திங்கள், 26 மார்ச், 2012
சுமத்திரனை தமிழ் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும்- தமிழீழ புரட்சிகர மாணவர்கள்!
தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழ் தேசியத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருவதாலும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வருவதாலும் சிங்கள பேரினவாதிகளுடன் ஒட்டி உறவாடி வருவதாலும், சுமந்திரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேற்றுமாறு கோரிக்கைவிடுக்கின்றோம் என தமிழீழ புரட்சிகர மாணவர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Labels:
இலங்கை
விமானத்தைச் சுட்டு வீழத்தியது விடுதலைப் புலிகளே!
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதல் காரணமாகவே 2000 ஆம் ஆண்டில் இலங்கைக்குச் சொந்தமான ஏ.என்.-26 ரக விமானம் விழுந்து நொருங்கியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Labels:
இலங்கை
யாழ்ப்பாணத்தில் கடலுக்குள் ஓட்டோவைச் செலுத்திய தங்கச்சி
"யாழ்ப்பாணத்தில் பெண்கள் ஓட்டோ ஓடத் தொடங்கிய பின் முதல் முதலாக ஓட்டோவை கடலுக்குள் செலுத்திப் பார்த்துள்ளார் அன்புச் சகோதரி ஒருவர்"
யாழில் பெண் ஒருவர் ஓட்டிய முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து பண்ணை வீதியில் மண்டைதீவு சந்திக்கு அருகில் பறவைகள் சரணாலயத்துக்கு அண்மித்த பகுதியில் உள்ள கடலுக்குள் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
யாழில் பெண் ஒருவர் ஓட்டிய முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து பண்ணை வீதியில் மண்டைதீவு சந்திக்கு அருகில் பறவைகள் சரணாலயத்துக்கு அண்மித்த பகுதியில் உள்ள கடலுக்குள் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
Labels:
இலங்கை
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நிதானத்துடன் கருத்துகளை வெளியிட வேண்டும்- சுமந்திரன்!
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஈழத்தமிழர் விடயத்தில் நிதானத்துடன் கருத்துக்களை வெளியிட வேண்டும் இல்லையேல் தமிழர்கள் சர்வதேச ஆதரவை இழக்க நேரிடும்’ என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட ´தனி ஈழம்தான் எனது கனவு´ என்ற கருத்துப்பற்றி கேட்ட போதே சுமந்திரன் இதனைத்தெரிவித்தார்.
Labels:
இலங்கை
தாயை அல்ல அவரது சடலத்தையாவது கொண்டு வாருங்கள்! பலாங்கொடயில் இருந்து ஒரு அழுகுரல்!!
சவுதி அரேபியாவிற்கு பணிபுரியச் சென்று உயிரிழந்த தனது தாயின் சடலத்தை நாட்டுக்கு எடுத்து வர உதவி புரியுமாறு பலாங்கொடயைச் சேர்ந்த நபரொருவர் கண்ணீர் குரல் எழுப்பியுள்ளார்.
எச்.ஜீ.சீலவதி எனப்படும் தனது தாய் கடந்த வருடம் ஜூன் மாதம் 18ம் திகதி கொழும்பு வெல்லவீதியில் உள்ள முகவர் நிலையம் ஒன்றின் ஊடாக சவுதி அரேபியாவிற்கு சென்றதாக குறித்த தாயின் மகனான கிரிசாந்த பீரிஸ் அத தெரணவிடம் தெரிவித்தார்.
எச்.ஜீ.சீலவதி எனப்படும் தனது தாய் கடந்த வருடம் ஜூன் மாதம் 18ம் திகதி கொழும்பு வெல்லவீதியில் உள்ள முகவர் நிலையம் ஒன்றின் ஊடாக சவுதி அரேபியாவிற்கு சென்றதாக குறித்த தாயின் மகனான கிரிசாந்த பீரிஸ் அத தெரணவிடம் தெரிவித்தார்.
Labels:
இலங்கை
மணப்பெண்ணுக்கு தெரியாமல் அவருக்கு 3 திருமணங்கள்
நீண்டநாள் காத்திருந்து தனது மனங்கவர் காதலருடன் திருமண பந்தத்திலமுதல் தடவையாக இணையப்போகும் மகிழ்ச்சியுடன் திருமண அனுமதிப் பத்திரத்துக்காக விண்ணப்பித்த பெண்ணொ ருவர் தனக்கு ஏற்கனவே 3 தடவைகள் திருமணமாகியிருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ள மையை அறிந்து அதிர்ச் சியடைந்த சம்பவம் அமெரிக்காவில் இடம் பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
சொல் குழப்பம் தீர்க்க உதவும் இணையதளம்
ஆங்கில மொழியில் ஏறத்தாழ ஒரே மாதியான உச்சரிப்பில் பல ஜோடி சொற்கள் புழக்கத்தில் உள்ளன. எடுத்துக் காட்டாக Capital / Capitol, Affect / Effect, new / anew, practice / practise, soure / sore, side / aside, warrenty / guarantee, affluent / effluent, suit / suite ஆகியவற்றைக் கூறலாம். இந்தச் சொற்களுக்கான பொருள் வேறுபாடு மற்றும் எப்படிப் பயன்படுத்துவது எனத் தெரிந்தால் மட்டுமே, நாம் பயன்படுத்தும் ஆங்கிலம் பொருள் பொதிந்ததாக இருக்கும்.
இதற்கு நமக்கு வழி காட்டும் வகையில் ஓர் இணையதளம் இயங்குகிறது.
இதற்கு நமக்கு வழி காட்டும் வகையில் ஓர் இணையதளம் இயங்குகிறது.
Labels:
கணணி மையம் (Internet)
ஓன்லைன் மூலம் PDF கோப்புகளை வெட்ட, சேர்க்க ,பாதுகாக்க
இத்தளத்திற்கு சென்று Merge pdf , Split Pdf, Unlock Pdf, Protect Pdf என்று இருக்கும் பல வகையான சேவைகளில்,
PDF கோப்புகளை சேர்க்க வேண்டும் என்றால் Merge Pdf என்பதையும்,
PDF கோப்புகளை பிரிக்க வேண்டும் என்றால் Split PDF என்பதையும்,
PDFகோப்புகளை Unlock செய்வதற்கு Unlock Pdf என்பதையும்,
PDF கோப்புகளை பூட்டி பாதுகாப்பாக வைப்பதற்கு Protect pdf என்பதையும்
சொடுக்கி சேவைகளை பெறலாம்.
PDF கோப்புகளை சேர்க்க வேண்டும் என்றால் Merge Pdf என்பதையும்,
PDF கோப்புகளை பிரிக்க வேண்டும் என்றால் Split PDF என்பதையும்,
PDFகோப்புகளை Unlock செய்வதற்கு Unlock Pdf என்பதையும்,
PDF கோப்புகளை பூட்டி பாதுகாப்பாக வைப்பதற்கு Protect pdf என்பதையும்
சொடுக்கி சேவைகளை பெறலாம்.
Labels:
கணணி மையம் (PDF)
உங்களை பின் தொடர்பவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு....
இணையத்தை நீங்கள் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது, உங்களை பின் தொடர்ந்து யார் வருகிறார்கள் என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
இதை Real time tracking என்று சொல்வார்கள். பின் தொடர்பவர்கள் பற்றிய தகவல்களை Collusion என்ற பயர்பொக்ஸ் உலாவி நீட்சியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதை Real time tracking என்று சொல்வார்கள். பின் தொடர்பவர்கள் பற்றிய தகவல்களை Collusion என்ற பயர்பொக்ஸ் உலாவி நீட்சியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Labels:
கணணி மையம் (Firefox)
முள்ளிவாய்க்கால் அழிவு பற்றி முன்கூட்டியே சொன்ன அமிர்!
1989ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். புலிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அமிர்தலிங்கமும் முன்னாள் யாழ்ப்பாண எம்.பி.யான வி.யோகேஸ்வரனும் கொல்லப்பட்டனர். கூட்டணியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான சிவசிதம்பரம் படுகாயங்களுக்கு இலக்கானார். புலிகளின் இயக்கப் பெயர்களைக் கொண்ட விசு, அலோசியஸ், அறிவு ஆகியோரைக் கொண்ட குழுவே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டது. விசு என்பவரின் இயற்பெயர் இராசையா அரவிந்தராஜ். இவர் வவுனியாவில் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளராகக் கடமையாற்றியவராவார். கூட்டணித் தலைவர்களின் மெய்ப் பாதுகாவலர்கள் நடத்திய பதில் தாக்குதலில் புலி இயக்க உறுப்பினர்கள் மூவருமே ஸ்தலத்தில் கொல்லப்பட்டனர். கொழும்பு, பௌத்தலோக மாவத்தையிலுள்ள 342/2ஆம் இலக்க இல்லத்தில் கூட்டணித் தலைவர்கள் அக்காலத்தில் தங்கியிருந்தனர். இங்குதான் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
பூமி தோன்றியது எப்போது?
இந்தக் கேள்விக்கு இதுவரை துல்லியமான விடை கிடைத்தபாடில்லை. இருந்தாலும், பல விஞ்ஞானிகளும் தோராயமாக பூமி தோற்றம் குறித்த கருத்துகளை பல கால கட்டங்களில் தெரிவித்திருக்கிறார்கள். புதிதாக இப்போது கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பூமியின் தோற்றம் குறித்து ஆய்வு செய்து ஒரு முடிவை வெளியிட்டிடிருக்கிறார்கள். பூமி தோன்றி 500 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கும் என்பது தான் இவர்கள் வெளியிட்டிருக்கும் புதிய முடிவு. அறிவியல் மற்றும் சுற்றுச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களைக் கொண்டு இதை யூகித்திருக்கிறார்கள் இவர்கள்.
Labels:
அறிவுக்களஞ்சியம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)












