இங்கிலாந்தின் யார்க் பகுதியை சேர்ந்தவர் கிளாரி ரோடஸ் (34). திருமணமாகி, 4 குழந்தைகளை பெற்றெடுத்தவர். இவருக்கு ஒரு பாதிப்பு. உடலில் இருந்து திடீர் திடீரென அழுகிய மீன் நாற்றம் வீசும். சுற்றி இருப்பவர்கள் அலறி ஓடுவார்கள். சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக இவருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. இதுபற்றி கிளாரி கூறியதாவது: 20 வயது முதல் இந்த பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறேன். ஆரம்பத்தில் குப்பென்று நாற்றம் வீசியது. வியர்வை, சிறுநீர் மட்டுமின்றி மூச்சு காற்றுகூட அழுகிய மீன் நாற்றம் அடிக்கும். எனக்கே பொறுக்க முடியவில்லை.
வியாழன், 19 ஏப்ரல், 2012
சவூதியில் உயிரிழந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்
அண்மையில் சவூதி அரேபியாவில் உயிரிழந்த இலங்கைப் பெண், கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மூன்று மாடிக் கட்டடமொன்றிலிருந்து விழுந்து இவர் உயிரிழந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
Labels:
உலகப்பார்வை
கோழிக்குஞ்சை ஈன்ற கோழி
கோழியொன்று முட்டையிடுவதற்குப் பதிலாக தனது உடலுக்குள் பொரிக்கப்பட்ட குஞ்சை ஒன்றை ஈன்ற சம்பவம் வெலிமடையில் இடம்பெற்றுள்ளது. வழமையாக முட்டை இடும் இந்த கோழி சில நாட்களாக முட்டையிடாமல் இருந்த நிலையில் கோழிக்குஞ்சு ஒன்றை ஈன்றுள்ளது. வெளிமடை, கெந்திரிமுல்ல, நெடுன்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.எம்.ரஞ்சித் என்பவரின் வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
சவுதி முட்டாள்களின் சட்டம்- அப்பாவி பெண் சிரச்சேதம் செய்யப்பட உள்ளார்!
சவூதி அரேபியாவில் 13 வயதான ஒரு சிறுமியை மாந்திரீகத்தின் மூலம் வசியம் செய்தார் என்ற சந்தேகத்தில் இலங்கைப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியாக காணப்பட்டால் இப்பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். சவூதி அரேபியாவில் குற்றவாளியாக காணப்படும் மாந்திரீகவாதிகள் சிரச்சேதம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







