புதன், 24 நவம்பர், 2010

ஒபாமா ஒரு சிறந்த பாம்பாட்டி: பிடல் கெஸ்ட்ரோ

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சிறந்த ஒரு பாம்பாட்டி என கியூப முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

கடந்து சென்றவை கடந்து சென்றவைதான்,காயங்களைக் கிளற வேண்டாம். இடைவெளியை அதிகரிக்காதீர். நாங்கள் சாதகமான முறையில் சிந்திப்பது அவசியம்'

(பகுதி 2)

- இந்துப் பத்திரிகையின் ஆசிரியர் என்.ராமுக்கு ஜனாதிபதி வழங்கிய செவ்வி

கடந்து சென்றவை கடந்து சென்றவைதான், காயங்களைக் கிளற வேண்டாம். இடைவெளியை அதிகரிக்காதீர்.நாங்கள் சாதகமான முறையில் சிந்திப்பது அவசியம்' என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சர்வதேச சமூகத்திற்கு தெரிவித்திருக்கிறார்.இந்துப் பத்திரிகையின் ஆசிரியர் என்.ராமுக்கு அலரி மாளிகையில் அளித்த ஒரு மணித்தியாலய பேட்டியின் இறுதி அங்கத்தில் இதனை அவர் கூறியுள்ளார்.

விரைகிறது அமெரிக்க போர்க்கப்பல் - தென்கொரியாவுக்கு அமெரிக்கா பாதுகாப்பு கொடுக்கும் அதிபர் ஒபாமா அறிவிப்பு!

தென்கொரியத் தீவின் மீதான வடகொரியாவின் திடீர் தாக்குதலால் கொரிய தீபகற்பத்தில் பதட்டம் நிலவி வரும் சூழலில், தென்கொரியாவுடன் ராணுவ கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரு விமானம்தாங்கி போர்க்கப்பலை அது தென்கொரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

புலிகளின் ‘சீறோ வன்பேஸ்’ வதை முகாம் கண்டுபிடிப்பு: 26 படை வீரர்களது எலும்புக் கூடுகள் முல்லைத்தீவில் தோண்டி எடுப்பு!

புலிகளால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட 26 படை வீரர்களது எலும்புக் கூடுகள் நேற்று தோண்டி எடுக்கப்பட்டதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஊ தாண்டின் நினைவு நாள்

ஊ தாண்ட் என்பவர் மியான்மாரைச் சேர்ந்த இராஜதந்திரியும் ஐக்கிய நாடுகள் சபையில் 1961 முதல் 1971 வரை பணியாற்றிய 3வது பொதுச் செயலாளரும் ஆவார். ஊ தாண்ட் பர்மாவின் பண்டானோ என்ற இடத்தில் பிறந்தார். தனது 14வது வயதில் தனது தந்தையை இழந்தார். ரங்கூன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மேற்கல்வி கற்று பின்னர் தனது பிறந்த ஊரின் தேசியக் கல்லூரியில் தலைமை ஆசிரியரானார்.

சமாதானத்துக்கு பின்னான யுத்தத்துக்கு தமிழீழ விடுதலைப்புலிகளே பொறுப்பு! - வைத்தியர் சிவபாலன் சாட்சியம்

2002ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் சமாதானம் ஏற்படுவதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்ட தன் பின்னர் ஏற்பட்ட யுத்தத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் விடுதலைப் புலிகளே பொறுப்பு என தமிழ் மக்கள் நம்புவதாக இறுதிக் கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க் கால் வைத்தியசாலையில் கடமை யாற்றிய வைத்தியர் எஸ்.சிவபாலன் தெரிவித்தார்.

பிணையில் செல்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள்

ஒரு சட்டவாளர் என்ற அடிப்படையிலும் எமது பிரச்சினைகளை விளங்கிக் கொள்ளக்கூடியவர் என்ற காரணத்தினாலும் எம் அனைவருக்கும் பிணையில் செல்வதற்கு விசேட ஏற்பாடு ஒன்றைச் செய்து தரும்படி அரசியல் கைதிகளாகிய நாம் உங்களிடம் வேண்டி நிற்கின்றோம். இவ்வாறு புதிய நீதியமைச் சராக பதவியேற்றிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு தமிழ் அரசியல் கைதிகள் சார்பில் கடிதமொன்று நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நோயின் அறிகுறியை நகங்களில் காணலாம்!

நகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கின்றன. நகங்களை நலமாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன.

பண்டைய குளியல் பகுதி கண்டுபிடிப்பு

இஸ்ரேலிய ஜெருசலேம் நகலிருந்த பண்டைய ஆலயமொன்றை அழித்த ரோமானிய படைவீரர்களால் பயன்படுத்தப்பட்ட குளியல் பகுதியொன்றை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேலிய தொல்பொருள் அதிகாரசபை திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

விலயுயர்ந்த போத்தல்

4100 வெட்டப்பட்ட வைரங்கள் 2.38 கிலோகிராம் தூய பிளாட்டினம் என்பனவற்றால் உருவாக்கப்பட்ட அலங்கார போத்தலை படத்தில் காணலாம்.

எழுத்துச்சுருள் 46 மில்லியன் டொலருக்கு விற்பனை

சீனாவின் பீஜிங் நகரில் இடம்பெற்ற ஏல விற்பனையிலேயே இந்த 24.5 சென்மீற்றர் நீளம் 13.8 சென்மீற்றர் அகலடைய இந்த அலங்கார சுருள் விலைபோயுள்ளது. ஜின் சாம்ராஜ்ஜியத்தைச் சேர்ந்த வாங் ஸிஹி என்பவரால் இந்த அலங்கார எழுத்துகள் வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிறச்சாலைகளுக்கு செல்லாமல் வீடுகளிலிருந்தவாறு தண்டனையை அனுபவிப்பதற்கு நடவடிக்கை

“நீதிமன்றங்களினால் இரு வருடங்களுக்கு குறைவாக சிறைத் தண்டனை பெற்ற கைதிகள், சிறைச்சாலைகளுக்கு செல்லாமல் தத் தம் வீடுகளிலிருந்தவாறே தண்டனையை அனுபவிக்கும் நிலையினை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன'' இவ்வாறு பிரதி அமைச்சர் காமினி விஜித் விஜயனி சொய்சா, பதுளை சிறைச்சாலையில் அண்மையில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

இலங்கை பெண் இந்தியாவில் தற்கொலை; சீ.பீ.ஐ விசாரணைக்கு நீதிமன்றம் பணிப்பு

தமிழகப் பொலிஸாரால் பாலியல் வல்லுறவு

இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் இந்தியாவில் மூன்று பொலிஸ் கான்ஸ்டபில்களால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் சென்னை நீதிமன்றில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

ஹஷிஷ் போதைப் பொருளுடன் பிரான்ஸ் யுவதி கைது!

ஹஷிஷ் போதைப் பொருளை வைத்திருந்த பிரான்ஸ் யுவதியொருவர் மாத்தறை பொல்ஹேன்கொடைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

என்னை விமர்சித்து வாக்குபெற முயல்கிறார் அப்பாத்துறை - இமெல்டா பதிலடி

நான் யாழ்ப்பாணத்தில் அரசாங்க உதவியுடன் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி பணிகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அப்பாத்துறை விநாயகமூர்த்தி போன்றவர்கள் தன்னைப் பற்றி விமர்சிப்பதை தொழிலாகக் கொண்டுள்ளதாக யாழ், அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

இமெல்டா கூறுவது சுத்தப் பொய்

அரச உயர் பதவியில் இருக்கும் ஒரு தமிழ்ப் பெண்மணி அப்பட்டமாக பொய் கூறி வரும் துர்ப்பாக்கிய நிலையை இட்டு நான் மிகவும் மனம் வருந்துகின்றேன். இனி மேலாவது வாயைத் திறக்கும் முன்பு அவர் சரியான தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துறை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் விடுவிக்கப்பட்டார்

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் நங்கானா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆசியா பீபீ.விவசாய கூலியான இவர் இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து தவறான வார்த்தைகளை கூறியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்காக மதத்துவேஷ தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது.

விஜயகுமார் வீட்டில் அசிங்கமான, சட்டவிரோத செயல்கள்!- வனிதா அதிரடி

தந்தை விஜயகுமார் வீட்டில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக மகள் வனிதா அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகர் விஜயகுமார் குடும்ப விவகாரம், பல வில்லங்கங்களை வெளிக் கொணர ஆரம்பித்துள்ளது.

நடிகர் விஜயகுமாரை தாக்கியதாக மகள் வனிதாவின் கணவர் கைது!

நடிகர் விஜயகுமாரை தாக்கி கையை உடைத்ததாக, அவருடைய மகள் வனிதாவின் கணவர் ஆனந்தராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சூகியின் விடுதலை மியான்மாருக்கு ஜனநாயகத்தைக் கொண்டு வருமா?

மியன்மார் எதிர்கட்சித்தலைவி ஆங்ஸான் சூகியின் விடுதலை அவரது தாயக ஆதரவாளர்களால் மட்டுமன்றி உலகிலுள்ள பல நாடுகளாலும் மகிழ்ச்சிபொங்க வரவேற்கப்பட்டுள்ளது.

வீதியில் முடிந்த விதி...

காட்டில் விடுவதற்காக வனவிலங்கு திணைக்களத்தினால் லொரியில் ஏற்றப்பட்ட கொம்பன் யானையொன்று, லொரியின் தட்டு உடைந்து யானையின் கால் சிக்குண்டுடதால் மூச்சுத்திணறி மரணமானது.

கிருஷ்ணா வருக! எஸ்.எம். கிருஷ்ணா வருக! தமிழர் குறை தீர்க்க கிருஷ்ணா வருக!

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா எதிர்வரும் 27ந் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகிறார்.யாழ்ப்பாணத்திற்கு வரும் அவருக்கு எங்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதாக, அரங்க ஆற்றுகை நிகழ்வொன்றை நடத்துவதாக கற்பனை செய்து கொண்டோம்.

ஒஸ்வால்ட் கொல்லப்பட்ட நாள்

ஒஸ்வால்ட்
அமெரிக்க ஜனாதிபதியை சுட்டுக்கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட லீ ஹார்வி ஒஸ்வால்ட், பொலிஸ் நிலையத்திலிருந்து சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் துப்பாக்கிதாரியொருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் பதிவாகியது.

அருந்ததி ராயின் பிறந்த நாள்

சுசானா அருந்ததி ராய் ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார். அருந்ததி ராய் மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார். கேரளத்தை சேர்ந்த மேரி ரோசுக்கும் வங்காளத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த தந்தைக்கும் பிறந்தார்.

போலந்தில் உலகின் மிகப் பெரிய ஏசுநாதர் சிலை

உலகின் மிகப்பெரிய ஏசுநாதர் சிலை போலந்து நாட்டில் உள்ள மேற்கு மாகாணமான சுவிபோட்டிசன் மலைப் பகுதியில் நிறுவப்பட்டது. போலந்து நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலமான இந்த பகுதியில் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

என் மனைவி தான் அடுத்த மகாராணி

“என் மனைவி கமீலா தான் பிரித்தானியாவின் அடுத்த மகாராணி” என பிரித்தானிய இளவரசர் சாள்ஸ் கூறியுள்ளார். அமெரிக்காவில் உள்ள என்.பி.சி, தொலைக்காட்சிக்கு பிரித்தானிய இளவரசர் சாள்ஸ் பிரத்தியேக பேட்டியளித்தார்.

காருக்கும் கறுப்புப் பெட்டி

விமானத்தில் இருப்பது போன்ற கறுப்பு பெட்டியை காருக்கும் தயாரித்து ஐரோப்பிய யூனியன் சாதனை படைத்துள்ளது. அதில் காரின் வேகம், சமீபத்திய இயக்கம், ஓட்டுநர் நிறுத்தியை போட்ட விதம், கொடுத்த சமிக்ஞைகள் உட்பட 20 வகையான புள்ளி விபரங்கள் பதிவாகிக் கொண்டிருக்கும்.

யாழ்ப்பாணத்தில் மிகவும் வய்து கூடிய உழைப்பாளி

யாழ்ப்பாணத்தில் மிகவும் வயது கூடிய உழைப்பாளி என்கிற பெருமைக்கு உரியவர் 88 வயது உடைய திருமதி சுப்பிரமணியம். இவர் ஒரு விதவை. வளர்ப்பு மகள் உட்பட இவரது நெருங்கிய சொந்தக்காரர்கள் அனைவருமே வெளிநாடுகளில்தான்.

மனதில் அரசியல் தீர்வொன்றை வைத்திருக்கின்றேன்.அந்தத் தீர்வானது மக்களினாலும் அரசியல் கட்சிகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

- இந்துப் பத்திரிகையின் ஆசிரியர் என்.ராமுக்கு ஜனாதிபதி வழங்கிய செவ்வி

மனதில் அரசியல் தீர்வொன்றை வைத்திருக்கின்றேன்.அந்தத் தீர்வானது மக்களினாலும் அரசியல் கட்சிகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். தனிநாட்டுக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட்டிருப்பது மிகவும் சிறப்பான முன்னேற்றமாகும். புதிய தலைமைத்துவத்தை கட்டியெழுப்ப வேண்டுமென தமிழ் மக்கள் விரும்புகின்றனர்.அடுத்த வருடம் வட மாகாணசபைக்கான தேர்தல் இடம்பெறும். தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.

காணாமல் போனோரின் பெற்றோரை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி கும்பல் - இராணுவம் எச்சரிக்கை

கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் பகுதிகளில் காணாமற் போனதாக கூறப்படும் நபர்கள் தன் பொறுப்பில் இருப்பதாகக் கூறி காணாமற் போனோரின் பெற்றோர் உறவினர்களிடமிருந்து பணம் பறிக்கும் மோசடிக் கும்பலொன்று இயங்குவதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

கம்போடியாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 345 பேர் பலி!. (படங்கள் இணைப்பு)

கம்போடியாவில் வருடாந்திர திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தபட்சம் 345 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கம்போடியாவின் முக்கிய திருவிழாவான வருடாந்திர திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தென்கொரியா மீது குண்டுவீசி வடகொரியா கடும் தாக்குதல்!

தென் கொரியாவுக்குச் சொந்தமான தீவு ஒன்றின் மீது நேற்று, வடகொரியா பீரங்கி குண்டுகளை வீசி கடுமையாகத் தாக்கியது. பதிலுக்கு தென்கொரியாவும் வடகொரியா மீது தாக்குதலை துவக்கியுள்ளது. இச்சம்பவத்தில் தென்கொரிய கடற்படை வீரர் ஒருவர் பலியானார். பலர் காயம் அடைந்தனர். இதனால், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது. சீனாவும், ரஷ்யாவும் இந்த பதட்டத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

போலி விசா மூலம் இரு பிள்ளைகளை பிரான்சுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த பெண்ணுக்கு 10 வருடம் ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு கடூழியச் சிறைத் தண்டனை!

பிரான்ஸூக்கு சென்ற பின்னர், 30 லட்சம் ரூபாவை பெற்றுக்கொள்ளும் நோக்கில், வேறு பெற்றோரின் இரண்டு பிள்ளைகளை தனது பிள்ளைகள் எனக் கூறி, போலி வீசா மூலம் பிரான்சுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த குற்றத்தை ஏற்றுக்கொண்ட பெண்ணொருவருக்கு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஜயகி டி அல்விஸ் 10 வருடம் ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்மாளித்துள்ளார். அத்துடன் 50 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

21 வயதுக்கு மேற்பட்டோரே வெளிநாட்டு வேலைக்கு செல்ல முடியும்

வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுச் செல்லும் அனைவருக்கும் 21 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருக்க வேண்டுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி மற்றும் நலன்புரி சேவைகள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல