எட்டடி ஆழக் குழி. உள்ளே எட்டடி இடம் மட்டுமே இருந்தது. டோர்ச் அடித்துப் பார்த்தபோது அழுக்கு மூட்டையாக யாரோ படுத்திருப்பதுதான் முதலில் தெரிந்தது. ஒரு நபர் மட்டும் அந்தக் குழிக்குள் இறங்கினார். அங்கே படுத்திருந்த வயதான மனிதரைத் தொட்டுத் தட்டித் திருப்பினார். தாடிக்குள் உறங்கிய முகம். உறக்கத்தில் இருந்து விழித்த கண்கள் சிவந்திருந்தன. கலைந்த தலையில் எண்ணெய் பட்டுப் பல நாட்கள் ஆன தோற்றம். யாரோ பாவம் என்று அந்த வீரர் மேலேறி வந்துவிடுவதற்கான சாத்தியங்கள் நிறையவே இருந்தன. ஆனால் அமெரிக்க வீரரைப் பார்த்ததும், படுத்திருந்த மனிதர் சற்றும் பதறாமல் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
சனி, 11 செப்டம்பர், 2010
பிரசாந்தை ஏமாற்றி திருருமணம் செய்த கிரகலட்சுமியை பொலிஸ் தேடுகிறது
பிரபல்யமான டாக்டர் ரங்கபாஷ்யம் நடிகர் தியாகராஜனுக்கு 30 வருட கால நெருங்கிய நண்பர்...
டாக்டர் ரங்கபாஷ்யத்தின் மனைவியின் அண்ணன் மகள்தான் கிரகலட்சுமி. பிரஷாந்துக்கு குடும்பபாங்கான பெண்ணை தேடுகிறார்கள் என்று அறிந்த கிரகலட்சுமி பிரஷாந்தை எப்படியாவது வளைத்து விட வேண்டும் என திட்டமிட்டார். நடிகர் தியாகராஜனை டாக்டர் ரங்கபாஷ்யம் மூலமாக கிரகலட்சுமி கடவுள் பக்தி நிறைந்தவள்.
நல்ல பண்புள்ள குடும்பப் பெண் என நம்ப வைத்தார்கள். டாக்டர் அளித்த உறுதியின் பேல் பிரஷாந்த் கிரகலட்சுமி திருமணம் நிச்சயிக்கப்பட்டு மிக பிரமாண்டமான முறையில் கலை உலகமே திரண்டு வந்து திருமணத்தை நடத்தி வைத்தது.
Labels:
சினிமா
சூதாட்டத்தைச் சட்டபூர்வமாக்கினால்....?
கிரிக்கெட் ஆட்டம் எப்போதும் இல்லாத நெருக்கடியை சந்தித்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் வீரர்கள் தற்போது சிக்கியுள்ள சூதாட்டப் புகார் பெருமளவு விவாதங்களையும், கருத்துக்க ளையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக உருவாக்கி வருகின்றன.
Labels:
பலதும் பத்தும்
ஒபாமா "முஸ்லிம்' என்று ஏன் சொன்னார்கள்? ஆய்வில் புதிய தகவல்கள்
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, முஸ்லிம் என பெரும்பான்மையான அமெரிக்கர்கள் ஏன் சொன்னார்கள் என்று நடந்த ஆய்வில், பல்வேறு காரணங்கள் தெரியவந்துள்ளன.சமீபத்தில், அமெரிக்க அதிபர் ஒபாமா எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்ற ஆய்வு, அமெரிக்காவில் நடத்தப்பட்டது.அதில், 18 சதவீத அமெரிக்கர்கள் அவர் முஸ்லிம் என்று கூறினர். 11 சதவீதம் பேர் அவர் கிறிஸ்தவர் என்று கூறினர்.
Labels:
உலகப்பார்வை
ஜீன்ஸும் பாலியல் வன்முறையும்
பத்தாண்டுகளுக்கு முன்பு இத்தாலியில் நடந்த ஒரு பாலியல் வன்முறை (பாலியல் வல்லுறவு) வழக்கில் நீதிமன்றம் குற்றவாளியை விடுதலை செய்தது. அந்தக் குற்றவாளி 45 வயதுடையவன். காரோட்டும் பயிற்சி அளிக்கும் போது ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவன். கீழ் நீதிமன்றத்தில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவன் மேல் நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்டான். காரணம் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட அந்தப் பெண் சம்பவம் நடக்கும் போது இறுக்கமான ஜீன்ஸ் அணிந்திருந்தாளாம். அதை அந்தப் பெண்ணின் அனுமதியில்லாமல் அகற்ற முடியாது என்பதால் நடந்தது பாலியல் வல்லுறவு இல்லை என விளக்கமளித்த நீதிமன்றம் மேலும் அந்தப் பெண்ணின் விருப்பத்தோடு நடந்த உறவு என்று அவனை விடுதலையும் செய்தது.
Labels:
பெண்கள் பக்கம்
அதிசய நண்பர்கள்
விலங்குகளிடையே ஏற்படும் விநோதமான நட்பின் வரிசையில் சீனாவில் ஓநாய் ஒன்றும் ஆடு ஒன்றும் இணை பிரியா நண்பர்களாக திகழ்ந்து வருகிறதாம்
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)










