ஞாயிறு, 28 ஏப்ரல், 2013
“விடுதலைப் புலிகளுக்கு புதிய தலைவர் இல்லை! அம்மானே தலைவர்” ஆதித்தன் மாஸ்டர் ஆவேசம்!
விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் ஒருவரை இலங்கை அரசு வெளிநாட்டில் அடையாளம் கண்டுள்ளது என சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளதாக தமிழ் ஊடகங்கள் தெரிவித்திருப்பது, “அடிவருடி விஷமிகளில் ஏகாதிபத்திய சதிச்செயல்” என வர்ணித்துள்ளது, வெளிநாட்டு விடுதலைப் புலிகள் நெடியவன் படையணி.
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
விடுதலை புலிகளின் புத்தம் புதிய தலைவர் அடையாளம் காணப்பட்டார்! இவர்தான் ‘டாப்’பாம்!!
விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் ஒருவரை இலங்கை அரசு வெளிநாட்டில் அடையாளம் கண்டுள்ளது என சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது. அதையடுத்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது,
Labels:
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
விடுதலைப்புலிகளுக்கு பின்னரான காலமும் - செங்கலடி சம்பவமும்
மட்டக்களப்பு பிராந்தியத்தில் பண்பாட்டு விழுமியங்களில் சிறந்து விளங்கும் கிராமங்களில் செங்கலடிக்கு முக்கிய இடம் உண்டு. பாரம்பரிய ஒழுக்க கட்டுப்பாட்டுடன் விளங்கும் படுவான்கரை கிராமங்களை போல எழுவான்கரை கிராமான செங்கலடி பழைமையான தமிழ் கிராமமாகும். அந்த கிராமத்தில் தான் இந்த அதிர்ச்சியூட்டும் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. அதுவும் செங்கலடியின் பாரம்பரிய குடும்பம் ஒன்றில் தான் இது நடந்திருக்கிறது.
செங்கலடியில் பரம்பரை பணக்காரர்கள் வரிசையில் காலஞ்சென்ற முன்னாள் மாவட்ட சபை தலைவர் சம்பந்தமூர்த்தி, முன்னாள் அமைச்சர் தேவநாயகம், அதிபர் சுந்தரமூர்த்தி ஆகியோரை குறிப்பிடலாம். ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் வளர்த்த ஓய்வு பெற்ற அதிபர் சுந்தரமூர்த்தியின் குடும்பம் தான் இப்போது தமிழர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
அதிபர் சுந்தரமூர்த்தியின் ஒரே ஒரு மகளான விப்ராவின் மகள் தான் இந்த உலக சாதனையை செய்திருக்கிறார். தாயையும் தந்தையும் காதலனைக்கொண்டு வெட்டிக்கொலை செய்வித்தது மட்டுமன்றி தந்தையின் கண்களை தோண்டுமாறு கேட்ட விசித்திர குணம் கொண்ட பெண்ணை மட்டக்களப்பு சமூகம் இதுவரை கண்டதில்லை.
இந்த சம்பவம் பற்றி பேசும் பெரும்பாலானவர்கள் ஒரு உண்மையை மட்டும் உணர்ந்து கொள்கிறார்கள். விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் இப்படி சமூகம் சீரழிந்திருக்காது என்ற உண்மையை பெரும்பாலானவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



