ஞாயிறு, 5 மே, 2013

துயரம்... துரோகம்!

முகாம் மாறிய தயா மாஸ்டர்

ஈழப் போரின் தோல்வி, பல அவலமான தருணங்களை உருவாக்கி நம்மை நிலை​குலையச் செய்கிறது. ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர், இப்போது ராஜபக்ஷேவின் கட்சி சார்பாகவே தேர்தலில் போட்டியிடுவதை என்ன​வென்று சொல்வது? வேலாயுதம் தயாநிதி என்ற இயற்பெயரைக் கொண்ட தயா மாஸ்டர், ஆங்கில ஆசிரியர். பல ஆண்டுகளுக்கு முன்பே தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைத்துக்கொண்டவர். இறுதி யுத்தம் முடிவுக்கு வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன், 2009 ஏப்ரல் 22-ம் தேதி தயா மாஸ்டரும், சுப.தமிழ்ச்செல்வனின் மொழிபெயர்ப்பாளராக இருந்த ஜார்ஜ் என்பவரும் ராணுவத்திடம் சரணடைந்தனர்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல