ஞாயிறு, 27 ஜூலை, 2014

விண்டோஸ் 8ல் ஷட் டவுண் செய்திட(shutdown) ஒரு ஷார்ட் கட் உருவாக்க...

கீழ்க்காணும் செட் அப் வழிகளை மேற்கொள்ளவும்.

1. உங்களுடைய டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனுவில், “New” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து “Shortcut” என்பதனையும் கிளிக் செய்திடவும்.

மானிட்டர் திரையில் எந்த எந்த கீகள் அழுத்தப்பட்டு இயக்கத்திற்காக உள்ளன என்று அறிய

இணையத்தில் இதற்கென புரோகிராம் ஒன்று கிடைக்கிறது. அதன் பெயர் கீ போர்ட் இண்டிகேட்டர் (Keyboard Indicator). இதனை இயக்கிவிட்டால், கேப்ஸ் லாக், ஸ்குரோல் லாக் மற்றும் நம் லாக் கீகளின் அப்போதைய நிலையை சிஸ்டம் ட்ரேயில் காட்டும்.

தெரிந்து கொள்ளுங்கள்

Mother Board: (மதர் போர்ட்)பெர்சனல் கம்ப்யூட்டரில் இருக்கும் எலக்ட்ரானிக் சர்க்யூட் போர்ட். இதன் மூலம் தான் கம்ப்யூட்டரின் அனைத்து பாகங்களும் (மானிட்டர், கீ போர்ட், மவுஸ், பிரிண்டர் போன்றவை) இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுகின்றன.

வேர்ட் : டிப்ஸ்

புல்லட் பாய்ண்ட்ஸ்

வேர்டில் டெக்ஸ்ட்டின் சில பாகங்களை முக்கியப்படுத்தவும் கோர்வையாக வரிசைப்படுத்திக் காட்டவும் புல்லட் பாய்ண்ட்ஸ் பயன்படுத்துகிறோம். இதற்கு வழக்கமாக பார்மட் மெனு சென்று இதற்கான பிரிவினைத் தேர்ந்தெடுக்கிறோம். அல்லது டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து மெனு பாரில் அதற்கான ஐகானைக் கிளிக் செய்கிறோம். இதற்குப் பதில் புல்லட் அமைக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டில் கர்சரை வைத்து பின் கண்ட்ரோல்+ஷிப்ட்+எல் அழுத்தினால் போதும். தானாக புல்லட் அமைந்துவிடும். கண்ட்ரோல்+ஷிப்ட்+என் அழுத்தினால் இந்த புல்லட் பாய்ண்ட்கள் நீங்கிவிடும்.

சிஸ்டத்திற்கான தனிப்பிரிவு

விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை நம் கம்ப்யூட்டரில் அமைக்கும் போது, இவை கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் “System Reserved” என்று ஒரு பிரிவை உருவாக்குகின்றன. விண்டோஸ் இந்த பிரிவிற்கு எந்த ஒரு தனி ட்ரைவின் பெயரை அமைப்பதில்லை. எனவே, இதனை Disk Management போன்ற ஒரு பயன்பாட்டு கருவியைப் பயன்படுத்தினால் தான் நாம் பார்க்க முடியும்.

லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர்

அண்மையில் வெளியான ஒரு தகவல் லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. விண்டோஸ் பயன்படுத்தப்படும் லேப்டாப் கம்ப்யூட்டரில், குரோம் பிரவுசரைப் பயன்படுத்தினால், அது அதன் பேட்டரியின் திறனை வெகுவாகக் குறைத்து, கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை மந்தப்படுத்துகிறது
என்பதுதான்.

கூகுள் தரும் ஆங்கில சொல் எழுத்து சோதனை தளம்

கூகுள் அண்மையில் இன்னும் ஒரு குரோம் சோதனை தளம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. இந்த தளத்தின் மூலமாக, ஆங்கிலச் சொற்களின் எழுத்துக்கள் சார்ந்த நம் திறனை சோதனை செய்து கொள்ளலாம்.

விண்டோஸ் 7ல் "GodMode" உருவாக்க

GodMode: இது ஒரு மிக மிகப் பயனுள்ள டூல். விண்டோஸ் 7 சிஸ்டத்தின் இயக்க செயல்பாடுகள் அனைத்தையும் இதன் மூலம் செட் அப் செய்திடலாம்.

ஏறத்தாழ 270 சிஸ்டம் அமைப்பு செயல்பாடுகளை இதன் மூலம் மேற்கொள்ளலாம்.

விண்டோஸ் 7ல் சில ஷார்ட்கட் கீகள்

1. புரோகிராமிற்கான ஐகான் ஒன்றில் கிளிக் செய்திடும் முன், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு கிளிக் செய்தால், அந்த புரோகிராமின் விண்டோ ஒன்று ஏற்கனவே திறந்து செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், புதியதாக ஒரு செயல்பாட்டு விண்டோ திறக்கப்படும். எடுத்துக் காட்டாக, வேர்ட் புரோகிராமினைத் திறந்து, டாகுமெண்ட் ஒன்றில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். புதிய விண்டோ ஒன்றில், புதிய டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க வேண்டும் எனில், இவ்வாறு செய்திடலாம். புதிய வேர்ட் விண்டோ ஒன்று திறக்கப்படும்.

விண்டோஸ் 7ல் பைல்களை சுவடு இன்றி அழிக்க

நாம் அலுவலகத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிற கம்ப்யூட்டரை, அடுத்து நம் இருக்கையில் அமர்ந்து செயல்படப் போகும் இன்னொருவரிடம் தர வேண்டியதிருக்கும். நம் கம்ப்யூட்டரில் நம் சொந்த பைல்களைப் பதிந்து வைத்திருக்கலாம். என்னதான் அழித்தாலும், Recuva போன்ற புரோகிராம்களால், அவற்றை மீண்டும் பெற்றுவிடாலம்.

விண்டோஸ் 7ல் பிரச்னைகளை மற்றவருக்குத் தெரிவிக்க

கம்ப்யூட்டரில் பிரச்னை ஒன்று ஏற்படுகையில், அதனை மற்றவருக்கு இதனால் தான், அல்லது இந்த செயல்பாட்டின் போதுதான் பிரச்னை ஏற்பட்டது என்று சொன்னால் தான் புரியும். இதனை எப்படிச் சொல்வது?
பிரச்னை ஏற்படுகையில், கம்ப்யூட்டர் செயல்பாட்டில், என்ன என்ன ஏற்பட்டது என நமக்குத் தெரியுமா? இதனை பதிவு செய்திடும் வகையில் டூல் ஒன்றை விண்டோஸ் 7 கொண்டுள்ளது.

பத்து நிமிடங்களில் ஹார்ட் டிஸ்க் சுத்தம்

கம்ப்யூட்டரில் நாம் உருவாக்கும் பைல்கள் அனைத்தையும், அப்படியே சில ட்ரைவ்களிலும் போல்டர்களிலும் சேவ் செய்து அமைத்து விடுகிறோம். இருப்பினும் இவை குப்பையாகவே அமைகின்றன. தொடர்பில்லாத போல்டர்களில் பைல்களை அவசரத்திற்கு வைத்துவிட்டு, பின்னர் மாற்ற மறக்கிறோம். ஒரே பைலின் சில நகல்களை வேறு போல்டர்களில் வைத்துவிட்டு அதனையும் மறக்கிறோம். இதனால், நாம் ஒழுங்காக அமைப்போம் என இலக்கு வைக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க், ஒரு குப்பைக் கிடங்காகப் போய்விடுகிறது. இதனை எப்படி 10 நிமிடத்தில் சரி செய்து சுத்தப்படுத்த முடியும். சில வழிகளை இங்கு காணலாம்.

சுருக்குச் சொற்கள் தெரிந்து கொள்ள

இன்றைய நடப்பில், பல நிறுவனங்கள் அவற்றின் சுருக்குச் சொற்களாலேயே (acronyms) ஆங்கில மொழியில் அழைக்கப்படுகின்றன. ஏன், பல பொருட்கள், பல கருத்துருக்கள், பல இடங்களும் சுருக்குச் சொற்களாலேயே சுட்டிக் காட்டப்படுகின்றன.

வேர்ட் டிப்ஸ்... தானாகச் சுழன்று செல்ல

வேர்ட்: தானாகச் சுழன்று செல்ல

மிக நீளமான டாகுமெண்ட்டில், வேகமாக பக்கங்களைச் சுழற்றிச் செல்ல, நமக்கு மவுஸில் உள்ள சிறிய சக்கரம் உதவுகிறது. இரண்டு பட்டன்களுக்கிடையே இந்த சிறிய சக்கரம் நமக்குத் தரப்படுகிறது. மவுஸை டாகுமெண்ட்டில் வைத்து, இந்தச் சிறிய சக்கரத்தினை அழுத்தி இழுத்தால், பக்கங்கள் வேகமாக, நாம் நகர்த்துவதற்கு ஏற்ப, கீழாகவோ, மேலாகவோ நகர்ந்து செல்லும். ஆனால், இப்போது வரும் சில மவுஸ் சாதனங்களில், இந்த வீல் இருப்பதில்லை. இருப்பினும் இந்த வசதியைப் பெறுவதற்கு சில செட்டிங்ஸ் அமைப்புகள் உள்ளன. அவற்றைப் பார்க்கலாம்.

சவூதியில் சித்திரவதை, காயத்துடன் திரும்பிய தமிழ் பெண்! (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து சவூதி அரேபியாவுக்கு தொழில் வாய்ப்புக்காக கடந்த வருடம் சென்ற பெண் ஒருவர் வீட்டு எஜமானால் துன்புறுத்தப்பட்டு நாட்டுக்கு வந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் தூங்கிய நீதிபதி…!!

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் கிரவுன் கோர்ட்டில் சிறுமி கற்பழிப்பு வழக்கு நடந்து கொண்டிருந்தது. அப்போது சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடந்தது.

சவூதியில் காணாமல் போயுள்ள மகளை மீட்டுத் தருமாறு தாய் வேண்டுகோள்…!!

வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்ற தனது மகள், கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாகியும் திரும்பி வரவே இல்லை.

எழிலன் பிடித்த எங்கள் பிள்ளைகள் எங்கே? காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் அனந்தியிடம் கேள்வி

முல்லைத்தீவில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்திக்கு எதிராக பெருமளவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விடுதலைப்புலிகளால் பலாத்கார ஆட்சேர்ப்பில் பிடிக்கப்பட்டு காணாமல் போன இளைஞர் யுவதிகளின் உறவுகளே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உமது கணவரை நீ தேடுகிறாய். உமது கணவனால் காணாமல் போன எங்கள் பிள்ளைகளை யார் தேடுவது என பல பதாகைகளை ஏந்திய வண்ணம் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடலை தேடும் ஆவிகள்

மரணம் ஏற்பட்ட வீட்டிற்கு சென்று வந்தவுடன் துணிகளை துவைத்து குளிக்க வேண்டும் என்று இந்து மதத்தில் வலியுறுத்தப் படுகிறது
அந்த காலத்திலிருந்து இன்று வரை இந்துக்களிடம் இந்த பழக்கம் பரவலாக இருந்து வருகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல