சனி, 9 அக்டோபர், 2010

இராணுவ முகாமில் உள்ள என் கணவரை மீட்டுத்தாருங்கள், இல்லையேல் எனது குழந்தைகளுடன் தீக்குளிப்பேன்

இராணுவத்தினரால் கடத்தப்பட்ட எனது கணவர் கை, கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில் மட்டக்களப்பிலுள்ள இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனது கணவரை இராணுவம் விடுதலை செய்யாவிடில் நானும் எனது பிள்ளைகளும் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என காணாமல் போயுள்ள மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் சகாயமணியின் மனைவி ஜோசப் மேரி சகாயமணி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் நேற்று சாட்சியமளித்த போது தெரிவித்தார்.

சர்வதேச சமூகத்திற்கு காட்டும் படப்பிடிப்பே வன்னி மீள்குடியமர்வு

சுமார் முப்பது வருட காலங்களாக விடு தலைப்புலிகளுக்கும், அரச படைகளுக்கும் இடையே நிலவி வந்த ஆயுதப்போராட்டம் கடந்த வருடம் மே மாதத்துடன் முழுமையாக முடிவடைந்திருப்பதாக நம்பப்படுகின்றது.

அக்டோபர் 10-ந் தேதி திருமணம் செய்ய இளம் ஜோடிகள் ஆர்வம்

நாளைய தேதி, 10.10.2010 என அமைவதால் இந்த ஆண்டின் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இதனால், நாளை திருமணம் செய்வதற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் ஜோடிகள் பெரிதும் ஆர்வமாக உள்ளனர். இதற்காக, அங்குள்ள தேவாலயங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்துள்ளனர். அதிலும், நாளை காலை 10 மணி 10 நிமிடத்துக்கு திருமணம் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

திப்பு சுல்தான் அரியணை தங்க அலங்காரம் ஏலம்

இந்தியாவில் 17-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மைசூர் மகாராஜா திப்பு சுல்தானை, ஆங்கிலேயே கிழக்கிந்திய படையினர் 1799-ம் ஆண்டு ஸ்ரீரெங்கபட்டினம் போரில் கொன்றனர். பின்னர், திப்பு சுல்தானின் அரியணை சூறையாடப்பட்டது. அதில் அலங்கார வேலைப்பாடுகளுடன் இருந்த தங்கத்தினால் செய்யப்பட்ட சிங்கம் உள்ளிட்டவை மூன்றாக சிதைக்கப்பட்டன. அதில் ஒரு பகுதி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.2 கோடியே 34 லட்சத்துக்கு லண்டனில் ஏலம் விடப்பட்டது.

பூட்டினுக்கு கிடைத்த விநோதமான பரிசு (படங்கள் இணைப்பு)

ரஷ்ய பிரதமர் விளாடிமிர் பூட்டின், கடந்த வியாழன் அன்று 58-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரை, ரஷ்யாவின் புகழ்பெற்ற மாஸ்கோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவிகள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறியதோடு, கிளுகிளுப்பான பிறந்தநாள் பரிசை ஒன்றையும் அளித்தனர். அந்த பரிசு என்ன தெரியுமா? 2011-ம் ஆண்டுக்கான மாதக் காலண்டர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல