சனி, 21 ஏப்ரல், 2012

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - 28

ராஜிவ் காந்தி மே 21-ம் தேதி கொல்லப்பட்டார். அவர் கொல்லப்படவதற்கு 19 நாட்களின் முன்னர்தான், அவரைக் கொல்ல மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறிய தனு சென்னையில் காலடி எடுத்து வைத்தார். சென்னைக்கு புதிதாக வந்திறங்கிய சுபாவையும் தனுவையும், நேரே கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள ஜெயக்குமார் வீட்டுக்கு அழைத்து வந்தார் சிவராசன்.

ராஜிவ் காந்தி கொலையில், புலிகள் சிக்கிய கதை - 27

ராபர்ட் பயஸை கைது செய்து மல்லிகைக்கு கொண்டுபோய் சிவராசனைப் பற்றி விசாரித்தது சிறப்பு புலனாய்வு பிரிவு டீம். அவருடன் ஒன்றாகச் சென்று டிரைவிங் லைசென்ஸ் எடுத்த சிவராசனை எப்படித் தெரியும் என்று பயஸிடம் கேட்டபோது, அவர் கூறிய பதில், “எனது மைத்துனர் ஜெயக்குமாரின் வீட்டில் சிவராசன் தங்கியிருந்ததால் ஏற்பட்ட பரிச்சயம்”

போர் விமானங்கள் பின்தொடர, கடலில் இறங்கிய மர்ம விமானம் !

அமெரிக்க விமானப்படையின் இரு F-15 போர் விமானங்கள் பின்தொடர்ந்த நிலையில், சிறிய தனியார் விமானம் ஒன்று புளோரிடா அருகே கடலில் வீழ்ந்துள்ளது. இந்த விமானம் ஏன் அந்தப் பகுதியில் பறந்தது என்பதும், அதை செலுத்திய நபர் யார் என்பதும், இன்னமும் மர்மமாகவே உள்ளது. அமெரிக்க விமானப் படையின் எக்லின் விமான தளத்துக்கு (Eglin air force base) நெருக்கமாக சிறிய விமானம் பறந்த காரணத்தாலேயே இந்த விபத்து சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு போர் விமானங்களை அனுப்பி, இந்த விமானத்தை தொடருமாறு உத்தரவிடப்பட்ட காரணமும், விமானப்படை தளத்தின் ராடாரில் இந்த விமானம் தென்பட்டதுதான். கடலில் வீழ்ந்துள்ள விமானம், சிறிய, செஸ்னா (Cessna 421C) ரகத்தைச் சேர்ந்தது. காலை 8.45 மணிக்கு, இரு F-15 போர் விமானங்கள் மேலே பறக்க, இந்த விமானம் குறைந்த உயரத்தில், கல்ஃப் ஆஃப் மெக்சிகோ கடலின் மேலே பறந்தது.

நாங்கள் உங்களைப் போன்று கொடியவர்கள் அல்ல - கோத்தாவின் பதிலடிக்கு கலைஞரின் சரவெடி!

தனித் தமிழீழத்துக்கானப் போராட்டத்தில் பயங்கரவாதமோ, தீவிரவாதமோ தலையிடக் கூடாது என்பதே தி.மு.க.வின் நிலைப்பாடு என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தென்சூடானைப் போல, கொசாவைப் போல, கிழக்கு திமோரைப் போல தனித் தமிழ் ஈழத்தை பொதுவாக்கெடுப்பின் மூலம் உருவாக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியிருந்தார்.

இப்படியும் ஒரு தாய்

அழுகையை நிறுத்தவில்லையென்பதற்காக ஒரு தாய் தனது ஏழுவார பிஞ்சு குழந்தைக்கு 142 டிகிரி வெப்பமுள்ள கொதிக்கும் நீரை குழந்தையின் உடம்பில் ஊற்றிய சம்பவம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

உதவி கோருகிறார்

இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பேராதனையைச் சேர்ந்த இரு குழந்தைகளின் தாயாரான திருமதி நேசாமலர் சிவாநந்தனுக்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்காக சுமார் 10 இலட்சம் ரூபாய்செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளதால் கருணையுள்ளம்மிக்கோரிடமிருந்து இதற்கான நிதி உதவியைக் கோரியுள்ளார். இவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியுமென வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பரோபகாரிகள் இலங்கை வங்கி வ.க.இல.92851 என்ற கணக்கிற்கு வை ப்பிலிடுமாறு கேட்கப்படுகின்றனர்.
Image Hosted by ImageShack.us

பல தரப்பினர் மத்தியிலும் பல்வேறு உணர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்திய குழுவின் விஜயம்

படத்தின் மீது கிளிக்கி பெரிதாக்கி வாசிக்கவும்

Image Hosted by ImageShack.us

தமிழர்களின் பிரச்சினை குறித்து சுஸ்மா டில்லிக்கு கூறப்போவது என்ன?

படத்தின் மீது கிளிக்கி பெரிதாக்கி வாசிக்கவும்
Image Hosted by ImageShack.us

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல