செவ்வாய், 19 நவம்பர், 2013

துபாய் மருத்துவமனையில் இறந்த தமிழக இளைஞர்: விவரம் தெரிந்தால் உடலை ஒப்படைக்க உதவுங்களேன்

துபாய்: துபாய் மருத்துவமனையில் இறந்த தமிழக இளைஞர் சேகர் தங்கராஜ் பற்றிய விவரம் தெரிந்தால் துபாய் ஈமான் அமைப்பிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்த கருத்து உண்மைத் தகவல்களை தெரியாது வெளியிட்ட கருத்து: முத்தையா முரளிதரன்!

இலங்கை::இலங்கையில் யுத்தம் முடிவடை யும் காலகட்டத்தில் வடக்கில் பொதுமக்கள் காணாமல் போனார்கள் என்ற குற்றச்சாட்டு சம்பந்தமாக உடனடியாக விசாரணை ஒன்றை நடத்த வேண்டுமென்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்த கருத்து உண்மைத் தகவல்களை தெரியாது வெளியிட்ட கருத்து என்று இலங்கையின் முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட் ஆட்டக்காரரான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

40 ஆண்டுகளுக்குப் பின்னரே பிரிட்டனின் அறிக்கை வெளிவந்தது

பிரிட்டிஷ் இராணுவம் 1972ம் ஆண்டில் வட அயர்லாந்தில் 13 பொதுமக்களை மிலேச்சத்தனமாக சுட்டுக் கொன்ற சம்பவம் பற்றிய புலன்விசாரணை அறிக்கை வெளிவருவதற்கு 40 ஆண்டுகள் எடுத்தன. இலங்கையில் 30 ஆண்டு கால யுத்தத்தில் இடம்பெற்ற வன்முறைகள் பற்றி ஆய்வுநடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை இலங்கை மீது அநாவசியமான அழுத்தங்கள் கொண்டுவரும் பிரிட்டன் போன்ற நாடுகள் புரிந்து கொள்ள வேண்டுமென அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். கடந்த 17ம் திகதி பி.பி.சி. தொலைக்காட்சி சேவையின் செய்தியறிக்கையில் 1972ம் ஆண்டில் அயர்லாந்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டை கண்டிக்கும் முகமாகவே பி.பி.சி. செய்தி தொகுப்பாளர்கள் இதுபற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.

சுக பிரசவத்திற்கு உதவும் நவீன கருவி! -அர்ஜென்டினா கார் மெக்கானிக் அசத்தல்

இப்போதெல்லாம் ஒரு ஆண்டில் பிரசவ நேர சிக்கல்களினால் பிறக்கும் குழந்தைகளில் 56 லட்சம் குழந்தைகள், 2,60,000 பெண்கள் இறக்கிறார்கள்.இந்நிலையில் அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன். என்பவர் பிரசவத்தை எளிதாக்கும் நவீன கருவியை கண்டுபிடித்துள்ளார். இந்த கருவிக்கு உலக சுகாதார நிறுவனம் விருது வழங்கியுள்ளது என்பது விசேஷ் தகவல்.

கொழும்புவில் ஆஸ்திரேலிய பிரதமர் இலங்கை கடற்படைக்கு கொடுத்த அன்பளிப்பு

இலங்கையில் கடந்த வாரம் காமன்வெல்த் மாநாடு நடந்து முடிந்தபின், இலங்கை தொடர்பாக ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கிட்டத்தட்ட இலங்கையை எச்சரிக்கும் பாணியில் பேசிவிட்டு காலக்கெடுவும் கொடுத்துவிட்டு செல்ல, அதே காமன்வெல்த் மாநாட்டுக்கு வந்த ஆஸ்திரேலிய அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே, பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷே ஆகியோரை சந்தித்து, இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு ஆஸ்திரேலியா பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்று கூறியிருக்கிறார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல