வியாழன், 21 அக்டோபர், 2010

சண்டையில் ஜெயித்தால் தான் திருமணம் : குங் பூ சகோதரிகள் "கண்டிஷன்'

தங்களிடம் குங் பூ சண்டையில் ஜெயிக்கும் ஆணை தான் திருமணம் செய்து கொள்வோம் என, இரண்டு சீன இளம் பெண்கள் கண்டிஷன் போட்டு, சண்டையிடுவதற்காக மணமகன்களை தேடி வருகின்றனர். சீனாவை சேர்ந்த ஜியோ லின் (22), யென் (21) சகோதரிகள், குங் பூ கலை கற்றவர்கள். இவர்கள் இருவரும், "எங்களை குங் பூ சண்டையில் தோற்கடிக்கும் ஆணை தான் திருமணம் செய்து கொள்வோம்' என்று கூறி வருகின்றனர்.

கூகுள் குரோம் இயங்குதளத்தின் 7 ஆவது பதிப்பு வெளியீடு

கூகுள் குரோம் இயங்குதளத்தின்( Browser) 7 ஆவது பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வியங்கு தளமானது மெக், விண்டோஸ், லினக்ஸ் ஆகிய இயங்கு தளங்களுக்கு (Operating System) இயங்கக் கூடியதாகும்.

ஓரின சேர்க்கை (lesbian) நர்சுக்கு ராணுவத்தில் மீண்டும் வேலை (படங்கள் இணைப்பு)

அமெரிக்க ராணுவத்தில் விமானப்படை பிரிவில் நர்சு ஆக பணிபுரிந்தவர் மேஜர் மார்க்கரெட்விட் (46). இவர் மற்றொரு பெண்ணுடன் ஓரின சேர்க்கை (லெஸ்பியன்) உறவு வைத்திருந்தார். இது அமெரிக்க ராணுவ சட்டத்துக்கு எதிரானது என கூறி கடந்த 2004-ம் ஆண்டு இவர் சஸ்பெண்டு” (தற்காலிக பணிநீக்கம்) செய்யப்பட்டார்.

தமிழ் புலிகள் அமெரிக்காவுக்கு ஒரு அச்சுறுத்தலா? – நியுயார்க் நீதிபதி கேள்வி

(அசோசியேட் பிரஸ்)

மூன்றாண்டுகளுக்கு மேலாக மத்திய முகவர்களினால், புலிகளின் அமெரிக்கப் பிரதிநிதி என்கிற குற்றச்காட்டின் பெயரில் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் ஒரு ஸ்ரீலங்கா குடியேற்ற வாசியின் தலைவிதி இந்தச் சிக்கலான கேள்வியுடன் பிணைந்திருக்கிறது. இந்தப் போராளிக் குழு அமெரிக்கர்களுக்கு ஒரு பயங்கரவாத அச்சுறுத்தலாக உள்ளதா?

சட்டவிரோதமாக ஆட்களை கொண்டுவருபவர்களுக்கு 10 வருட சிறை; கனேடிய நாடாளுமன்றில் புதிய சட்டமூலம்

சட்டவிரோதமாக குடியேற்றவாசிகளை கனடாவுக்கு கொண்டுவரும் நபர்களுக்கு தண்டனையளிக்கும் வகையிலான சட்டமூலத்தை கனேடிய அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை அந்நாட்டு நாடாளுமன்ற பொதுச்சபையில் சமர்ப்பித்தது.

52 வயதில் பிகினி உடையில் நடித்த ஆலிவுட் நடிகை (படங்கள் இணைப்பு)

ஆலிவுட் நடிகை ஷரோன் ஸ்டோன். அவர் அறிமுகமான காலத்தில் `செக்ஸ் பாம்' என்று வர்ணிக்கப்பட்டார். அவருக்கு இப்போது 52 வயதாகிறது. இருந்தாலும் அவர் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறார். அவர் இந்த வயதிலும் கவர்ச்சியாக நடிக்க தயங்கவில்லை.

விவாகரத்து கேட்டதற்காக மனைவியை கொன்ற இந்தியர் (படங்கள் இணைப்பு)

இந்தியாவில் உள்ள பஞ்சாபை சேர்ந்தவர் ஹர்பீரித் ஆலக். 32 வயதான இவருக்கு கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவரது மனைவி கீதா. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர், லண்டன் சென்று விட்டார்.

கோரவிபத்தில் முகத்தை இழந்தார் (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த டல்லாஸ் வியன்ஸ் (25) என் பவர் பெயின்ட் அடிக்கும் பணிகளை லிப்ட் வாகனத்திலிருந்து மேற்பார்வை செய்துகொண்டிருக்கையில் திடீரென வேகமாக உயர்ந்த லிப்ட், உயர்அழுத்த மின்கம்பி மீது பட்டது. இதில் வியன்சின் முகம் ழுவதும் கருகிவிட்டது.

பாலியல் குற்றச்சாட்டின் பேல் சிறுவர் இல்ல நிர்வாகியான பாதியாருக்கு பிடியாணை

மன்னார் மாவட்டத்தின் முருங்கன் பகுதியில் உள்ள என் இரட்சகர் சிறுவர் இல்ல நிர் வாகியான என். அமிர்தலிங்கம் என்கிற பாதியாரை பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து மன்றில் ஆஜராக்க வேண்டும் என்று மன்னார் நீதவான் நீதிமன்றம் பிடி யாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மன்னார் மேலதிக நீதிவான் ஏ. யூட்சன் இப்பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள் ளார். இச் சிறுவர் இல்லத்தில்14 சிறுமியர் தங்கி இருந்தனர்.
பெரியகமத்தில் பாதிரியாரின் வீடு உள்ளது. சிறுவர் இல்லத்தில் தங்கி இருந்த சிறு மிகளில் ஒருத்தியை வேலைக்கு என அங்கு அழைத்துச் சென்ற போது பாதிரியார் அச்சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து படகொன்றில் அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்த சுமார் 85 புகலிட கோரிக்கையாளர்களை இந்தோனேசிய துறைமுகப் பொலிஸாரால் மீட்பு!

இலங்கையிலிருந்து படகொன்றில் அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்த இலங்கையைச் சேர்ந்த சுமார் 85 புகலிட கோரிக்கையாளர்களை இந்தோனேசிய துறைமுக பொலிஸார் தடுத்து மீட்டுள்ளனர்.

ஆதிமனிதன் சுட்ட மா தோசை

முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மனிதனுக்கு மாவரைத்து தோசை ஊற்றி சாப்பிட தெரிந்திருக்கிறது என மனித வரலாறு குறித்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து லண்டனிலிருந்து வெளியாகும் நஷனல் அகடமி ஆப் நேச்சுரல் சயின்சஸ் என்ற இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: இத்தாலி, ரஷ்யா மற்றும் செக்குடியரசு ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆதி மனிதனின் இருப்பிடங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

இலங்கை சேர்ந்த வீட்டுப் பணிப் பெண் கொல்லப்பட்டதாக சந்தேகம்

ஜோர்தானில் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர், கடமையாற்றி வந்த வீட்டு உரிமையாளரால்(பெண்) கழுத்து நெறிந்து கொல்லப்பட்டதன் பின் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்படுவதாக ஜோர்தான் தரப்பு இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தெரிவித்துள்ளது.

வளர்ப்பு மகனுடன் கள்ளக்காதல் மனைவி கொலை; கணவன் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஹாஜ்முகமது (55). இவரது மனைவி ரஷ்யாபேகம் (50). இவர்களுக்கு சாகுல்பாட்ஷா (29), ஹக்கீம்பாட்ஷா (23), சபீன்தாஜ் (30) ஆகிய மூன்று பிள்ளைகள் உண்டு. ஹாஜ்முகமது கடந்த 30 ஆண்டாக வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். ஹாஜ்முகமது வெளிநாட்டில் இருந்தபோது தான் சம்பாதித்த பணத்தை இவரது மனைவி ரஷ்யாபேகத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த பணத்தில் ரஷ்யாபேகம் தனது பெயரில் இரண்டு ஏக்கர் நிலம், ஒரு பிளாட் வாங்கி அதில் வீடு கட்டினார். மீதி பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்ததாக தெரிகிறது.

ஓரினச்சேர்க்கை (gay) இளவரசருக்கு 20 ஆண்டு ஜெயில், தண்டனை முடிவில் தஞ்சம் (படங்கள் இணைப்பு)

உதவியாளரை அடித்துக் கொன்ற வழக்கில் சவுதி இளவரசருக்கு லண்டன் கோர்ட்டு 20 ஆண்டு ஜெயில் தண்டணை அளித்து உள்ளது.


சவுதி அரேபிய இளவரசர் சையது அப்துல்லா பின் நசீர் அல் சையது (வயது 34). இவர் சவுதி அரேபிய மன்னரின் மகள் வழி பேரன் ஆவார். கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி லண்டனில் ஒரு நட்சத்திர ஓட்டலில் அப்துல்லா தங்கி இருந்தார். அப்போது தன்னுடைய உதவியாளரை அவர் அடித்து சித்ரவதை செய்து கொலை செய்தார்.

உள்ளங்கை நிலம் பார்க்க வேண்டும்!

அந்தக் காலத்து அரசர்கள் புலவர்களுக்கோ பிறருக்கோ பரிசுகள், விருதுகளைக் கொடுக்கும்போது தட்டில் வைத்துதான் கொடுப் பார்களாம். காரணம் கைகளால் கொடுக்கும்போது அவர்கள் வாங்கிக் கொள்ள நேரும். வாங்கிக் கொள்வது என்பது பிச்சை எடுப்பவர்களின் செயலாம். ஆனால் தட்டில் வைக்கும்போது அப்படி அல்ல. அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.

இலங்கையில் அரசியல் கைதிகள் என யாரும் கிடையாது‐ அனைவரும் பயங்கரவாதிகள் ‐ டியூ. குணசேகர!

இலங்கையில் அரசியல் கைதிகள் என யாரும் கிடையாது. அனைவரும் பயங்கரவாதிகளாவர். சரத் பொன்சேகா அரசியல் கைதியல்ல என்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை கள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் நிறைவு பெற்றதையடுத்து பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 11,696 உறுப்பினர்களில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரையில் 4485 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கேட்போர் கூட த்தில் நேற்று முற்பகல் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இந்த விபரங்களை தெரிவித்தார்.

சந்திரிக்கா தற்கொலை தாக்குதல் சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

1999ம் ஆண்டு கொழும்பில் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்கு வைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலான வழக்கில் குற்றவாளி என கருதப்பட்ட சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

உலகின் மிக நீளமான பூனை (படம், வீடியோ இணைப்பு)

உலகின் மிக நீளமான பூனை என்ற பெருமை ஸ்டீவி என்று பெயர் கொண்ட 5 வயது பூனைக்கு கிடைத்துள்ளது. இந்தப்பூனை 48.5 அங்குல நீளமாக உள்ளதால், முன்னர் உலக சாதனை படைத்து கின்னஸ் பதிவில் பதிவான பூனையை இது முறியடித்துள்ளது. இதுவரையில் கின்னஸ் பதிவில் உள்ள பூனை இதைவிட அரை அங்குலம் சிறியது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல