ஞாயிறு, 13 அக்டோபர், 2013

வேர்ட் டிப்ஸ்

டைப்பிங் டிரிங்ஸ்: சொல் ஒன்றை முழுவதுமாக அழிக்க, டெல் அல்லது பேக் ஸ்பேஸ் கீயினை ஒவ்வொரு எழுத்தாக அழிக்க வேண்டாம். கர்சரை, அந்த சொல்லை அடுத்து வைத்துக் கொண்டு, கண்ட்ரோல் + பேக் ஸ்பேஸ் கொடுத்தால், ஒரு முறை அழுத்தியவுடனேயே, அந்த சொல் அழிக்கப்படும்.
டைப் செய்திடுகையில், கர்சரை ஸ்பேஸ் பார் தட்டி, ஒவ்வொரு இடமாகக் கொண்டு செல்வது நமக்கு நேரம் எடுக்கும் செயலாக அமையும். முந்தைய சொல்லின் தொடக்கத்திற்கு கர்சரைக் கொண்டு செல்ல, CTRL + Left Arrow பயன்படுத்தலாம். அடுத்த சொல்லின் தொடக்கத்திற்கு கர்சரைக் கொண்டு செல்ல, CTRL + Right Arrow பயன்படுத்தலாம்.

நீக்க முடியாத ஸ்கை ட்ரைவ்

ஸ்கை ட்ரைவ், இப்போது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மையப் பகுதியாக, அதிலிருந்து நீக்க முடியாத பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு, க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், பைல்களை சேவ் செய்திட, ஸ்கை ட்ரைவ் புரோகிராமினை உருவாக்கியது. நமக்குத் தேவை எனில், இதில் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலம், நம் பைல்களை இதில் சேமித்து வைக்கலாம். எங்கு சென்றாலும், எந்த கம்ப்யூட்டரிலிருந்தும், நம் பைல்களைப் பெற்று, எடிட் செய்திடலாம். இந்த வசதி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தன் வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பிப் பயன்படுத்துகின்றனர் என்பதனை அறிந்த மைக்ரோசாப்ட், தன் விண்டோஸ் சிஸ்டத்தின் நீக்க முடியாத ஒரு பகுதியாக ஸ்கை ட்ரைவினை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்து தொடர்பான ஷார்ட் கட் கீகள்

எழுத்தை மாற்ற CTRL+SHIFT+F

எழுத்தின் அளவை மாற்ற CTRL+SHIFT+P

எழுத்தின் அளவை அதிகப்படுத்த CTRL+ SHIFT+>
எழுத்தின் அளவைக் குறைக்க CTRL+SHIFT+<

விண்டோஸ் 7 - சில குறிப்புகள்

புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள் அனைவரும், அதனுடன் வரும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கத் தொடங்கிய பின்னர், அது தரும் வசதிகளை ஒவ்வொன்றாய் ஆய்வு செய்து அறிந்து வரு கின்றனர். விஸ்டாவிற்குப் பின் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுவிட வேண்டும் என்ற இலக்குடன், மைக்ரோசாப்ட் நிறுவனமும், விண்டோஸ் 7 தொகுப்பில், பல புதுமைகளையும் எளிய, திறனுடன் கூடிய வசதிகளையும் தந்துள்ளது. வாசகர்களின் கடிதங்களில் கேட்டுள்ள பல கேள்விகளின் அடிப்படையில், கீழ்க்காணும் குறிப்புகள் தரப்படுகின்றன.

வேர்டில் டெக்ஸ்ட் செலக்ஷன்

வேர்ட் டாகுமெண்ட்களை எடிட் செய்கையில், நாம் மேற்கொள்ளும் முதல் திருத்தம், டெக்ஸ்ட்களை பார்மட் செய்வது வும் மற்றும் அவை அமைந்துள்ள இடத்தினை இன்னொரு இடத்தில் மாற்றி அமைப்பதும் தான். இதற்கு, டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியை, அல்லது முழுவதையும் அடிக்கடி தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. எனவே தான், இதற்கு வேர்ட் புரோகிராம், பல்வேறு வழிகளை நமக்குத் தருகிறது. அவற்றை இங்கு காணலாம்.

வண்ணங்களில் டைட்டில் பார்

கலர்புல் டிப்ஸ் ஒன்றைப் பார்ப்போமா! உங்களுடைய விண்டோ டைட்டில் பாரினை வெவ்வேறான வண்ணங்களில் அழகாய் இதன் மூலம் அமைக்கலாம். எது டைட்டில் பார்? எனச் சற்று நேரம் யோசிக்கிறீர்களா!

வேர்ட் டாகுமெண்ட் பிரிண்ட்

வேர்ட் டாகுமெண்ட் பிரிண்ட் செய்கையில், முதல் பக்கம் முதலில் பிரிண்ட் செய்யப்பட்டு, தொடர்ந்து அடுத்த பக்கங்கள் பிரிண்ட் செய்யப்பட்டு கிடைக்கின்றன. பெரிய டாகுமெண்ட் ஆக, 60 பக்கம் இருந்தால், அச்சிட்ட பின்னர், மீண்டும் ஒவ்வொரு தாளையும், பார்த்து முதலில் இருந்து அமைக்க வேண்டியுள்ளது.

புரோகிராமினை மாற்றுவது எப்படி?

புதிய கம்ப்யூட்டரில் அல்லது விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்த கம்ப்யூட்டரில், நமக்குத் தேவையான புரோகிராமினை, அதன் போல்டரில் உள்ள பைல்களை, அப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்தால், ஏன் அவை இயங்குவதில்லை?

ஒரு புரோகிராம், கம்ப்யூட்டர் ஒன்றில் எப்படி தன்னைப் பதித்துக் கொள்கிறது என்பதனை அறிந்தால், இந்த சந்தேகம் நமக்கு வராது. அதனைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விண்டோஸ் 8.1 சிஸ்டம் டிப்ஸ்

ஸ்டார்ட் ஸ்கிரீன் இல்லாமல் நேராக டெஸ்க்டாப்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில், பலருக்கும் பிடிக்காத விஷயமாகப் பேசப்படுவது, சிஸ்டம் ஸ்டார்ட் ஸ்கிரீனில் தொடங்கும் செயல்பாடாகும். அனைவரும் ஏன் டெஸ்க்டாப்புடன் சிஸ்டம் தொடங்கினால் என்ன? என்று கேட்டனர். இப்படித்தானே, இதுவரை விண்டோஸ் இயங்கியது எனவும் கேள்வி தொடுத்தனர். பெரும்பாலான வாடிக்கையாளர்களிடம் இருந்து இந்த பின்னூட்டு வந்ததனால், மைக்ரோசாப்ட் நிறுவனம், இதனை, விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் மாற்றியுள்ளது. நேராக சிஸ்டம், முன்பு போல, டெஸ்க்டாப் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பெற, ஒரு சின்ன செட்டிங் அமைக்க வேண்டும்.

நெட்வொர்க் மற்றும் ஐ.பி.முகவரி அறிய

இணையத்தைப் பயன்படுத்தும் போது, நம் இணைப்பிற்கென ஓர் ஐ.பி. முகவரி தரப்படுகிறது. நம் கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் எப்படி இணைக்கப்பட்டுள்ளது என்பதனை அறிய அனைவருக்கும் ஆவலாய் இருக்கும். ஒவ்வொரு நேரமும் ஒரு முகவரி தரப்படுவதால், சில செயல்பாடுகளுக்காக, அந்த நேரத்தில் தரப்படும் ஐ.பி. முகவரி அறியவும் ஆசைப்படுவோம். அதனை எப்படி அறியலாம் என்பதனை இங்கு பார்க்கலாம். இங்கு விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இதனை எப்படி அறிவது என்பதனை முதலில் காண்போம்.

மின் அஞ்சல் சர்வர் வகைகள்

உங்கள் மின் அஞ்சல் கணக்கினைக் கம்ப்யூட்டரில் பதிவு செய்திடுகையில், உங்களுக்கு எந்த வகையான அக்கவுண்ட் வேண்டும் என்று கேள்வி கேட்கப்பட்டு, அவற்றின் வகைகளாக - POP, SMTP மற்றும் IMAP என்பவை காட்டப்படும். இவை எவற்றைக் குறிக்கின்றன? இடையே உள்ள வேறுபாடு என்ன எனப் பார்க்கலாம்.

வேர்ட் 2007ல் ஷார்ட் கட் கீக்களின் தனித் தோற்றம்

ஆபீஸ் 2007ல் உள்ள வேர்ட் தொகுப்பில் கிடைக்கும் ஷார்ட் கட் கீ தொகுப்புகள், முன்பு வந்த வேர்ட் 2003 மற்றும் வேர்ட் 2000 ஆகியதொகுப்புகளில் உள்ளது போலவே இருக்கின்றன. ஆனால் இதில் ஒரு சிறப்பான தோற்றம் உள்ளது. முந்தைய வேர்ட் தொகுப்புகளில், நீங்கள் ஷார்ட் கட் கீ தொகுப்புகளை நன்கு அறிந்திருக்க வேண்டும்.

விண்டோஸ் 8 - அவசிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள்

விண்டோஸ் 8, அடிப்படையில் தொடு திரையை மையமாகக் கொண்டு தொடு உணர் நிலை இயக்கத்தினைக் கொண்டதாகும். இருப்பினும், இதனை மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் இயக்கலாம். இதில் பல ஷார்ட்கட் கீ தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டாலும், சிலவற்றை, விண்டோஸ் 8 பயன்படுத்துவோர் கட்டாயம் நினைவில் வைத்திருக்க வேண்டும். அவை:

வேர்ட் டிப்ஸ்

வேர்ட்: ஹைபன்

வேர்ட் டாகுமெண்ட்களில் கோட்டின் நீளத்தைக் கணக்கிடுகையிலும், சொற்களை அடுத்த வரிக்கு மடக்கிக் கொண்டு செல்கையிலும், ஹைபன் அல்லது டேஷ் இருந்தால் சில வேளைகளில் பிரித்துவிடுகிறது. நாம், ஒரு வரி இது போல பிரிக்கப்படுவதனை விரும்புவதில்லை. ஏனென்றால், சில தொலைபேசி எண்கள் இது போன்ற டேஷ்களைக் கொண்டு அமைத்திருப்போம். இவை பிரிக்கப்பட்டால் அவை சரியாக அமையாது. எனவே பிரிக்க முடியாத ஹைபன்கள் இந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டும்.

எக்ஸெல் டிப்ஸ்

ஒர்க்ஷீட்டில் மறு நாளைய தேதி

எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், மறுநாள் தேதியை அமைக்க விரும்பினால், அதனை மிகச் சிறிய கணக்கினை இணைப்பதன் மூலம் மேற்கொள்ளலாம். நீங்கள் தயாரிக்கும் ஒர்க்ஷீட்டில், சில காரணங்களுக்காக, ஒரு குறிப்பிட்ட செல்லில், மறு நாள் தேதியை அமைக்க விரும்புகிறீர்கள். இதற்கு இன்றைய தேதிக்கான பார்முலாவில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தினால் போதும். அந்த பார்முலா =TODAY() + 1 என அமையும். இந்த பார்முலாவினைக் கவனித்தால் ஒன்று தெரியவரும். பார்முலா, முதலில் அன்றைய தேதியைக் கணக்கிடுகிறது. பின் அதனுடன் 1 ஐக் கூட்டுகிறது. இதனால் மறுநாளைய தேதி கிடைக்கிறது. இவ்வாறே இதில் மேலும் மாற்றங்களை ஏற்படுத்தி, நாம் நமக்குத் தேவையான நாளுக்கான தேதியைக் கொண்டு வரலாம். எடுத்துக் காட்டாக, 14 நாட்களுக்குப் பின்னர் உள்ள நாளுக்கான தேதியைக் கொண்டுவர, +14 எனத் தரலாம்.

ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் முதன்மைப் பணிகள்

கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன செய்கிறது? அதன் பணிகள் என்ன என்று நாம் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களான, எம்.எஸ். ஆபீஸ், பேஜ்மேக்கர், கோரல் டிரா, ஆட்டோகேட் போன்றவற்றின் பணிகளையே மிகவும் உற்சாகமாகப் பேசுகிறோம். ஆனால் இவற்றிற்கு அடிப்படையாகவும், இயக்குவதாகவும் செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. இது என்ன என்ன தலையாயப் பணிகளை மேற்கொள்கிறது என்று பார்க்கலாம்.
கம்ப்யூட்டரில் பல பணிகளை நிர்வாகம் (Management) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை

களஞ்சியம் இலவச அகராதி

இணைய இணைப்பு இல்லாமல், சிறிய பைல் ஒன்றினை இயக்குவதன் மூலம், ஆங்கிலம்- தமிழ், ஆங்கிலம்- ஆங்கிலம் மற்றும் தமிழ்-தமிழ் எனப் பல்முனை அகராதி ஒன்றை நம் டெஸ்க் டாப்பில் வைத்துப் பயன்படுத்தும் வகையில், மென்பொருள் ஒன்று இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் பெயர் ""களஞ்சியம் அகரமுதலி''. இதற்கான மூல கோப்பு கிடைக்கும் தள முகவரி

Mother, daughter dead after jumping in front of Yal Devi

October 13, 2013 02:54 pm


A woman and her daughter were killed after being hit by the Yal Devi train, which was traveling from Killinochchi to Colombo today.

நிறைவேறியது மூதூர் ரிஸானாவின் கனவு இல்லம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிரச் சேதம் செய்யப்பட்ட மூதூர் ரிஸானாவின் வறிய குடும்பத்துக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு இது.

வாய்ப்புண்ணை கட்டுப்படுத்தும் சீரகம்

நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற பொருட்களில் ஒன்று தான் சீரகம். சீரகம் என்றால் உடலை சீர் படுத்தக் கூடியது. சீரகத்தை பொடி பண்ணி எடுத்து 1 கிராம் - முதல் 3 கிராம் வரை சாப்பிடலாம். இது பாலூட்டும் தாய்மார்களுக்கு பாலைச் சுரக்க வைக்கும். பித்தத்தை சமப்படுத்தும். ஜீரண உறுப்புகளைப் பலப்படுத்தும். ஈரலைப் பலப்படுத்தும். சீரகம் உணவுப் பொருளாகவும் , மருந்துப் பொருளாகவும் இருக்கின்றது.

தேநீர்

ஒளிப்­படக் கரு­வி­யி­னது செயற்­ப­டு­கையின் அறி­வியற் பின்­ன­ணிகள்

ஒளி­யியல் உப­க­ர­ணங்­களில் ஒளிப்­படக் கரு­வி­யினை அறி­யா­தவர் எவரும் இருக்­க­மு­டி­யாது எனலாம். படித்­த­வ­ரி­லி­ருந்து பாமரர் வரை அனை­வரின் கரங்­க­ளிலும் ஒளிப்­படக் கருவி நுழைந்து, பல்­வேறு வழி­களில் பணி­யாற்றிக் கொண்­டி­ருக்­கி­றது. இக்­கா­லப்­ப­கு­தியில் மனித வாழ்க்­கை யில் இடம்­பெறும் மங்­க­ள­க­ர­மான விழாக்­களில், ஒளிப்­படக் கரு­வி­யி­னூ­டான காட்­சிப்­ப­திவு இல்­லாது அவ்­வி­ழாக்கள் இடம்­பெ­று­மெனில் அது அபூர்­வ­மா­ன­தா­கவே அமையும். இவ்­வா­றாக, ஒளிப்­படக் கரு­வி கள் மனித வாழ்­வி­யலில் முக்­கிய இடத்­தினை வகிக்­கின்­றன.

துள்ளிச்செல்லும் நீர்த்துளியும் மின்சாரம் தரும்

தாமரை இலையில் நீர் ஒட்டாது அங்குமிங்கும் திரிவதைப் பலரும் அதிசயத்துடன் அவதானித்திருப்பீர்கள். இவ்வாறான நீர் ஒட்டாத ((super hydrophobic)

இயல்பு, சில உலோகங்களின் மேற்பரப்பிலும் சிற்சில நிறப்பூச்சு பூசப்பட்டவற்றின் மேலும் காணப்படுகிறது. இவற்றின் மேல் நீர் வீழ்ந்து துளிகளாகத் தெறிப்படைகையில் அத்துளிகள் ஏற்றம் பெறுவதை அமெரிக்காவின் மஸாசூசெட் தொழில்நுட்ப நிறுவன ஆய்வாளர்கள் ஆய்வினூடாகக் கண்டறிந்துள்ளனர். தெறிப்படையும் நீர்த்துளியின் ஏற்றம் கொண்ட இயல்பினை உபயோகித்து மின்சாரம் பெறமுடியும் என அறிவியலாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர். இக்குறிப்பிட்ட ஆய்வின் விபரங்கள் Nature Communications  என்ற அறிவியற் சஞ்சிகையில் பிரசுரமான கட்டுரையொன்றில் விபரிக்கப்பட்டுள்ளன.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல