வியாழன், 11 நவம்பர், 2010

இராணுவத்திடம் சரணடையும் விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு வழக்கப்படும் என்ற அறிவித்தலை ஏற்றே எனது கணவர் சரணடைந்தார்.

புதுவையின் மனைவி
யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை நடத்திய படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களாகிய யோகரட்ணம் யோகி, புதுவை இரத்தினதுரை ஆகியோரின் மனைவிமார் சாட்சியமளித்துள்ளார்கள்.

ஆபாச படத்தில் நடித்த மூவர் இனங்காணப்பட்டு ஒருவர் கைது

கையடக்க தொலைபேசி ஆபாச இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டிருந்த புகைப்படங்களில் இருந்த 3 பெண்களை இனங்கண்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் சமர்ப்பித்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் மகளிர் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலத்தில் ஆபாச படங்களில் காணப்பட்ட 83 பேரின் புகைப்படங்கள் ஊடகங்களில் பிரசுரிக்கபட்டதன் மூலம் இவர்கள் மூவரும் இனம் காணப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்களை கைது செய்வது தொடர்பில் பொதுமக்களின் உதவி அவசியம் எனவும் மகளிர் மற்றும் சிறுவர் பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சமீப காலங்களில் 180 க்கு மேற்ப்பட்ட இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் காணப்பபட்ட புகைப்படங்களை கொண்டு, அவற்றில் உள்ளவர்களை கைது செய்து முற்றிலும் இதுபோன்ற நடவடிக்கைகளை இல்லாதொழிக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாவற்குழியில் குடியேறச் சென்ற தமிழ் மக்கள் திருப்பப்பட்டனர்

நாவற்குழிப்பகுதியில் குடியேறச் சென்ற தமிழ்க்குடும்பங்கள் நேற்று பொலிஸாரால் திருப்பி அனுப்பப்பட்டதாக பெண் ஒருவர் தெரிவித்தார். 1995 வரையான காலப்பகுதியில் இங்கு குடியிருந்த நூற்றுக்கும் அதிகமான மக்கள் அருகில் இருந்த உறவினர்களின் வீடுகளிலேயே வாழ்ந்துவந்தனர். குறித்த அரச காணி ஏற்கனவே அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.

இப்குதியில் ஏற்கனவே அவர்கள் குடிய மர முற்பட்ட போதும் அப்பகுதிக் கிராம அலுவ லர் அதற்கான அனுமதியை மறுத்துவிட் டதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டினர்.இந்நிலையில் சிங்கள மக்கள் குடியேற் றப்பட்டமை தொடர்பில் அச்சம் கொண்டி ருந்த அவர்கள் தமது காணிகள் பறிபோவ தாக எண்ணி நேற்றுக்காலை அங்கு குடியே றுவதற்கு தயாரான நிலையில் தற்காலிக கொட்டில்களை அமைக்கும் பொருட்டு அங்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் அவர்களை விரட்டியுள்ளனர். அவர்களது முயற்சி தோல்வியடைந்த நிலையில் அப்பகு தியிலுள்ள படை முகாமின் முன்னால் குவிந்து நின்றனர். படையினர் உரிய நடவடிக்கை எடுப் பதாக வழங்கிய உறுதிமொழிகளை அடுத்து அவர்கள் ஏற்கனவே அடைக்கலம்புகுந்தி ருந்த உறவினர் வீடுகளுக்குத் திரும்பினர்.

தீர்த்தத்தில் நீராடிய மாணவன் உயிரிழப்பு

நல்லூர் கந்தன் ஆலயத் தீர்த் தக் கேணியில் நீராடிய மாணவன் ஒருவர் நேற்று பரிதாபகரமாக உயிரிழந்தார்.நேற்றுமாலை இடம் பெற்ற இத் துயர சம்பவத்தில் கந்தர் மடம் பழம் வீதியை சேர்ந்தவரும் கந்தர்மடம் சைவப் பிரகாச வித்தியாலய மாண வனுமாகிய தர்மகுலசிங்கம் கனிஷ்டன் வயது 14 என்பவரே உயிரிழந்த வராவார்.

நேற்று மாலை ஆலய வெளி வீதியில் சூரன் போர் நடந்து கொண் டிருந்த வேளை இத் துயரச்சம்பவம் இடம் பெற்றது.தீர்த்தக் கேணியில் குளித்துக் கொண்டிருந்த பிரஸ்தாப மாணவன் திடீரெனக் காணாமல்போக அவரைத் தேடிய போது நீரில் மூழ்கிய நிலையில் அவர் மீட்கப்பட்டு உடனடியாக யாழ். போதனா வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

அவர் அங்கு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. நல்லூர் கந்தன் ஆலயத்தில் நடந்த இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது.

நீச்சல் குளமானது கொழும்பு..!

கொழும்பிலும், புறநகர் பகுதிகளிலும் இடைவிடாது பெய்துவருகின்ற அடைமழையின் காரணமாக கொழும்பில் பாரிய அளவில் நீர்தேங்கி நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொழும்பில் போக்குவரத்து சீரற்று காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வௌ்ளத்தினால் 2,00,000 பேர் பாதிப்பு - மீட்பு பணியில் ஹெலிஹொப்டர்கள்

கொழும்பிலும், புறநகர் பகுதிகளிலும் பெய்த அடை மழையின் காரணமாக கொழும்பில் 5500 குடும்பங்களும், மத்திய கொழும்பில் மற்றும் வட கொழும்பில் 30,000 குடும்பங்களும் கம்பஹாவில் 2000 குடும்பங்களும், மேல்மாகணம் மற்றும் கிழக்கில் 5000 குடும்பங்களும் உட்பட 60,000 குடும்பங்களைச் சேர்ந்த 2,00,000 பேர் வரையிலானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை நடக்கும் ஆனா! நடக்காது!

நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையில் ஒன்று, இன்றுவரை பிரபல்யம் பெற்றுள்ளது.மாலைக் கண் வியாதியுள்ள ஒருவர் வாடகைக் கார் வைத்திருந்தார். வடிவேலு அவரிடம் வாட கைக்கு கார் வருமா? என்று கேட்கின்றார். அதற்கு, அந்தக் கார்ச் சாரதி வரும் ஆனா வராது என்று பதிலளிக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் நடக்கும் மீற்றிங் கலாசாரம்

அதிகாலை வேளையில் எழுந்து பஸ் பிடித்து தேவையை நிறைவு செய்வதற்காக கந்தோருக்குச் செல்கிறார் ஒருவர். கந்தோர் வாசலில் நிற்பவர் என்ன என்று வினவுகிறார். ஐயாவைச் சந்திக்க என்பது பதிலாக இருக்க, ஐயாவைச் சந்திக்க முடியாது என்ற பதில் அதிரடியாக வருகிறது.

ஏன்?

யாழில் இளம் பெண்ணுக்கு எயிட்ஸ் - அதிர்ச்சியில் யாழ்.போதனா வைத்தியசாலை!

யாழ்ப்பாண போதனா வைத்திய சாலையில் இருபது வயதுடைய இளம் யுவதி ஒருவருக்கு எச்.ஐ.வி. எயிட்ஸ் தொற்று இருப்பது நேற்றைய தினம் கண்டறியப்பட்டுள்ளது.இருபது வயதுடைய இளம் பெண் ஒருவருக்கு எச்.ஐ.வி. தொற்று இனங் காணப்பட்டிருப்பது பேராபத்து என யாழ். போதனா வைத்தியசாலை அதிர்ச்சியடைந்துள்ளது.

நாவற்குழி விவகாரம்

தமிழர்களின் பாரம்பரியங்களை அழிக் கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.எந்தவித அனுமதியுமின்றி நாவற்குழியில் சிங்கள மக்கள் குடியமர்த் தப்பட்டமை தொடர் பாக கருத்துத் தெரிவித்த போதே அவர் இத னைக் கூறினார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல