இணையத்தில் தகவல்களை எளிதாகத் தேடி விடலாம். ஆனால் சில நேரங்களில் சிறப்பு எழுத்துக்கள் அல்லது குறியீடுகளைத் தேடுவது சிக்கலாக இருக்கும். பரவலாகப் பயன்படுத்தப்படும் ‘@’ மற்றும் ‘&’ போன்ற குறியீடுகளை விசைப் பலைகையில் பார்க்க முடிந்தாலும், மற்ற குறியீடுகளைத் தேடிப் பயன்படுத்துவது கடினமாக இருக்கும்.
கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் இணையம் ஒரு வகுப்பறை யாக இருக்கும். உங்கள் ஆர்வம் அல்லது தேடல் தொடர்பான எந்தத் தலைப்பிலான வீடியோ பாடங்களையும் இணையத்தில் கண்டுபிடித்துவிடலாம். இப்போது இந்தத் தேடலில் கைகொடுக்க வந்துள்ளது ‘ஃபைண்ட்லெக்சர்ஸ்’ எனும் இனையதளம்.