தனது பண்ணையில் வளர்ந்து தொங்கும் முலாம்பழங்கள் கீழே விழுந்துவிடாமல் பாதுகாப்பதற்கு என்ன செய்யலாம் என ஆராய்ந்த பெண்ணொருவர் இறுதியில் அதற்கொரு வித்தியாசமான தீர்வை கண்டுபிடித்துள்ளார்.
வியாழன், 23 செப்டம்பர், 2010
ஓவியம் வரையும் குரங்கு ( படங்கள் இணைப்பு)
சர்கஸ் நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதிலிருந்து ஓய்வுப் பெற்ற மனிதக் குரங்கு ஒன்று ஓவியம் வரைவதை தனது பொழுதுப்போக்காகக் கொண்டுள்ளது. பிரேஸிலுள்ள மிருகக் காட்சி சாலையில் தனது ஓவியத்தினூடாக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது இந்த மனிதக் குரங்கு.
Labels:
வினோதமான செய்திகள்
பிரசவிக்கப்பட்ட மறுகணமே கைவிடப்படும் குழந்தைகள் குடாநாட்டில் பெருகும் ’ரெடிமெட்’ காதல்களின் பெறுபேறா?
முதல் நாள் பெய்த பெருமழையின் மிச்சமாக வானம் இருண்டு கிடந்தது. மெலிதான தூறல். விடிந்தும் விடியாத காலைப்பொழுது. தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளத் தொடங்கிய கிராமத்தின் வீதிகளில் இன்னமும் மனித நடமாட்டம் தொடங்கவில்லை. எங்கும் அமைதி போர்த்தப்பட்டி ருந்தது. அந்த அமைதி வெகு நேரம் நீடிக்கவில்லை. வீதியோரமாய் தேங்கிநின்ற வெள்ள நீரைவிலக்கியவாறு வந்துகொண்டிருந்த வயோதிபர் ஒருவரின் காதில் திடீரென எழுந்த முனகல் ஒலி விழுந்தது.வீதியில் யாருமில்லை. வீடுகளும் திறந்திருக்கவில்லை. எங்கிருந்து அந்த முனகல் சத்தம் வருகின்றதென அவருக்கு ஒரே குழப்பம். சுற்றும் முற்றும் துழாவிப் பார்த்த போதுதான் ஒரு சாக்குப்பை அவரின் கண்ணில் பட்டது. அதிலிருந்தே பூனைக்குட்டியின் மெலிதான குரல் போல ஒலி வந்துகொண்டிருந்தது. அவருக்கு எரிச்சலாக வந்தது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
தமிழர்கள்
மிகவும் பழைமையான ஜன்னல்
பிரித்தானியாவின் சக்ஸன் தேவாலயத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் 1066இற்கு முந்திய காலத்தினுடைய மிகவும் பழைய, திறந்து- மூடக்கூடிய நுட்பமான வேலைப்பாடு கொண்ட மரத்தாலான ஜன்னல் ஒன்றிறை கண்டுபிடித்துள்ளனர்.
Labels:
வினோதமான செய்திகள்
கயிற்றின் மீது உறங்கும் மனிதர்
சீனாவை சேர்ந்த காவோ யாங் என்ற 37 வயதுடைய நபர், மரங்களுக்கிடையில் கட்டப்பட்ட சிறிய கயிற்றில் சுமார் 7 மணித்தியாலங்கள் நித்திரை செய்து சாதனைக்காக காத்திருக்கிறார். இரண்டு தென்னை மரங்களுக்கிடையில் சுமார் 10 அடி உயரத்தில் சிறிய கயிற்றினை கட்டி, அதில் லாவகமாக படுத்து உறங்கும் பயிற்சியை கடந்த 25 வருடங்களாக அவர் மேற்கொண்டு வருகிறார்.
Labels:
வினோதமான செய்திகள்
அதிகவிலைக்கு சுங்கான்பெட்டி விற்பனை
பதினேழாம் நூற்றாண்டில் இலங்கையில் யானைதந்தத்தில் தயாரிக்கப்பட்ட மிகுந்த சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய புகைபிடிப்பதற்கான சுங்கான் பெட்டி ஒன்று பிரிட்டனில் பெரும் விலைக்கு ஏலம் போயுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
யாழ்ப்பாணத்தில் ’நமது ஈழநாடு’ அச்சகம் முத்திரையிட்டு மூடப்பட்டது - உரிமையாளர் கைது
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ’நமது ஈழநாடு’ நாளிதழின் அச்சகம் சிறிலங்கா சிறப்பு குற்றப் புலனாய்வுக் காவல்துறையினரால் முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளதுடன் அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Labels:
இலங்கை
அளவுக்கு அதிகமான விளம்பரத்தால் ஆத்திரமடைந்த சீனப்பெண்மணி
திரைப்படத்தை ஒளிபரப்புவதற்கு முன்னர் அதிகளவான நேரம் விளம்பரம் ஒளிபரப்பப்பட்டதற்கு எதிராக சீனப் பெண்மணி ஒருவர் வழக்குத் தொடுத்துள்ளார்.
Labels:
வினோதமான செய்திகள்
தற்கொலை செய்வதற்காக தனக்கென்று ஒரு ஜோடியை இணையதள வாயிலாக தெரிவுசெய்து, இருவரும் கூட்டாக தற்கொலை (படங்கள் இணைப்பு)
இணைந்து தற்கொலை செய்வது எப்படி என்று இணையத்தளத்தில் உள்ள தற்கொலைக்கான கருத்துக்களம் ஊடாக பிரித்தானிய பிரஜைகள் இருவர் (ஒரு ஆணும், ஒரு பெண்ணும்) உரையாடியுள்ளனர். ஒருவருக்கொருவர் நேரில் அறிமுகமற்ற அந்த இருவரும் தாம் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவிற்கு வந்து அதற்கான நாள் நேரம் இடம் ஆகியவற்றை தெரிவு செய்து கொண்டனர்.
Labels:
வினோதமான செய்திகள்
ஒக்டோபஸ் சிறுமி
பல்வேறு துறைகளில் செய்த சாதனைகள் காரணமாக உலகெங்கும் பேசப்பட்ட மனிதர்கள் பலர் உள்ளனர். அதேபோல உடலமைப்பு காரணமாக பிரபலமடைந்தவர்களும் இருக்கவே செய்கின்றனர்.
Labels:
வினோதமான செய்திகள்
உலகிலேயே மிகவும் நீளமான இரு வெள்ளரிக்காய்கள் (படங்கள் இணைப்பு)
பிரித்தானியாவைச் சேர்ந்த கிளயர் பியர்ஸ் என்ற வயோதிப மாதுவின் தோட்டத்தில் விளைந்துள்ளது.
47 அங்குலம் மற்றும் 43 அங்குல நீளமுள்ள இந்த வெள்ளரிக்காய்களை “கின்னஸ்' உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
47 அங்குலம் மற்றும் 43 அங்குல நீளமுள்ள இந்த வெள்ளரிக்காய்களை “கின்னஸ்' உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
உடல் இரண்டாக வெட்டப்பட்டு மீளவும் பொருத்தப்பட்டு உயிர்வாழும் உலகின் முதலாவது பெண்
கணவருடன் ஜனிஸ் ஒல்ஸான்
உடலை இரண்டாக வெட்டி மீளவும் பொருத்தும் அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்டு உயிர்வாழும் உலகின் முதலாவது நபர் என்ற பெருமையை கனடாவை சேர்ந்த ஜனிஸ் ஒல்ஸான் என்ற பெண் பெறுகிறார்.
Labels:
வினோதமான செய்திகள்
தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட 10 வயது சிறுவன்
10 வயது சிறுவன் ஒருவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)














