ஞாயிறு, 10 நவம்பர், 2013

உன்னை விடமாட்டேன்!

பாகிஸ்தான் தலிபான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முல்லா ஃபஸ்லுல்லா.
 
நமக்கு மலாலாவைத் தெரியும். ஆனால் மலாலாவைச் சுடச் சொல்லி உத்தரவிட்ட முல்லா ஃபஸ்லுல்லாவைத் தெரியாது. தாலிபன்கள் அந்தப் பெண்ணைச் சுட்டார்கள் என்று பொதுவாகச் சொல்லிவிடுவார்கள். அன்று குண்டடிக்கு முன்பும் சரி, இன்று புத்தகத்துக்குப் பின்னும் சரி. மலாலாமேல் தீராத கொலைவெறி வளர்த்துக்கொண்டிருக்கும் இந்த முல்லா ஃபஸ்லுல்லாதான் இன்றைக்கு பாகிஸ்தானிய தாலிபன் அமைப்பின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

கமல் ஏற்கத் தயங்கும் கதாபாத்திரம்

இன்று இருக்கும் இந்திய நடிகர்களில் கமல் ஹாசன் அளவுக்குச் சினிமாவுடன் இரண்டறக் கலந்த நபர் அநேகமாக யாருமில்லை. நான்கு வயதில் ஆரம்பித்து இன்றும் தொடர்ந்து களத்திலிருக்கும் நடிகர் இல்லை. 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' என்று இறைஞ்சிய அந்தப் பிஞ்சு முகத்துக்கும் 'யாரென்று தெரிகிறதா, இவன் தீ என்று புரிகிறதா?' என்று நிமிர்கிற விஸ்வரூபத்துக்கும் இடையில் அரை நூற்றாண்டுக் காலம் ஓடிப்போயிருக்கிறது. அதில் தமிழ்சினிமாவின் ஐம்பதாண்டுக் காலமும் அடங்கியிருக்கிறது.

நாங்கள் அகதிகள்தான்... தீவிரவாதிகள் அல்ல...- வேலை மறுக்கப்படும் ஈழப் பட்டதாரி இளைஞர்கள்

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஆயிரக்கணக்கான தமிழர்களுக்காக அமைக்கப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை, தற்போது 112-ஆக உள்ளது. இங்கு வசிக்கும் சுமார் 68 ஆயிரம் பேரில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள், இளைஞர்கள். முகாம் தமிழர்கள் சமீபக் காலமாகக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

மென்மையான பாதங்களைப் பெற சில சூப்பர் டிப்ஸ்...

குளிர்க்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் சருமத்தில் வறட்சி அதிகம் ஏற்படும். இத்தகைய வறட்சி சருமத்தின் மென்மைத்தன்மை மற்றும் அழகையே கெடுத்துவிடும். எனவே இந்த வறட்சியை போக்க முயற்சிப்பது அவசியமாகிறது. அதிலும் தற்போது சருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்குவதற்கு பல்வேறு மாய்ஸ்சுரைசர்கள் வந்துள்ளன. அதுவும் சருமத்தின் வகைகளுக்கு ஏற்ப கிடைக்கின்றன. ஆகவே அதனைப் பயன்படுத்தினால், வறட்சியைப் போக்கலாம்.

ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள்!!!

குடலிறக்கம் என்பது ஒரு உறுப்பில் உள்ள துவாரத்தின் வழியே அதன் தசைச்சுவரில் ஏற்படும் புடைப்பாகும். இத்தகைய குடலிறக்கம் தொப்புள், அடிவயிறு போன்ற இடங்களில் உள்ள தசைப்பகுதிகளில் ஏற்படக்கூடியது. மேலும் இந்த பிரச்சனை சிறுவர் முதல் பெரியவர் வரை என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இந்த ஹெர்னியா என்னும் குடலியக்கம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன.

இயற்கையாகவே கருச்சிதைவை ஏற்படுத்தும் உணவுகள்!!!

இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னர் கருத்தரிக்கலாம் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ, உணர்ச்சி வேகத்தில் கருத்தரித்துவிட்டால் அது பெரிய ஆச்சரியத்தையும் தரும். அதிலும் வாழ்வில் நல்ல நிலையில் இல்லாமல், எதிர்பார்க்காத வேளையில் கருத்தரித்துவிட்டால், அது சந்தோஷத்தை விட கஷ்டத்தை தான் அதிகம் கொடுக்கும். ஆகவே அந்த நிலையில் செயற்கை முறையில் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு கருவை கலைப்பதற்கு பதிலாக, இயற்கை முறையில் கருவைக் கலைத்தால் நல்லது.

ஆண்களால் சகித்துக் கொள்ள முடியாத 8 விஷயங்கள்!!!

உலகில் நரகத்தை கூட சகித்துக்கொள்ளும் ஆண்களும் உண்டு, அதே சமயம் ஒரு ஈயின் தொல்லையை கூட சகிக்க முடியாத ஆண்களும் உண்டு. இந்த தொழில்நுட்ப யுகத்தில், ஆண்கள் தங்கள் சகிப்புத்தன்மையை மிகவும் இழப்பவர்களாக உள்ளனர். விளையாட்டு நேரத்தில் மின்வெட்டு ஏற்படுவது போன்ற சிறிய விஷயத்திற்கு கூட அவர்கள் தங்கள் பொறுமையை இழக்கின்றனர். சிலரால் தங்கள் நண்பர்களின் வெற்றியை சகித்துக் கொள்ள முடியாது. அது போல உயர்ந்த கொள்கையுடைய சில ஆண்களால் இலஞ்சம் போன்ற விஷயங்களை சகித்துக்கொள்ள முடியாது. ஒவ்வொருவரும் மாறுபட்டவர்களாக இருப்பதால், அவர்களின் வெறுப்புணர்ச்சியை பாலினத்தை வைத்து கூற இயலாது.

குழந்தைகளின் கவனத்தை அதிகரிக்க சில டிப்ஸ்...

குழந்தைகள் வளர வளர அவர்களது விளையாட்டுத்தனத்தால், எதிலும் ஒருவித சரியான ஈடுபாடு மற்றும் கவனம் இருக்காது. ஆனால் இப்படி அவர்களது கவனக்குறைவால், அவர்கள் பள்ளி செல்லும் போது மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாவார்கள். இருப்பினும் பெற்றோர்கள் குழந்தைகள் பள்ளி செல்லும் முன்பிருந்தே அவர்களின் கவனத்தை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தால், பள்ளி செல்லும் போது படிப்பில் அதிகம் கவனத்தை செலுத்துவார்கள்.

ஆந்திரா ஸ்டைல்: நாட்டுக்கோழி குழம்பு

சிக்கனில் நாட்டுக்கோழி தான் நல்லது என்று சொல்வார்கள். அதுமட்டுமின்றி, ப்ராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி கொண்டு செய்யப்படும் குழம்பு தான் சுவை அதிகமாக இருக்கும். அதிலும் இந்த நாட்டுக்கோழியை ஆந்திரா ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.
ஏனெனில் ஆந்திரா ஸ்டைலில் உள்ள ஒரு வித்தியாசம் என்றால் அது மசாலா பொருட்களை சேர்க்கும் விதம் தான். சரி, இப்போது அந்த ஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல