சனி, 21 நவம்பர், 2015

யாழ் சாரங்கா நகைமாடக் கட்டடத்தில் விபச்சாரம்! இளைஞர்கள் சுற்றிவளைப்பு

யாழ் இந்துக்கல்லுாரிக்கு அருகில் உள்ள கட்டத்தில் இடம்பெற்று வந்த விபச்சார நடவடிக்கைகளுக்கு இன்று இளைஞர்களால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

யாழ் சாரங்கா நகைமாட உரிமையாளருக்குச் சொந்தமான கட்டடத்திலேயே இந்த விபச்சார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது.

8 புலம்பெயர் அமைப்புகள், 269 தனிநபர்கள் மீதான தடையை நீக்கியது இலங்கை

எட்டு புலம்பெயர் அமைப்புகள் மற்றும், 269 தனிநபர்கள் மீதான தடைகளை சிறிலங்கா அரசாங்கம் நீக்கியுள்ளது. இது தொடர்பான திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சியினால் வெளியிடப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவியில் இருந்த போது, 16 புலம்பெயர் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களை பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று வர்த்தமானி மூலம் பிரகடனம் செய்திருந்தது.

ஆடத்தொடங்கியிருக்கும் அத்திவாரம் !!!

உலகம் பூராகவும் பெரும் பரபரப்பு.
இங்கு நான் உலகம் என்பது ஈழத்தமிழ் உலகத்தை,
அண்மையில் வெளிவந்த அஜித்தின் ‘வேதாளத்திற்கு’ நிகராக,
சுமந்திரனுக்கு முதலமைச்சர் எழுதிய பதிலறிக்கை,
ஈழத்தமிழுலகம் எங்கும் பரபரப்பாய்ப் பேசப்படுகிறது.
‘குடுத்தார் பார் ஒரு குடுவை’,
‘உடஞ்ச மூக்கைத் தேடுறார் சுமந்திரன்’,
‘மனுசன் சொன்னது அத்தனையும் சரி’,
இப்படியாய்க் கட்சி பிரிந்து முதலமைச்சருக்கு வால் முறுக்குவோர் சிலர்,
கொண்டாடிக் குதூகலிக்கின்றனர்.
நல்லவேளையாக சுமந்திரன் குழுவினரிடமிருந்து,
இன்னும் பதில் அஸ்திரப்பிரயோகம் எதையும் காணவில்லை.
அதனால் சண்டை உச்சத்தைத் தொட்டு அப்படியே நிற்கிறது.
ஆனால் இது தொடரப்போவது மட்டும் உறுதி.
⋇⋇⋇

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல