யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தங்கி யிருந்த சிங்கள மக்கள் இப்போது நாவற் குழியில் குடியேறியுள்ளனர். நாவற்குழியிலுள்ள அரச காணியில் அவர்கள் குடியேறியதாக கூறப்படுகின்றது. நாவற்குழியில் அரச காணி இருப்பதாக அவர்கள் எப்படி அறிந்தார்கள். அந்த இடம் எப் படி அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இந்தக் கேள் விகளைக் கேட்பது நமக்கு அழகல்ல என்பதால் அதனை அப்படியே விட்டுவிடலாம்.
சனி, 13 நவம்பர், 2010
இராணுவம் அழைத்துச் சென்ற எனது தாயார் எங்கே?
வன்னி யுத்த நடவடிக்கையின் போது காணாமல் போன தனது தாயைக் கண்டுபிடித்து தருமாறு 13 வயதான சிறுமி ஒருவர் நேற்று சாவகச்சேரியில் இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக்குழு முன் வாக்கு மூலமளித்துள்ளார். செல்வதாசன் இலக்கியா என்ற 13 வயது சிறுமியே தனது தாயைக் கண்டுப்பிடித்து தருமாறு கோரியுள்ளார்.
Labels:
இலங்கை
மாநகர சபை உறுப்பினர் பிரபாகரன் என்னைத்தாக்க முற்பட்டார் – முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தன்!
எனக்கு விடுத்த அழைப்பின் பேரிலேயே நான் மட்டக்களப்பு மாநகர மேயரின் விடுதியில் நடைபெற்ற கூட்டத்திற்கு சென்றேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தன் நேற்றைய சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையகப்பொலிஸ் அதிகாரிகளுக்கு இன்று வழங்கியுள்ள வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
Labels:
இலங்கை
சூசையின் குடும்பத்தவர்களையும் தனது குடும்பத்தவர்களையும் விடுவித்து உதவ வேண்டும் ‐ சகோதரர் கோரிக்கை!
கடலில் வைத்து கைது செய்யப்பட்ட புலிகளின் கடற்படைத் தளபதி சூசையின் குடும்பத்தவர்களையும் தனது குடும்பத்தவர்களையும் விடுவித்து உதவ வேண்டும் என என சூசையின் சகோதரர் இன்று நெல்லயடிப்பகுதியில் வாக்குமூலம் அளித்திருந்தார்.
Labels:
இலங்கை
ஆங் சான் சூகி விடுதலை!
மியான்மர் நாட்டின் ஜனநாயக தேசிய லீக் கட்சித் தலைவர் ஆங் சான் சூகி விடுதலை செய்யப்பட்டார். மியான்மரில், கடந்த 1990ல் ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில், தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவர் ஆங் சான் சூகி அமோக வெற்றி பெற்றார். ஆனால், அவரை ஆட்சிக்கு வர விடாமல் ராணுவ ஆட்சி, வீட்டுச் சிறையில் அடைத்தது.
Labels:
உலகப்பார்வை
மண் ஜாடி £53.1 கோடி பவுண்ட்ஸ்க்கு விற்பனை
சீனாவின் மண் ஜாடி ஒன்று இதுவரை இல்லாத வகையில் £53.1 கோடி பவுண்ட்ஸ்க்கு விற்று புதிய சாதனை படைத்துள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
ஜனநாயக வழியில் நாங்கள் தொடர்ந்து போராடுவோம் வெற்றியளிக்காவிட்டால் மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது
யுத்தம் என்பது முடிவல்ல. எங்களது அபிலாசைகள் என்றுமே முடிவற்றதாகும். யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதன் மூலம் எமது அபிலாசைகளும் முடிவிற்கு வந்து விட்டதாக அர்த்தப்பட மாட்டாது எனத் தெரிவித்தார் யாழ் மாவட்ட அரசியல் பிரமுகரும் அரச சார்பற்ற அமைப்புப் பிரதிநிதியுமான சிவிகே சிவஞானம்.
Labels:
இலங்கை
கடத்திச்செல்லப்பட்ட என் கணவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதையாவது தெரியப்படுத்துங்கள்
எனது குழந்தைக்கு ஒன்பது மாதங்களாக இருந்தபோது நீர்கொழும்பில் வைத்து எனது கணவர் 2006ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டார். அவர் இல்லாமல் நான் தவித்துக்கொண்டிருக்கிறேன். பல கஷ்டங்களுக்கு மத்தியில் பிள்ளையை வளர்த்துக்கொண்டிருக்கிறேன். எனவே எனது கணவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா? என்பதையாவது எனக்குத் தெரியப்படுத்துங்கள் என நெய்னா முகமட் றிஸானா என்ற குடும்பப்பெண் ஆணைக்குழு முன்னிலையில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
Labels:
இலங்கை
கண்களால் கண்ட நேரடி காட்சிகளுக்கு இரகசிய சாட்சியமளிக்க நாம் விரும்பவில்லை
கண்களால் கண்ட நேரடி காட்சிகளுக்கு இரகசிய சாட்சியமளிக்க நாம் விரும்ப வில்லை இறுதி நேர யுத்தத்தின் போது இராணுவத்தால் கைது செய்யப்பட்ட எனது மகனுக்கு என்ன நடந்துள்ளது என்பதை நீங்கள் கண்டறிந்து கூற வேண்டும் என ஆணைக் குழு முன் வயோதிப பெற்றோர்கள் சாட்சி யமளிக்கையில் கேட்டுக் கொண்டனர்.
Labels:
இலங்கை
குண்டு விழுந்ததால் அனைவரும் செத்துப்போனார்கள் 5 வயது சிறுமி தெரிவிப்பு
புதுமாத்தளனில் இருந்த எனது இல்லத்தில் நானும் எனது தம்பியும் அம்மாவும் அப்பாவும் தூங்கிக்கொண்டிருக்கையில் குண்டு விழுந்தது. இதனால் அனைவரும் செத்துப் போனார்கள்.
Labels:
இலங்கை
ஜேர்மன் முதியவர் மொறட்டுவையில் கொலை
மொறட்டுவையில் 90 வயதான ஜேர்மன் நாட்டு முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது சிங்கள மனைவிக்குப் பிறந்த மகன் ஒருவரே இவரைக் கொலை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
இலங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






