திங்கள், 8 நவம்பர், 2010

உலகத்தை மாற்றியமைத்தவர் காந்தி அடிகள்

உலகத்தையே மாற்றியமைத்த பிதாமகன் காந்தியடிகள் என, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார். மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அரிய நினைவுப் பரிசு ஒன்றையும் நினைவிடத்திற்கு அளித்தார். மார்ட்டின் லூதர் கிங் நினைவிடம் கட்டப் பயன்படுத்தப்பட்ட கல்தான் அந்த நினைவுப் பரிசு என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விருப்பம்

அதிகளவான புலம் பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விரும்புவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக் கடல் பகுதி முள்ளிவாய்க்கால் பகுதி ஆகிய இடங்களில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான இராணுவ தளபாடங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு உள்ளன! (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக் கடல் பகுதி, முள்ளிவாய்க்கால் பகுதி ஆகிய இடங்களில் புலிகளால் நிலத்துக்கு கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான இராணுவ தளபாடங்கள் பொலிஸாரால் நேற்று கைப்பற்றப்பட்டு உள்ளன.

நயன்தாரா பிறந்த நாள்

இவரது இயற்பெயர் டயானா மரியா குரியன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

வாடிக்கையாளரின் முதுகில் ஆணுறுப்பை ஓவியமாக வரைந்த பச்சை குத்தும் கலைஞர் நெருக்கடியில்

Yin-Yang உருவத்தை பச்சைக் குத்திக்கொள்ள விரும்பிய இளைஞரின் முதுகில் அவருக்குத் தெரியாமல் 40 சென்ரிமீற்றர் நீளமான ஆணுறுப்பை வரைந்த, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பச்சைக்குத்தும் கலைஞர் ஒருவர் சட்டநடவடிக்கையை எதிர்நோக்குகிறார்.

சிறுவனின் தொண்டைக்குள் சிக்கியிருந்த கத்திரிக்கோல்

இருமும் போது இரத்தம் வெளியேறுவதாக குறிப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுவனின் தொண்டையில் கத்தரிக்கோ லொன்று இருப்பதை கண்டறிந்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

மிகப்பெரிய இயேசு சிலை (படங்க்ள் இணைப்பு)

போலந்தின் பொஸ்னான் நகரின் மேற்கே 110 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சுவிபோட்ஸின் நகரில் இயேசு கிறிஸ்துவின் மிகப் பெரிய உருவச்சிலை யொன்று சனிக்கிழமை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மும்பை பள்ளிக் குழந்தைகளுடன் நடனமாடிய ஒபாமா-மிஷெல் (படங்கள், காணொளி இணைப்பு)

மும்பை ஹோலி நேம் பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் தீபாவளி கொண்டாடிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிஷெலும் குழந்தைகளுடன் சேர்ந்து நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

பூனையை துன்புறுத்தியவர் கைது (படங்கள் இணைப்பு)

துன்புறுத்தியவர் காலின் ஷெர்லாக்
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் காலின் ஷெர்லாக். 44 வயதான இவர் ஒரு பூனையை வளர்த்து வந்தார். `ராக்சி' என்று அழைக்கப்பட்ட இந்த பூனையை அவர் கடந்த சில நாட்களாக சித்ரவதை செய்து வந்தார். அவர் மைக்ரோஓவன் அடுப்பில் சுட்டும், குளிர் அலமாரியில் வைத்து குளிரில் உறையவைத்தும் கொடுமைப்படுத்தினார்.

விவாகரத்து ஆன பெண்கள் கலந்து கொள்ள அனுமதி

அழகிப் போட்டியில் இதுவரை திருமணம் ஆகாத பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு வந்தனர். இப்போதுதான் முதல் முறையாக இங்கிலாந்து நாட்டில் தேசிய அளவில் நடக்கும் அழகிப் போட்டிகளில் திருமணம் ஆகாத குழந்தை பெற்ற பெண்களும், விவாகரத்து ஆன பெண்களும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அழகிப்போட்டி தொடங்கிய 65 ஆண்டுகளில் திருமணம் ஆகாத தாய்மார்கள், விவாகரத்து ஆன பெண்கள் கலந்து கொள்ள அனுமதித்து இருப்பது இதுதான் முறை ஆகும்.

உலகின் வயதான நாய்

உலகின் வயதான நாயாக பிரித்தானியாவைச் சேர்ந்த ஷெபா என்ற 25 வயது நாயை “கின்னஸ்' உலக சாதனைப் பதிவேட்டில் பதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாய்க்கு தாயாக பராமரிக்கும் நாய் (படங்கள், காணொளி இணைப்பு)

பன்றிக்குட்டியொன்றை நாயொன்று தனது குட்டிகளுடன் சேர்த்து பாலூட்டி அரவணைத்து பராமரிக்கும் அதிசய சம்பவம் ஸ்பெயினில் இடம் பெற்றுள்ளது.

ஹொலிவூட் நடிகை ஜில் கிளேபேர்க் மரணம்

ஒஸ்கார் விருதுக்கு சிபார்சு செய்யப்பட்ட ஹொலிவூட் நடிகை ஜில் கிளே பேர்க் தனது 66 ஆவது வயதில் மரணமானார்.

குதி உயர்ந்த பாதணிகளால் 5 மில்லியன் பெண்கள் காயம்

தமது குதி உயர்ந்த பாதணிகள் காரணமாக 3 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற நேர்ந்துள்ளதாக புதிய ஆய் வொன்று கூறுகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல