புதன், 1 பிப்ரவரி, 2012

லண்டனில் கருணா மீது நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை

2007ம் ஆண்டு நவம்பர் மாதம் கருணா கள்ளப் பாஸ்போட்டில் லண்டன் வந்தவேளை அவரை பிரித்தானியப் பொலிசார் கைதுசெய்தமை யாவரும் அறிந்ததே. அவர் சிறுவர்களைப் படையணியில் சேர்த்தார் சித்திரவதைகளை மேற்கொண்டார் மற்றும் கொலைகளுடன் தொடர்புடையவர் எனக்கூறி அவர் மேல் வழக்குத் தொடர சில சர்வதேச அமைப்புகளும் புலம்பெயர் தமிழர்களும் முனைப்புக் காட்டி வந்தனர்.

எக்ஸெல் ஒர்க்ஷீட்

எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், நெட்டு வரிசைகளைப் படுக்கை வரிசைகளாகவும், படுக்கை வரிசைகளை நெட்டு வரிசை களாகவும் மாற்றி அமைக்க
என்றே ஒரு கட்டளை உள்ளது. Transpose என்பது அது. எடுத்துக்காட்டாக ஒரு அட்ட வணையில் (Table) 3 படுக்கை வரிசையும் (Rows) 5 நெட்டு வரிசையும் (Column) அமைத்துவிடுகிறீர்கள். ஆனால் பின்னர் இதனை 5 படுக்கை வரிசை 3 நெட்டு வரிசையாக அமைக்க விரும்பினால் இந்த கட்டளையைப் பயன்படுத்தலாம். இதிலும் இரண்டு வழி உள்ளது. உங்களுக்கு எளிய வழியைச் சொல்கிறேன். முதலில் எந்த டேபிளில் உள்ள வரிசைகளை மாற்றி அமைக்க விருப்பமோ அவற்றை செலக்ட் செய்து காப்பி செய்திடவும். பின்னர் டேபிளுக்கு வெளியே வந்து ஒரு செல்லில் கர்சரை வைத்திடவும். பின் Edit––>>Paste Special கட்டளையைக் கொடுங்கள். அதன் பின் Transpose என்னும் செக் பாக்ஸைத் தேர்வு செய்து ஓகே கொடுங்கள். பழைய டேபிளுக்குக் கீழாக நீங்கள் விரும்பியவகையில் தகவல்கள் எதுவும் மாறாமல் படுக்கை வரிசை நெட்டு வரிசையாகவும் நெட்டு வரிசை படுக்கை வரிசையாகவும் மாறி அட்டவணை அமைக்கப்பட்டிருக்கும். பழைய அட்டவணையை இப்போது அழித்து விடலாம்.

ஐகான் படத்தின் அளவினை மாற்றலாம்

ஐகான்கள் அளவை நாம் விரும்பும் வகையில் மாற்றலாம். பொதுவாக நாம் பார்க்கும் ஐகான்கள் 32x32 என்ற அளவிலான பிக்ஸெல்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவை 43x43 என்ற பிக்ஸெல் அளவில் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. இந்த அளவுகளை அட்ஜஸ்ட் செய்து அமைக்க வேண்டும் என்றால், விண்டோஸ் டெஸ்க்டாப் சென்று, “Properties | Appearance” டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் “Item” கீழ்விரி மெனுவில், “Icon” என்பதைத் தேர்ந்தெடுத்து ஐகான் அளவை மாற்றலாம். “Icon spacing (horizontal)” / “Icon spacing (vertical)” என்பதைத் தேர்ந்தெடுத்து ஐகான் எடுத்துக் கொள்ளும் இட அளவினை மாற்றலாம்.

விண்டோஸ் 7ல்............

விண்டோஸ் 7ல், ஸ்டார்ட் மெனுவில் அதனுடன் வந்த கேம்ஸ் காட்டப்படுகின்றன. அவற்றை ஸ்டார்ட் மெனுவில் இருந்து நீக்குவதற்கான வழி...

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கிடைக்கும் கேம்ஸ் புரோகிராம்கள், இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன் ஸ்டார்ட் மெனுவில் காட்டும் வகையில் மாறா நிலையில் அமைக்கப்படுகின்றன.

எக்ஸெல் டிப்ஸ் - செல்களில் பார்டர் நீக்கம்

ஒர்க்ஷீட்டில் உள்ள செல்களில் உள்ள பார்டரை நீக்க ஒரு சிறிய, விரைவான வழி உண்டு. பொதுவாக ஒரு செல்லில் உள்ள மதிப்பின் பால், ஒர்க்ஷீட் பார்ப்பவரின் கவனத்தை ஈர்க்க, அதில் பார்டர்களை இணைத்து ஏற்படுத்துவது உண்டு. செல் அல்லது பல செல்களில் ஏற்படுத்தப்பட்ட பார்டர்களை மட்டும் நீக்க ஓர் அருமையான வழி உண்டு. அந்த செல்களைத் தேர்ந்தெடுத்த பின்னர், Ctrl+_ கீகளை அழுத்தவும். அதாவது கண்ட்ரோல்+ ஷிப்ட் மற்றும் அண்டர்ஸ்கோர் கீ. செல்லில் உள்ள பார்டர்கள் மட்டுமே நீக்கப்படும். மற்ற பார்மட்டுகள் அப்படியே இருக்கும்.

இன்டர்நெட்டில் வேவு பார்த்தல்

நாம் தகவல்களைத் தேடி, நண்பர்களைத் தேடி இணையத்தில் உலா வருகையில், நமக்குத் தெரியாமல், பல நிறுவனங்கள், தங்கள் வேவு பார்க்கும் பைல்களை நம் கம்ப்யூட்டரில் பதிக்கின்றன. நாம் செல்லும் தளங்கள் குறித்து தகவல் களைச் சேகரிக்கின்றன. இவற்றை பின்னர் விற்பனை செய்கின்றன. இந்த தகவல்களைப் பெறும் நிறுவனங்கள், நாம் பார்க்கும் தளங்களின் அடிப்படையில் தங்கள் வர்த்தக ரீதியான விளம்பரங்களை அனுப்புகின்றன. சில நிறுவனங்கள் தாங்கள் இணைய செயல்பாடு குறித்து மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு இந்த தகவல்களைப் பயன் படுத்துகின்றன.

Internet Explorer ல் ஸ்பெல் செக்கர்

மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுவரை தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் இல்லாத இரண்டு வசதிகளை, இதன் பதிப்பு 10ல் அறிமுகப் படுத்துகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல், ஸ்பெல் செக்கர் மற்றும் ஆட்டோ கரெக்ட் வசதி களை இணைத்துள்ளது.

Word Tips

மெனு தேர்வும் நீக்கலும்

வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்துவிட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண்டும் டாகுமெண்ட்டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன.

பேக்கப் எடுக்கப்பட வேண்டிய முக்கியமான பைல்கள்

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் அதில் உள்ள டேட்டாவினை குறிப்பிட்ட கால அவகாசத்தில் அல்லது தினந்தோறும் பேக்கப் எடுத்து வைக்க முயற்சிப்பதே இல்லை. இதற்குக் காரணம் நம் கம்ப்யூட்டர் என்ன நின்றா போய்விடும்? என்ற தவறான எண்ணப் போக்குதான். இந்த தவற்றைப் பலர் செய்கின்றனர். முக்கியமான பைல் களைப் பேக்கப் எடுப்பதில்லை. ஒரு சிலருக்கோ முக்கிய மான பைல்கள் எவை என்று தெரிவதில்லை.

ஜார்ட் (Jarte) வேர்ட் ப்ராசசர்

நமக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு வேர்ட் ப்ராசசர் ஜார்ட் (Jarte) . இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது. ஆனால், இதில் கூடுதலாகப் பல வசதிகள் கிடைக்கின்றன. பைல்களை PDF மற்றும் HTML பார்மட்டில் அனுப்பலாம். இவற்றை DOC, RTF மற்றும் TXT என்ற பார்மட்களில் சேவ் செய்திடலாம்.

Zonalarm 2012

இலவச பயர்வால் அப்ளிகேஷன்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுவது ஸோன் அலார்ம் பயர்வால் தொகுப்பாகும். இதன் புதிய பதிப்பு ஸோன் அலார்ம் 2012 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வழக்க மாக இதனையும் இலவசமாக டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.

NTFS சிஸ்டம்

விண்டோஸ் என்.டி.யுடன் அறிமுகப்படுத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட பைல் சிஸ்டம். FAT சிஸ்டத்தைக் காட்டிலும் முற்றிலும் புதியதொரு சிஸ்டமாகும். மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பினை பைல்களுக்குத் தருவதில் புதிய சிறந்த சிஸ்டமாக இது இயங்குகிறது. ஒவ்வொரு பைலாக இதில் கம்ப்ரஸ் செய்ய முடியும். என்கிரிப்ஷன் பணியையும் மேற்கொள்ள லாம். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தைப் புதியதாக இன்ஸ்டால் செய்தால் இந்த சிஸ்டம் தான் பைல் சிஸ்டமாக இன்ஸ்டால் செய்யப்படும். முந்தைய சிஸ்டங்களி லிருந்து விண்டோஸ் எக்ஸ்பிக்கு அப்கிரேட் செய்தால் அப்கிரேட் இன்ஸ்டலேஷனில் உங்கள் பைல் சிஸ்டத்தினை NTFS சிஸ்டத்திற்கு மாற்றவா என்று கேட்கப் படும். கவலைப்படாமல் யெஸ் என்று பதில் கொடுத்துவிடுங்கள். இதனை நீங்கள் இவ்வாறு இன்ஸ்டால் செய்திடுகையில் மாற்றவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். எப்போது வேண்டும் என்றாலும் NTFS சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளலாம். ஆனால் அவ்வாறு மாற்றிய பிறகு மீண்டும் FAT16 அல்லது FAT32 க்கு மாற வேண்டும் என்றால் ஹார்ட் டிஸ்க்கினை மீண்டும் பார்மட் செய்த பின்னரே மாற்ற முடியும். பொதுவாக யாரும் அது போல விரும்ப மாட்டார்கள்.

டவுண்லோட் செய்த எம்பி3 பாடல்களில், பாடகர் ஒலி அல்லது இசைக் கருவிகளின் ஒலியை எப்படி நீக்குவது?

இணையத்தில் சில பாடல்களின் கராகோ வகை என்று தரப்படுகிறது. ஒரு சில ஆர்வப் பிரியர்கள், பாடல்களில் பாடகரின் ஒலியை நீக்கி இணையத்தில் பதிவு செய்துள்ளனர். நீங்களாக முயற்சிக்க, AV Music Morpher என்ற புரோகிராமினைப் பெற்று பயன்படுத்திப் பார்க்கவும்.

திடீரென மூடப்பட்ட ஓர் இணைய தளத்தினை, மீண்டும் திறக்க

கண்ட்ரோல் + ஷிப்ட் +ட்டி (Ctrl+Shift+T) கீகளை அழுத்துங்கள். உடனே அப்போது இறுதியாக மூடப்பட்ட தளம் திறக்கப்படும். அதற்கு முந்தைய தளம் எனில், மறுபடியும் அதே கீகளை அழுத்தவும். இப்படியே முந்தைய தளங்களைத் திறக்கலாம். இந்த ஷார்ட்கட் கீகள் தொகுப்பு பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், கூகுள் குரோம் ஆகிய வற்றில் செயல்படுகிறது.

பேஸ்புக் தளத்தின் அக்கவுண்ட் பாஸ்வேர்டினை மாற்றும் வழி

முதலில் பேஸ்புக் தளத்தில் வழக்கமான பாஸ்வேர்ட் கொடுத்து நுழைந்து கொள்ளுங்கள். மேல் வலது புறம் உள்ள கீழ்விரி மெனுவில் கிளிக் செய்திடவும்.கிடைக்கும் மெனுவில் Account Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் கிடைக்கும் Account Settings பக்கத்தில், பாஸ்வேர்ட் பீல்டில் வலதுபுறம் உள்ள Edit என்னும் லிங்க்கில் கிளிக் செய்திடவும். அநேகமாக இது நான்காவதாக இடம் பெற்றிருக்கும். இப்போது மூன்று பீல்டுகள் கிடைக்கும். இதில் முதலாவதாக, இப்போதைய பாஸ்வேர்டினையும், அடுத்த இரண்டு பீல்டுகளில், நீங்கள் கொடுக்க விரும்பும் புதிய பாஸ்வேர்டினையும் தரவும். இந்த பாஸ்வேர்ட் மற்றவர் எளிதில் புரிந்து கொள்ள முடியாததாக இருக்க வேண்டும். இரண்டாவது மற்றும் மூன்றாவது பீல்டுகளில், புதிய பாஸ்வேர்ட் சரியாக டைப் செய்யப்பட வேண்டும். அடுத்து நீல வண்ணத்தில் உள்ள Save Changes என்ற பாக்ஸில் கிளிக் செய்திட வும். இப்போது உங்கள் பாஸ்வேர்ட் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து பேஸ்புக் தளத்திலிருந்து உங்கள் இமெயில் அக்கவுண்ட்டிற்கு “You recently changed your Face book password. As a security precaution, this notification has been sent என ஒரு செய்தி அஞ்சல் அனுப்பப்படும்.

Windows Theme என்று சொல்கையில் நாம் எதனைக் குறிப்பிடுகிறோம்?

Theme என்பது மானிட்டர் ஸ்கிரீன் பின்னணி. அத்துடன் சவுண்ட் அரேஞ்ச் மென்ட் மற்றும் ஐகான் அமைப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும். இந்த பிரிவில் உங்களுடைய கம்ப்யூட்டரில் தோன்றும் அனைத்து விண்டோவிற்கான வண்ணங்கள், ஐகான்கள் மற்றும் ஒலி வகை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பாதுகாக்க கோத்தபாய விரும்பினார்?- ரொபட் ஓ பிளேக்

தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்து போராளிகளுக்கும் பொதுமன்னிப்பை வழங்க இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விருப்பம் கொண்டிருந்தார் என அமரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபட் ஓ பிளெக் ராஜாங்க திணைக்களத்துக்கு தெரிவித்துள்ளார்.இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் விடுதலைப்புலிகளுக்கு பொதமன்னிப்பு வழங்க விரும்பினார். எனினும் அதனை பகிரங்கப்படுத்தினால் ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகியன அதற்கு தமது கடும் எதிர்ப்பை வெளியிடும் என்ற அச்சம் இருப்பதாக அவர் குறிப்பிட்டதாக அமரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபட் ஓ பிளெக் ராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பியுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.

சேலைகட்டும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படலாம்

தெற்காசிய பெண்களின் கலாசார ஆடையாக கூறப்படும் சேலையை அணிவதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நாய் இறைச்சி திருவிழா

கிழக்கு சீனாவின் யுலின் பகு தியில் வருடம் தோறும் உணவுத்திருவிழா நடைபெறுகிறது. அதில் உணவாக்கப்படுவது நாய்கள். என்ன நம்பமுடியவில்லையா, கலாசார நிகழ்வாக நடைபெறும் இவ் உணவுத்திருவிழாவின் முக்கிய உணவுப்பண்டம் நாய் இறைச்சிதான்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல