திங்கள், 10 ஜனவரி, 2011

மனைவியரால் கணவர்களுக்கு வந்த ஆபத்து

பொலிஸ் துறையில் பணியாற்றும் தங்கள் கணவர்களின் அலுவலக உடைகளை அணிந்து ஆபாசமாகப் புகைப்படம் எடுத்தது மட்டுமல்லாமல் அதனை பேஸ்புக்கில் அவர்களின் மனைவியர் தரவேற்றம் செய்துள்ளனர். அக்குற்றச்சாட்டுக்காக கணவர்களைப் பதவியிலிருந்து நீக்கியுள்ள சம்பவம் ரோமானியாவில் இடம்பெற்றுள்ளது.

மார்ச் முதல் பேஸ்புக் சேவை நிறுத்தப்படப்போவதாக வதந்தி

கடந்த சில தினங்களாக பேஸ்புக்கானது தனது சேவையை நிறுத்திக்கொள்ளப்போகின்றது என்ற செய்தி வேகமாக பரவிவந்தது.

யேசுதாஸின் பிறந்த நாள்

கட்டசேரி யோசஃப் யேசுதாஸ் அல்லது பரவலாக கே.ஜே.யேசுதாஸ் என்று அழைக்கப்படுபவர் ஓர் இந்திய கருநாடக இசைக் கலைஞரும் புகழ்பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார். அவர் தமது 50 ஆண்டுகள் திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமசுகிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி,அராபிய மொழி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 40,000கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்.

ஒரு எலியைப் பிடிக்க அறுபது எலிப் பொறிகள் வைத்து தேடும் அமெரிக்கா

கதிர்வீச்சுத் தாக்கத்துக்குள்ளான ஒரு எலியைப் பிடிக்க அறுபது எலிப் பொறிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அதிசயம் வேறு எங்குமல்ல உலக மகா வல்லரசு நாடான அமெரிக்காவில்தான்.

அமெரிக்காவில் உள்ள அணு உலை ஒன்றில் தான் இந்த எலி காணப்படுகின்றது.

இப்படியும் ஒரு நேத்தி

ஆந்திராவிலிருந்து சபரிமலைக்கு வீதி வழியாக 1,500 கி.மீ , ஸ்கேட்டிங்கில் வருவதென்பது சாதாரண காரியம் இல்லையே. ஆந்திரா ஐதராபாத் அருகே மாலை அணிந்த கன்னிச்சாமி ரகுவீர் (25), டிச.,22ல் சபரிமலைக்கு புறப்பட்டார்.

உலகின் பாரமான சப்பாத்துடன் நடந்து சாதனை

உலகிலேயே பாரமான சப்பாத்தை அணிந்து கொண்டு 10 மீற்றர் தூரம் நட ந்து சாதனை படைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த அஷ்ரிடா பேர்மன் என்பவர்.

இறந்த தாயின் சடலத்தின் அருகே பல நாட்களை கழித்த 3 வயது சிறுவன்

தனது தாய் ஆழ்ந்து உறங்குவதாக நினைத்து தாயின் சடலத்துடன் பல நாட்களைக் கழித்த 3 வயது சிறுவன் மீட்கப்பட்ட மனதை நெகிழ வைக்கும் சம்பவம் பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது.

3 வருட காலமாக இருண்ட அறையில் பாட்டியை அடைத்து வைத்த பேத்தி

தனது பாட்டியின் நலன்புரி பணத்தை களவாடும் முகமாக , அவரை 3 வருட காலமாக இருண்ட அறையொன்றில் அடைத்து வைத்த பெண் பொறியியிலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

பட்டப்படிப்புக்காக கன்னித்தன்மையை ஏலத்தில் விட்டுள்ள 18 வயது யுவதி

18 வயதான பல்கலைக்கழக மாணவியொருவர், எதிர்வரும் மூன்று ஆண்டுக்களுக்கான பட்டப்படிப்பு கற்கைநெறி கட்டணங்களை செலுத்துவதற்கு வழிவகை தெரியாது தனது கன்னித் தன்மையை ஏலத்தில் விட்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது.

உலகின் பிரமிப்பூட்டும் மிகப்பெரும் குகை (படங்கள் இணைப்பு)

பல காலங்களாக வியட்நாமை மனம் கொள்ளை கொள்ளும் வனப்புடன் கூடிய குகைகளின் நாடாகத்தான் புவியியல் ஆய்வாளர்கள் அறிந்து வைத்துள்ளார்கள்.

வீடின்றி தெருவில் தவித்துக் கொண்டிருந்த பிச்சைக்காரன் கோடீஸ்வரனான கதை (படங்கள் இணைப்பு)

தெருவோரம் பிச்சையெடுத்துக்கொண்டிருந்தவரை, வாழ்க்கையின் உச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது .

அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தை சேர்ந்தவர் டெட் வில்லியம்ஸ். இவர் முன்னர் அறிவிப்பாளராக இருந்தவர். மது,மாது என சீரழிந்து போனதால் 10 ஆண்டுகளாக தெருவில் பிச்சையெடுத்து வந்தார்.

காதலனை மிரட்ட அவரச பொலிஸாரை அழைத்த விசித்திர பெண்

தன்னை திருமணம் செய்துகொள்வதற்கு தனது காதலரை வற்புறுத்துவதற்காக பெண்ணொருவர் அவசரப் பிரிவு இலக்கமான 911 இற்கு அழைப்பை ஏற்படுத்தி பொலிஸாரை வரவழைத்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

சூட்கேசில் அடைக்கப்பட்ட குழந்தை பொலிஸாரினால் மீட்பு

ஜெர்மனியில் ஹோட்டல் ஒன்றின் வெளியே கிடந்த சூட்கேசில் அடைக்கப்பட்டு இருந்த பிறந்த ஒரு நாளே ஆன பச்சிளங் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

அமெரிக்காவில் மாணவனுடன் பாலியல் உறவு பேணிய ஆசிரியை கைது

தனது மாணவர்களில் ஒருவரான 16 வயது சிறுவனுடன் முறைகேடான பாலியல் உறவைப் பேணிவந்த 27 வயது ஆசிரியை ஒருவரை அமெரிக்க பிளயின்பீல்ட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அஸ்லி புளூமென்சைன் என்ற அந்த ஆசிரியை பிளயின்பீல்ட் நகர பாடசாலையொன்றில் நடனம் மற்றும் உடற்கல்வி பாடங்களைக் கற்பித்து வந்துள்ளார்.

சிரியா பெண்ணின் கத்திக்குத்துக்கு இலங்கைப் பெண் லெபனானில் இலக்கு

லெபனானில் இலங்கைப் பெண் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரியாவில் பாதிரியார் மீது தாக்குதல் இலங்கையருக்கும் தொடர்பு

சிரியாவில் பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் உட்பட மூவர் மீது அந்த நாட்டு அரச வழக்கறிஞர் குற்றம் சுமத்தியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பலைக் கண்காணிப்புக் குழு காப்பாற்றியது!

விக்கிலீக்ஸ் அதிரடித் தகவல்

விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றுக்குச் சரியான நேரத்தில் தகவல்களை வழங்கிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அதனை இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் இருந்து காப்பாற்றியுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் அதிரடித் தகவல் வெளியிட்டுள்ளது. வடகிழக்கு கடற்பகுதியில் பயணித்த விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றை இலங்கைக் கடற்படையினர் தாக்க முனைந்த சமயம் விடுதலைப்புலிகளுக்குச் சரியான சமயத்தில் தகவல்களைக் கொடுத்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு காப்பாற்றியதாக 2003ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 23 ஆம் திகதி அனுப்பப்பட்ட அமெரிக்கத் தூதரகத்தின் தகவலில் தெரிவிக்கப்பட்டது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல