நம்மில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் தேடுபொறி Google !! இதில் பொதுவாக இணையத்தளங்களை மட்டுமே நாம் தேடி வந்தோம். ஆனால் GOOGLE இன்னும் பல வசதிகளை நமக்கு அளிக்கிறது. இப்பொழுது நாம் கூகிளில் மறைந்துள்ள சில வசதிகளை பார்ப்போம்.
1.நமக்கு SONY நிறுவனத்தின் தற்போதைய பங்கு சந்தை நிலவரத்தை அறிய.......sony stock price என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும்.
2. குறிப்பிட்ட இடத்தின் வெப்பநிலையை அறிய உதாரணமாக இலங்கையில் உள்ள ஒரு இடத்தின் வெப்ப நிலையை அறிந்து கொள்ள colombo weather என்று தட்டச்சு செய்து Enter கொடுத்தால் போதும்.. அந்த இடத்தின் வெப்ப நிலையை காட்டும்.
செவ்வாய், 18 ஜனவரி, 2011
தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் Facebook கேம் விளையாடிய பெண்
அமெரிக்காவை சேர்ந்தவர் ஷனான் ஜான்சன். 34 வயதான இவர் அங்கு உள்ள கொலராடோ மாநிலத்தில் வசித்து வருகிறார். அவரது 13 மாத ஆண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் விளையாட விட்டு விட்டு இவர் பக்கத்து அறையில் உள்ள Facebook இணையதளத்தில் 'Cafe World' கேம் விளையாடிக்கொண்டு இருந்தார்.
Labels:
வினோதமான செய்திகள்
விமான நிலையத்துக்கு எழுத்தாளரின் பெயர்
ஆலிவுட் சினிமா உலகில் ஜேம்ஸ்பாண்டு கதை படங்கள் வசூலில் சாதனை படைத்தன. இந்த துப்பறியும் கதைகளை எழுதிய எழுத்தாளர் அயன் பிளெமிங். இவர் கரீபியன் நாடுகளில் தங்கி இருந்து தான் இந்த கதைகளை எழுதினார்.
அவரை கவுரவிக்கும் வகையில் கரீபியன் தீவுகளில் ஒன்றான ஜமைக்கா தீவில் சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்டு உள்ளது.இந்த புதிய விமான நிலையத்துக்கு அயன் பிளெமிங் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
அவரை கவுரவிக்கும் வகையில் கரீபியன் தீவுகளில் ஒன்றான ஜமைக்கா தீவில் சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்டு உள்ளது.இந்த புதிய விமான நிலையத்துக்கு அயன் பிளெமிங் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
Labels:
உலகப்பார்வை,
சினிமா
ஈரானிய பெண்ணை கல்லால் அடித்து கொல்லும் தண்டனை ரத்து
ஈரானில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண் சகினே முகமது அஷ்தியானியை கல்லால் அடித்துக்கொல்லும்படி கோர்ட்டு தண்டனை விதித்தது. இதற்கு உலகநாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத்தொடர்ந்து இந்த தண்டனை ரத்து செய்யப்பட்டது. ஆனால் அவர் விடுதலை செய்யப்படவில்லை.
Labels:
உலகப்பார்வை
அமெரிக்காவில் பிள்ளையாரை அவமதித்ததாக புகார்
நடிகர் ஜிம் கர்ரி
அமெரிக்காவில் ஒளிபரப்பாகி வரும் பிரபல டி.வி. சேனல் என்.பி.சி. இதில் ஒளிபரப்பாகி வரும் ஒரு நாடகத்தில் இந்து கடவுளான பிள்ளையார் அவமதிக்கப்பட்டார். இதற்கு அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதில் நடித்த நடிகர் ஜிம் கர்ரி, டி.வி. சேனல் தலைவர், நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கேட்டுக்கொண்டு உள்ளன.
Labels:
உலகப்பார்வை,
சினிமா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






