த­ரு­மாறு உருக்­க­மான வேண்­டுகோள் விடுக்­கின்றார்

தனது ஒரே மகன் இந்­தியா சென்று ஐம்­பது நாட்­க­ளா­கியும் இன்னும் எது­வித தக­வ­லு­மில்­லாமல் அன­லி­டைப்­பட்ட மெழுகு போல் வெந்து புலம்­பு­கிறார் ஓர் ஏழைத்­தாயார்.

இச்­சம்­பவம் அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள சொறிக்­கல்­முனைக் கிரா­மத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

கணேஷ் கபிலன் எனும் 23வயது இளை­ஞனே இவ்­விதம் காணா­மல்­போ­யுள்ளார்.

ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் - சரவணா ஸ்டோர்ஸ்

சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம்.

‘‘எந்த ஊர் நீங்க?’’

‘‘திருவண்ணாமலை பக்கம்..’’

தினமும் 50 இராணுவ வீரர்களுடன் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தினர் (படங்கள் இணைப்பு)

இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப்பட்டவரின் கண்ணீர் கதை

இரண்டாம் உல­கப்­போரின் போது தினமும் 50 ஜப்­பா­னிய இராணுவ வீரர்­க­ளுடன் உறவு வைத்­துக்­கொள்ள கட்­டா­யப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக பாலியல் அடி­மை­யாக நடத்­தப்­பட்ட மூதாட்டி ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

தலைவலியை குணமாக்கும் மிளகு

உடலின் நோய் எதிர்ப்பு சக்­தியை அதி­க­ரிக்கும் மிளகு, நமக்கு ஆரோக்­கிய வாழ்க்­கையை வழங்­கு­கி­றது.

அன்­றாட வாழ்வில் சேர்த்துக் கொள்­ளக்­கூ­டிய மருத்­துவ குணங்கள் நிறைந்த பொருள் தான் மிளகு.

சாதாரண கண் பார்வை - டயபெடிக் ரெட்டினோபதி தாக்கிய கண் பார்வை

நீரிழிவால் இன்று பலருக்கும் டயபெடிக் ரெட்டினோபதி ஏற்படுகிறது. இங்கு, டயபெடிக் ரெட்டினோபதி மற்றும் அதற்கான சிகிச்சை முறைகள் பற்றி விளக்குகிறார், நேத்ரா கண் மற்றும் விழித்திரை சிறப்பு சிகிச்சை மருத்துவமனையின் டொக்டர். தீபா, M.S., DNB., FRVS., FAICO (VR).,

கடன் கொடுத்­தோரைக் கலங்­க­டிக்கும் கிரேக்கம்

1991ஆம் ஆண்டில் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திலும் 2001ஆம் ஆண்டில் யூரோ நாணயக் கட்­ட­மைப்­பிலும் கிரேக்கம் இணைந்து கொண்­டது. தற்­போது ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் 28 நாடு­களும் நாணயக் கட்­ட­மைப்பில் 19 நாடு­களும் இருக்­கின்­றன. இரண்­டிலும் இணை­யும்­போது கிரேக்கம் தனது பொரு­ளா­தாரம் தொடர்­பான தக­வல்­களைத் திரித்துக் கூறி­யி­ருந்­தது என்ற குற்­றச்­சாட்டும் உண்டு.

வயிற்றுப்பசிக்கு விலைபோகும் மாதர்கள்

வந்த புதிதில் எனக்கு இங்­குள்ள வேலை­களைச் செய்ய அரு­வ­ருப்­பா­கவும் இருந்­தது. ஆண்களின் உடலை என் கைகளால் தீண்டும் போது என் கைகள் கூசி­ன. ஆயினும், நாள­டைவில் அந்த சூழலுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்துக் கொண்டேன்

''ட்டி எட்டின வரை பாயும், பணம் பாதாளம் மட்டும் பாயும்'' என்­பார்கள். அந்­த­வ­கையில் கடந்த வாரங்­களில் 'குற்றம்' பகு­தியில் பணத்­துக்­காக எதையும் செய்யத் துணிந்த பண­வெ­றி­யர்­களை பற்றிப் பார்த்­தி­ருந்தோம். ஆனால், இவை­யெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மறு­பக்கம் தமது அன்­றாட வாழ்க்­கையைக் கொண்டு நடாத்­தவே பணம் இன்றி வாழ்க்கைச் சுமையால் வாட்­ட­முற்று இன்­ன­லுடன் வாழ்­ப­வர்கள் பலர். இவர்கள் வறு­மையின் பிடியில் சிக்கி சின்­னா­பின்­ன­மாகி இறு­தியில் தனக்­கென்று விதிக்­கப்­பட்ட பண்­பா­டு­க­ளையும், கலா­சா­ரங்­க­ளையும் தகர்த்­தெ­றிந்து, உணர்­வு­க­ளுக்கு விலங்­கிட்டு தமது அங்­கங்­க­ளுக்கு ஒரு விலை கொடுக்க ஆரம்­பித்து விடு­கின்­றார்கள்.

உளச்­சோர்வு – உத­வி­யின்றேல் உயிர்­கொல்லும்

“என்ன சோர்ந்­துபோய் இருக்­கிறாய்”, முகத்தில் ஈ ஆட­வில்லை”, “முகம் காய்ஞ்சு போய் இருக்கு” “முன்­புபோல் உஷா­ராக இல்லை”, இது­போன்ற வச­னங்­களை நாம் அன்­றாட வாழ்வில் எமது உற­வி­னர்கள், நண்­பர்கள், மாண­வர்கள் போன்­றோரை காணும் போது பயன்­ப­டுத்­து­கிறோம். முகம் அதன் தோற்றம் எமது மனதின் பல்­வேறு விம்­பங்­களை எடுத்­துக்­காட்­டு­கின்­றது. முகத்தில் ஏற்­படும் மாற்­றங்கள் எமது சிந்­தனை, செயல், நடத்­தை­களில் வெளிக்­காட்டப் படுகின்றன. மேலே குறிப்­பிட்ட வச­னங்­களை உங்­க­ளிற்கு நன்­றாக தெரிந்த ஒரு­வரில் பிர­யோ­கிக்க வேண்டி ஏற்­பட்டால், இவ­ரிற்கு “உளச்­சோர்வு” நோய் இருக்­குமோ? என்ற அடுத்த சந்­தே­கத்தை தீர்க்க உங்­க­ளிற்கு இக்­கட்­டுரை உதவி செய்யும்.

ஒரு தொழிற்­சங்க ஊழி­யனின் குமுறல்

மலையக நக­ரங்­களில் ஏதா­வது ஓரி­டத்தில் நீங்கள் வழுக்கி விழுந்தால் அவ்­வி­டத்தில் நிச்­சயம் ஒரு சாராய தவ­றணை இருக்கும். அல்­லது ஒரு தொழிற்­சங்க காரி­யா­லயம் இருக்கும். சாராயத் தவ­றணை, தொழிற்­சங்க காரி­யா­லயம் ஆகிய இரண்­டுக்­கும் இடையில் பல ஒற்­று­மைகள் இருக்­கின்­றன. இவை இரண்­டுமே தொழி­லா­ளர்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்க்கக் கூடியவை என்­றொரு மயக்கம் பர­வ­லா­கவே உள்­ளது.

பரீட்சையில் வெற்றிபெற மூச்சுப் பிடித்து படிப்பது எப்படி?

ஒருவர் உயி­ருடன் இருக்­கிறார் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வது அவ­ரது சுவாச ஓட்­ட­மாகும். “மூச்­சுப்­போனால் எல்லாம் போச்சு" என்­பார்கள். “இறுதி மூச்­சு­வரை இதை நான் மறக்­க­மாட்டேன்" என்றும் சொல்­வார்கள். மூச்சை அடக்­கியும் கட்­டுப்­டுத்­தி­யுமே பெரிய முனி­வர்கள், யோகிகள் செயற்­கரும் செயல்­களைச் செய்­துள்­ளார்கள். நீண்­ட­காலம் வாழ்ந்­துள்­ளார்கள். எமது மூச்­சுக்­காற்று நாம் உறங்­கும்­போதும் இயங்­கிக்­கொண்டே இருக்­கின்­றது.

காணாமல் போய்க்­கொண்­டி­ருக்கும் சீன பெருஞ்­சுவர்! (படங்கள் இனைப்பு)

மக்கள் அக்­க­றை­யின்றி செங்­கற்­களை திருடிக் கொண்டு போவதால் சீன பெருஞ்­சு­வரின் 30 சத­வீத பகுதி சேத­ம­டைந்து விட்­ட­தாக ஆய்வில் தெரிய வந்­துள்­ளது.

கரும்புள்ளிகளை நீக்கும் உப்பு

உணவின் சுவையை அதிகரிக்க உதவும் உப்பு, அழகு பராமரிப்பிலும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதுவும் பலரது முகத்தில் அழகைக் கெடுக்கும் வண்ணம் இருக்கும் சொரசொரப்பான கரும்புள்ளிகளை நீக்க உப்பு பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால், பலருக்கும் உப்பைக் கொண்டு எப்படி கரும்புள்ளிகளை நீக்குவது என்பது தெரியாது.

வெளிநாட்டு பயங்கரவாதிகளாக பட்டியல் இடப்பட்டுள்ள சில தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்குதல் - பாகம் -3

பாகம் - 3

உலகத் தமிழர் பேரவை

பிரதானமாக பிதா.இமானுவலின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டுதல் காரணமாக உலகத் தமிழர் பேரவை பெரிய அளவிலான அங்கீகாரம் மற்றும் செல்வாக்கு என்பனவற்றை பல மேற்கத்தைய நாடுகளுக்கிடையில் பெற்றிருந்தது. உலகத் தமிழர் பேரவை, பல மேற்கு நாடுகளின் அரசாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற அங்கத்தவர்கள், உயர் மட்ட நிருவாகத்தவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் போன்றவர்களுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளது. ஏற்றுக் கொள்ளத்தக்க அரசியல் தீர்வை காண்பதற்காக கொழும்பு அரசாங்கத்தின் மீது சர்வதேச அழுத்தங்களை பிரயோகிக்க உதவுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் அதேவேளை, ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் யுத்தக் குற்றங்களுக்கு ராஜபக்ஸ ஆட்சியினரை பொறுப்பு கூற வைப்பதற்காக மேற்கொள்ளப்படும் சர்வதேச முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக உலகத் தமிழர் பேரவை அறிவித்துள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல