ஆபிரிக்கா கண்டத்தின் கிழக்குப்புற நாடு கென்யா பிரிட்டிஷ் சாம்ராச்சியத்திற்கு எதிராக நடத்திய விடுதலைப் போர் பற்றிப் பார்ப்போம் மனித வரலாற்றின் மிகப் பெரிய சாம்ராச்சியமாக இடம்பெற்ற பிரிட்டிஷ் சாம்ராச்சியம் பொது மக்களை முட்கம்பி வேலி தடுப்பு முகாம்களுக்குள் சிறைக் கைதிகளாக அடைத்து வைக்கும் கொடூரத்தையும் அது உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது.
செவ்வாய், 16 ஏப்ரல், 2013
விடுதலைப் புலிகளின் பெயர் சொல்லிப் பிழைக்க முற்படும் தெய்வீகனின் கூட்டம் - விடுதலைப் பறவைகள்’
“உலக தமிழ் மக்களின் தீராத தாகமான தமிழீழத்தாகத்தை தீர்த்து வைப்பதற்கு உங்களால் முடிந்த நிதி உதவியை செய்து எமது போராட்டத்தை வழிநடத்த உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்… “பறவைகளின் தாகம் தமிழீழ தாயகம்” தமிழகத்தின் பணம் படைத்த ஈழத்தை நேசிக்கின்ற பிரபல்யங்களை இலக்குவைத்து துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு பணம் கேட்கும் நடவடிக்கை நடைபெற்று வருகின்றமை தொடர்பிலான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.தமிழீழ தேசியத் தலைவர் வீரச்சாவடைந்து விட்டார் என்ற செய்தியையும் தெரிவித்துள்ள இந்த கும்பல் தாம் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
வெள்ளைக்கொடி
ஃபிரான்ஸிஸ் ஹாரிசன்
தன்னுடைய உயிரைக் காத்துக்கொள்ள வேண்டி, தான் யாரைப் பாதுகாத்திருக்க வேண்டுமோ அவரையே காட்டிக் கொடுத்த ஆள் காட்டியாக தான் மாறியதை விளக்கிக் கொண்டிருந்தார் அந்தப் பருத்த, குட்டையான தமிழர். அவர் அணிந்திருந்த முக்காடுடன் கூடிய மெல்லிய, கறுப்பு நிற மேல் சட்டைக்குள் தன் உடலை அப்படியும் இப்படியுமாகப் பதற்றத்துடன் திருப்பினார். அந்தப் பனிக் காலத்தின் மிகக் குளிரான நாள்கள் ஒன்றில் அவர் அணிந்திருந்த மேலாடை வானிலைக்குக் கொஞ்சமும் பொருத்தமாக இல்லை. விக்டோரியா ரயில் நிலையத்தின் உணவகம் ஒன்றில் நாங்கள் காஃபி குடித்துக் கொண்டிருந்தோம். உணவகத்தின் ஆள் அரவமற்ற ஒரு தாழ்வாரத்தில், திறந்த வெளியில் கடுங்குளிரைத் தாங்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தோம். பயணிகள் பின்பற்றியே ஆக வேண்டிய நடைமேடை அறிவிப்புகள் அவ்வப்போது எங்கள் உரையாடலில் குறுக்கிட்டன. உணவகத்தின் உள்ளே வெதுவெதுப்பாக இருந்தது. ஆனால், அங்கே ஆட்கள் நிறைய பேர் இருந்தார்கள்; அவர்கள் நாங்கள் பேசுவதைக் கேட்கக்கூடும்; கேள்விமுறையே இல்லாத படு கொலைகளைப் பற்றி அல்லவா நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.
Labels:
கட்டுரைகள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர் : பகுதி 6
தெலுங்கு ஸ்டார் வெங்கடேஷிற்கும்,அஞ்சலிக்கும் இடையில் துளிர்த்த நட்பு அண்மைக்காலமாக பலரும் பொறாமைப்படும் அளவிற்கு வளர்ந்து விட்டது.அஞ்சலி சம்பாதித்த பணத்தை வைத்து செல்வம் கொழித்துக் கொண்டிருக்கும் அந்த இயக்குனரைப் பார்த்து,"அவருக்கு வாய்த்தது போல் ஒரு கதாநாயகி எல்லாருக்கும் வாய்த்து விட்டால் எத்தனை முறை தோற்றாலும் படம் எடுத்துக் கொண்டே இருக்கலாமே" என்கிறது தமிழ சினிமா உலகம்.தெலுங்கிலோ, "அஞ்சலிக்கு வாய்த்தது போல் ஒரு கொடை வள்ளல் சூப்பர் ஸ்டார் கிடைத்துவிட்டால் எத்தனை படத்தில் தோற்றாலும் ஜெயித்துக் கொண்டே இருக்கலாம்" என்று பொறாமைப்படுகிறார்கள்.
Labels:
சினிமா,
நடிகை அஞ்சலி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)








