சனி, 14 டிசம்பர், 2013

ரஜினியை பிச்சைக்காரர் என்று நினைத்து ரூ.10 கொடுத்த பெண்!

ரஜினிகாந்தை கோவிலில் பார்த்த பெண் ஒருவர் அவரது எளிமையான உடையைப் பார்த்து அவர் பிச்சைக்காரர் என்று நினைத்து 10 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.

பேய் ரயில்......


உலக நாடுகள் ஆளில்லா விண்கலம் ஆளில்லா விமானம் போன்றவற்றை கண்டுபிடித்துள்ளதன் வரிசையில் இலங்கை சாரதியில்லா ரயிலை பரீட்சித்துப் பார்த்துள்ளது.

கடந்த 5 ஆம் திகதி பதிவான சாரதியின்றி பயணித்த ரயில் என்ஞின் தொடர்பான செய்திக்கு வாசகர் ஒருவர் கொடுத்திருந்த பின்னூட்டலே அது.

கறுப்பு சூரியனின் அஸ்தமனத்தால்...

''இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது. நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்'' விடுதலையின் பின்னர் மண்டேலா கூறியது

உலகம் முழு­வ­தையும் மண்­டேலா என்ற வார்த்­தையை உச்­ச­ரிக்க வைத்­து­விட்டு உலக ஜன­நா­ய­கத்தின் தந்­தை­யான நெல்சன் மண்­டேலா தனது இறுதிப் பய­ணத்தை ஆரம்­பித்­து­விட்டார். உல­கையே சோகத்தில் ஆழ்த்­திய மனி­த­நே­ய­மிக்க இந்த மாபெரும் மனி­தனின் இறுதிக் கிரி­யைகள் நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை தென்­னா­பி­ரிக்­காவில் அன்னார் பிறந்த இட­மான குலு என்ற இடத்தில் அரச மரி­யா­தை­யுடன் பாரம்­ப­ரிய முறைப்­படி நடை­பெ­ற­வுள்­ளது.

மாமனிதர் நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கைப்பதிவுகளிலிருந்து சில துளிகள்...

மக்களின் சுதந்திரத்துக்காக, நல்வாழ்வுக்காகப் பெரும் தியாகங்கள் செய்து, ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள எல்லா வழிமுறைகளையும் கையாளும் தலைவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் மண்டேலா. அவர் உயிருடன் இருக்கும்வரை பதவியில் தொடர்ந்திருக்க முடியும் என்றாலும், இரண்டாம் முறையாகத் தேர்தலில் நிற்க மறுத்துவிட்டார். இதுவே இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு உட்பட உலக நாடுகள் பலவற்றின் உயர்ந்தபட்ச விருதுகள் (203) குவிவதற்கு காரணமாக அமைந்தது.

கைக்கெட்டிய மீன் குழம்பும் எட்டாமல் போன காதலியும்

புத்தன், யேசு வரிசையில் பலர்.... இவர்கள் அனைவரும் தெய்வங்களே, இருந்தும் இம் மண்ணில் மனிதர்களாக அவதரித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து அதன் பிறகே மண்ணுலகை விட்டு பிரிந்தவர்கள்... அதாவது மண்ணுலகில் இவர்கள் மக்களோடு சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையே பின்னாளில் இவர்கள் தெய்வங்களாக வழிபடக் காரணமாயிற்று. இது வரலாற்றுக் கதைகளே!

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல