சனி, 24 ஜனவரி, 2015

உலகில் செயற்கை கணையம் பொருத்தப்பட்ட முதல் நோயாளி

உலகில் செயற்கை கணையம் பொருத்­தப்­பட்ட முத­லா­வது நோயாளி என்ற
பெயரை அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த 4 வயது சிறுவன் பெறு­கிறான்.

ஒரே மருத்துவமனையில் ஒரே நாளில் பிறந்து திருமண பந்தத்தில் இணைந்த அபூர்வ ஜோடி

-60 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்

பிரித்­தா­னி­யாவில் ஒரே மருத்­து­வ­ம­னையில் ஒரே நாளில் அடுத்­த­டுத்த படுக்­கை­களில் பிறந்து திரு­மண பந்­தத்தில் இணைந்த ஜோடி­யொன்று, தனது 60 ஆவது பிறந்த நாளை திங்­கட்­கி­ழமை ஒன்­றாக கொண்­டா­ட­வுள்­ளது.

அறுவைச் சிகிச்சை பிரிவில் தனது இரட்டை குழந்தைகளை தானே பிரசவிக்க செய்த தாய் (படங்கள் இணைப்பு)

தாயொ­ருவர் மருத்­து­வ­மனை அறுவைச் சிகிச்சை பிரிவில் தனது இரட்டை குழந்­தை­களை தனது கைகளைப் பயன்­ப­டுத்தி தானே பிர­ச­விக்க செய்த சம்­பவம் அவுஸ்­தி­ரே­லி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

துப்பாக்கியுடன் விளையாடிய பாலகன் தன்னைத்தானே சுட்டு மரணம்

காரி­லி­ருந்த தனது தந்­தையின் கைத்­துப்­பாக்­கியை எடுத்து விளை­யா­டிய 2 வயது பாலகன் ஒருவன் தன்­னைத்­தானே சுட்டு உயி­ரி­ழந்த சம்­பவம் அமெ­ரிக்க புளோ­ரிடா மாநி­லத்தில் புதன்­கி­ழமை மாலை இடம்­பெற்­றுள்­ளது.

ஸ்ரீலங்கா புலம் பெயர்ந்தவர்களுக்கு ஒரு கடிதம்: அன்புள்ள அக்கா

 அக்கா,
சற்று இங்கே பாருங்கள் நாங்கள் பேசவேண்டிய அவசியம் உள்ளது.
ஸ்ரீலங்கா பிரச்சினைகளை நாங்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ளாத அதே வேளை, கடந்த வாரம் சொல்லப்பட்ட சில விடயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அதேவேளை உங்கள் கருத்துக்கள் எனக்குத் தெரிந்த பெரும்பாலான ஸ்ரீலங்காவாசிகளை பிரதிநிதித்துவப் படுத்துபவவை அல்ல, நான் இந்தக் கடிதத்தை என்னுடைய சிந்தனைகள் ஏதோ ஒரு வழியில் உங்களுடன் பொருத்தப்படும் என்கிற நம்பிக்கையில்தான் எழுதுகிறேன்.
  • 1.புலம் பெயர்ந்தவர்கள் விடயம்
எங்கள் சம்பாஷணையின் ஆரம்ப உரையாடலில் இருந்து இதை தொடங்க விரும்புகிறேன்: புலம் பெயர்ந்தவர்களைப் பற்றி ஸ்ரீலங்காவாசிகள் ஏன் கவலைப்பட வேண்டும்? அதில் ஒன்று, புலம் பெயர்ந்தவர்களின் கருத்துக்கள் ஸ்ரீலங்காவாசிகளுக்கு பெரிய விஷயமாகத் தோன்றுவதுதான். இதை புரிந்துகொண்ட ஜனாதிபதி ராஜபக்ஸ ஸ்ரீலங்காவாசிகள் தமிழ் புலம் பெயர்ந்தவர்களைக் கண்டு அச்சமடைய வேண்டும் என்கிற இந்த யோசனையை முதற்கோளாக வைத்துத்தான் தனது முழுப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டார். இன்றும்கூட, சிங்கள தேசியவாதிகள் மற்றும் பௌத்த தீவிரவாதிகள் தமிழ் புலம் பெயர்ந்தவர்களை தங்களின் ஒரு பிரச்சார ஆயுதமாகத் தொடர்ந்தும் பயன்படுத்தி வருகிறார்கள்.

குருட்டு தாய்

பாலை நிலங்களால் சூழப்பட்ட ஒரு தேசம். அந்த தேசத்தில் ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளிற்கு ஒரு கண் இல்லை. தன் மற்றைய கண்ணை வைத்து கொண்டு வாழ வேண்டிய நிலை. கணவரின் இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாசத்தின் ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால வாழ்வு பற்றியதாகவே இருந்தது. தன்னிடம் இருந்த சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல தரமிக்க பாடசாலையில் சேர்த்தாள். மீகுதி சொத்தை தனது மகனின் கல்வி தொடர்பான செலவுகளிற்கு தயார் செய்திருந்தாள்.

கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி?

இத்தனை நாட்களாக வாட்ஸ் அப் அப்ளிகேஷனை PC-ல் (பர்சனல் கம்ப்யூட்டர்) இருந்து பயன்படுத்த வேண்டும் என்றால், BlueStacks என்ற ஆண்ட்ராய்டு எமுலேட்டர் சாஃப்ட்வேரைத்தான் பயன்படுத்த வேண்டியிருந்தது. இந்த சுற்றுவழி பலருக்கு பிடிக்கவில்லை. லட்சக்கணக்கான பயனீட்டாளர்கள் வாட்ஸ் அப்பிடம் கம்ப்யூட்டருக்கான சாஃப்ட்வேரை வெளியிடும்படி கோரிக்கை வைத்தார்கள். அதற்கு செவிசாய்த்து இப்போது இன்னும் எளிதாக கம்ப்யூட்டரில் இருந்து வாட்ஸ் அப் இயக்குவதற்கு வெப்-அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது. இதனால், எந்த சாஃப்ட்வேரையும் நாம் பதிவிறக்கம் செய்ய தேவையில்லை. க்ரோம் பிரவுஸர் இருந்தால் மட்டும்போதும்!

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல