House of child rape survivor
செப்டம்பர் 2013ல் கண்காணிப்புக்குழு வன்னிக்குப் பயணம் செய்து, பாலியல் வன்முறைகளினால் தப்பிப் பிழைத்தவர்கள் பெண் உரிமை ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் குழுக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்தார்கள். அவர்களுடன் நடத்திய நேர்காணல், வடக்கையும் மற்றும் கொழும்பையும் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை அமைப்புகள், மற்றும் அரசாங்க வட்டாரங்கள் என்பனவற்றிலிருந்து பெறப்பட்ட தகவல்களிலிருந்து, இந்த அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது. இந்த குழுக்களுடன் நாங்கள் மேற்கொண்ட பரஸ்பர சந்திப்பின்போது, கடந்த பல மாதங்களாக சிறார்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிவரும் குழப்பமான போக்கை எங்களால் அறிய நேர்ந்தது. அதற்கு மேலதிகமாக நாங்கள் இராணுவத்தின் கரங்கள் மற்றும் அவர்களின் சொந்த சமூகத்தினர் ஆகியோரால் தொடர்ந்து தொந்தரவுகளுக்கும் துஷ்;பிரயோகங்களுக்கும் ஆளாகிவரும் யுத்த விதவைகள், தனிப் பெண்கள்,மற்றும் முன்னாள் பெண் போராளிகள் ஆகியோருடனும் பேசினோம்.