பிரித்தானியாவில் கடைத்தொகுதி ஒன்றை நடத்தி வந்த 48 வயதுடைய இலங்கையரான சுப்பபையா தர்மசீலன் என்பவர் கொள்ளையர்களால் கத்தியினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
திங்கள், 29 நவம்பர், 2010
அவர் வேண்டுமென்றே அப்படிச் செய்யவில்லை
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வேண்டுமென்றே தமிழ்த் தலைவர்களைச் சந்திப்பதைத் தவிர்க்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
Labels:
இலங்கை
மற்றுமொரு இலங்கை பெண் உயரிழந்துள்ளார்!
வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த, மற்றுமொரு இலங்கை பெண் உயரிழந்துள்ளார். மகரகம தாபவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.டப்ளியூ.நந்தாவதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டில் சவூதி சென்றதுடன் இந்த வருடம் நாடு திரும்பவிருந்தார்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இலங்கை,
தமிழர்கள்
அரசியல் தீர்வு இல்லாவிடின் மீண்டுமொரு பிளவு ஏற்படும்
அகிம்சைப் போராட்டத்தின் போது சிங்களத் தலைவர்கள் உரிய அரசியல் தீர்வு வழங்காததன் காரணமாகவே ஆயுதப் போராட்டம் ஏற்பட்டது. மீண்டுமொரு யுத்தம் வரக்கூடாது என் பதில் நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். அந்த யுத்தம் ஏற்படக் காரணமாக இருந்த விடயங்களுக்கு அரசியல் தீர்வு வழங் கப்படாவிட்டால் மீண்டுமொரு பிளவு ஏற்படவே அது வழிவகுக்கும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
Labels:
இலங்கை
மக்களை வெளியேற உத்தரவு!
கிளிநொச்சி இரத்தினபுரம் கிராமத்தில் நீண்டகாலமாக குடியிருந்த மக்களை அங்கி ருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ள தால் மக்கள் குழப்பமடைந்துள்ளதாக தெரி விக்கப்படுகிறது. இரத்தினபுரம் சிங்களப் பாடசாலைக்குப் பின்புறமாகவுள்ள நிலத்தில் 1994ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் குடியிருந்துள்ளனர்.
Labels:
இலங்கை
ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது
பிரித்தானியாவில் கைது செய்யப்படலாம் என முன்னர் தனது பயணத்தை ஒத்திவைத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று பிரித்தானியா நோக்கிப் புறப்பட்டார். தனிப்பட்ட பயணமாக பிரித்தானியாவுக்கு செல்லும் அவரின் பாதுகாப்புக்களை தம்மால் உறுதிப்படுத்த முடியாது என பிரித்தானிய அதிகாரிகள் பிரித்தானியாவில் உள்ள தூதரகத்திடம் தெரிவித்துள்ளனர்.
Labels:
இலங்கை,
உலகப்பார்வை
வீக்கி லீக்ஸ் இணையத்தில் இலங்கை இரகசியங்கள்
விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் வசம் உள்ள இரண்டு இலட் சத்து ஆயிரத்து 287 இரகசிய ஆவணங்களில் மூவாயிரத்துக்கும் அதிகமானவை இலங்கை தொடர்பானவையாகும். இவற்றில் சீனா தொடர்பான 8 ஆயிரத்து 320 ஆவணங்களும் ஆப்கானிஸ்தான் தொடர்பாக 7 ஆயிரத்து 95 ஆவணங்களும் இந்தியா தொடர்பாக 5 ஆயிரத்து 87 ஆவணங்களும் பாகிஸ்தான் தொடர்பாக 4 ஆயிரத்து 775 ஆவணங்களும் இலங்கை தொடர்பாக 3 ஆயிரத்து 166 ஆவணங்களும் பங்களாதேஷ் தொடர்பாக 2 ஆயிரத்து 182 ஆவணங் களும் அடங்கியுள்ளன.
Labels:
இலங்கை,
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





