சனி, 4 ஜூலை, 2015

விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் அரசியல் பிரவேசம் ஏன்?

தனித்தனியாக பிரிந்து கிடந்த தமிழ்த்தேசிய அரசியல் தலைமைகளைVidhi_Praba ஒன்றாக்கியதே விடுதலைப் புலிகள்தான் என்பதால், அதன் முன்னாள் உறுப்பினர்களின் நேரடி அரசியல் பிரவேசம் கூட்டமைப்பை வலுப்படுத்தி வெளிப்படைத ்தன்மையுள்ளதாக்கும் என்கிறார் அவர்கள் சார்பில் பேசும் வித்யாதரன்.

வெளிநாட்டு பயங்கரவாதிகளாக பட்டியல் இடப்பட்டுள்ள சில தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்குதல் - பாகம் - 2

பாகம் - 2

பட்டியலிடப்பட்ட தனிநபர்கள்

பட்டியலில் உள்ள 424 தனி நபர்களில் ஆண்களும் மற்றும் பெண்களும்.அடங்குவார்கள், அவாகளைப் பற்றி விசேடமாகக் குறிப்பிடுவதற்கு அந்த எண்ணிக்கை மிகவும் அதிகம். இந்த நபர்களில் கிட்டத்தட்ட 30 பேர் பெண்கள் அவர்கள் அவுஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, இந்தியா, மலேசியா, நெதர்லாந்து, நியுசிலாந்து, நோர்வே, ஸ்ரீலங்கா, சுவீடன் சுவிட்சலாந்து, தாய்லாந்து, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது.

வெளிநாட்டு பயங்கரவாதிகளாக பட்டியல் இடப்பட்டுள்ள சில தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்குதல்

பாகம் - 1

ஸ்ரீலங்காவின் ஆற்றலும் உற்சாகமும் மிக்க வெளிவிவகார அமைச்சர் மங்கLtte fOள சமரவீர தற்சமயம் சில குறிப்பிட்ட ஸ்ரீலங்கா தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்களை ஐக்கிய நாடுகள் சபையின் 1968 ஆண்டின் சட்டம் இல.45ன்படி பயங்கரவாதிகளாக நியமிக்கப் பட்டிருப்பதை மீளாய்வு செய்து மற்றும் அவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்றுவதற்கான சாத்தியமான நகர்வு ஒன்றை மேற்கொள்ளுவதற்காக முன்னணியில் நிற்கிறார். வெளிநாட்டு மண்ணில் இயங்கிவரும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ) மற்றும் வேறு 15 அமைப்புகள் என்பன வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் என்று 2014 மார்ச்சில் வெளியான அதி விசேட வர்த்தமானி 1856ஃ41 யின்படி தடை செய்யப்பட்டுள்ளன. இந்த 16 அமைப்புக்களைத் தவிர, எல்.ரீ.ரீ.ஈ தொடர்புகள் உள்ளதாக சந்தேகிக்கப்படும் ஸ்ரீலங்கா உட்பட 19 நாடுகளில் வசிக்கும் மேலும் 424 பேரும் கூட இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல