சனி, 31 அக்டோபர், 2015

எழுதமறந்த குறிப்புகள்- பதுங்கு குழிகளும் நிலக்கீழ் மாளிகைகளும்



வடக்கிலும் தெற்கிலும் நிலத்தின் கீழ் அமைந்த பாதுகாப்பு அரண்களும் அதிகார வர்க்கமும்

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்து இனவிடுதலைப்போராட்டம் தொடங்கியதும் இலங்கைத்தமிழ் சமூகத்தினரிடம் பதுங்கு குழிகள் பேசுபொருளானது. உயிருக்கு அச்சுறுத்தல் வரும்பொழுது ஒவ்வொருவரும் தம்மைப்பாதுகாத்துக்கொள்ள இருப்பிடங்களைவிட்டு ஓடுவார்கள். முடியாதவர்கள், எங்காவது பதுங்குவார்கள். அப்படி ஒரு சூழ்நிலையில் வட இலங்கையில் ஆயுத நெருக்கடி வந்ததும் பதுங்குகுழிகள் தோன்றின.

புலிகள் சரணடைய இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த திட்டத்தை நிராகரித்த பிரபாகரன்- எரிக் சொல்ஹெய்ம்

லண்டன்: இலங்கை இறுதிப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவது தொடர்பாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த திட்டத்தை அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் நிராகரித்துவிட்டதாக நார்வே முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் "ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, இலங்கையில் நார்வேயின் அமைதி முயற்சிகள்" என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

பிரபாகரனுடன் குரோதமில்லை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் எனக்கும் தனிப்பட்ட குரோதங்கள் எதுவுமில்லை என கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளதோடு, இராஜதந்திர ரீதியிலான தவறுகளை புலிகள் இழைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரன் தற்கொலையே செய்துள்ளார் என சுட்டிக்காட்டியவர் தற்போது தமிழ் மக்களுக்கு மாற்று அரசியல் சக்தி அவசியம் என்பதால் தமிழர் விடுதலைக்கூட்டணியில் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

‘கேசரி’க்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு;

உதவிகோரல்

அக்­க­ரைப்­பற்றைச் சேர்ந்த இரண்டு பிள்­ளை­களின் தந்­தை­யான கந்­த­சாமி சிறு­நீ­ரக நோயினால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்ளார்.

கைதி­களின் விடு­தலை கானல் நீராகுமா?

அர­சியல் ரீதி­யான குற்­றங்­களைப் புரிந்­தார்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களே சிறைச்­சா­லை­களில் நீண்­ட­கா­ல­மாகத் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­ட­மும்­சரி, அவ­ச­ர­காலச் சட்­ட­மும்­சரி, அர­சியல் ரீதி­யான குற்றம் புரிந்­த­வர்­களைக் கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்தி தண்­டிப்­ப­தற்­கா­கவே கொண்டு வரப்­பட்­டுள்­ளன. எனவே அத்­த­கைய சட்­டங்­களின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை அர­சியல் கைதிகள் அல்ல என்று கூறு­ப­வர்­களை எவ்­வாறு வகைப்­ப­டுத்­து­வது என்று தெரி­ய­வில்லை.

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பாக, அர­சாங்கத் தரப்பில் இருப்­ப­வர்கள் ஆளா­ளுக்கு கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றார்கள். இந்தக் கருத்­துக்கள் ஒவ்­வொன்றும் ஒவ்­வொரு வித­மா­கவும், சில வேளை­களில் முரண்­பட்­ட­தா­கவும் காணப்­ப­டு­கின்­றன. இதனால், நவம்பர் மாதம் 7 ஆம் திக­திக்­கி­டையில் இந்தப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­படும் என்று நாட்டின் அதி­யுயர் தலை­வ­ரா­கிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அளித்­தி­ருந்த உத்­த­ர­வாதம், கேள்­விக்­கு­றி­யா­கி­யி­ருக்­கின்­றது.

சிரியா விஷயம் ரொம்ப 'சீரியஸ்': அமெரிக்கா, ரஷ்யா, சீனா பலப்பரீட்சை!!

நீங்கள் இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கும் போதே, மூன்றாவது உலகப் போர் வெடிக்கலாம். அந்தஅளவுக்கு சிரியாவில் நிலைமை பயங்கரமாக உள்ளது. இங்கு நடக்கும்உள்நாட்டு சண்டை, சர்வதேச அளவில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவின் வான் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, ரஷ்யா போர் விமானங்கள் ஒருவேளை நேருக்கு நேர் மோதிக் கொண்டால், அதுவே மூன்றாம் உலகப்போருக்குவித்திடும். சின்ன சிரியாவால் இவ்வளவு பெரிய ஆபத்தா... அப்படி என்ன தான்சிரியாவில் நடக்கிறது என பார்ப்போம்.

கருணா – சங்கரி கூட்டணியின் மர்மம்

கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழர் விடுதலைக் கூட்டணியுடன், இணைந்து கொள்ளப் போவதாக, தகவல்கள் வெளியானதையடுத்து, ஊடகங்களில் ஒரு பரபரப்புத் தென்படுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 11 ஆண்டுகளுக்கு முன்னர், பிரிந்து சென்ற கருணா, அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதும்- பின்னர், பிரதி அமைச்சர், சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவிகளைப் பெற்றுக் கொண்டதும் கடந்தகால வரலாறு.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல