ஞாயிறு, 16 டிசம்பர், 2012

மாமியார் மருமகளுக்கிடையில் முறுகல் நிலை!!!!

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் இடையே பனிப்போர் நடிப்பதாக பேச்சு அடிபடுகிறது.

கதறக் கதற குழந்தையைத் தாக்கும் தமிழர்! (அதிர்ச்சிக் காணொளி இணைப்பு)

மலேசியாவில் கிளாங் நகரில் 32 வயதான தமிழர் ஒருவர் தனது 3 வயது பெறாமகனைப் போட்டு சகட்டு மேனிக்கு அடிக்கும் அதிர்ச்சிக் காணொளி ஒன்று இணையத்தில் உலா வருகின்றது.

இராஜவரோதயம் சம்பந்தர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் 1


எல்.ரீ.ரீ.ஈ யின் மறைவின் விளைவாக மட்டுமே தமிழர்களின் பிரச்சினைகள் மிகப்பெரிய தார்மீக பலத்தையும் மற்றும் பெரியளவிலான சட்டப்பேற்றையும் கையகப் படுத்திக் கொண்டுள்ளன. (1)
இராஜவரோதயம் சம்பந்தர் பா.உ.


(2012 டிசம்பர்,7ல் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்)

நன்றி,சபாநாயகர் அவர்களே,

பல தசாப்தங்களாக ஸ்ரீலங்காவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் குமுறிக் கொந்தளித்த போர் ஒரு முடிவுக்கு வந்து மூன்று வருடங்களுக்கு மேலாகிறது. தமிழ் மக்கள் போரை தமக்கு பின்னுக்குத் தள்ளி வைத்துவிட்டு தமது வாழ்க்கையை தொடரவே விரும்புகிறார்கள். இந்த நாட்டிலுள்ள சில மக்களிடையே தமிழ் மக்கள் ஆயுதப் படையினரை வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து வெளியேற்றவே விரும்புகிறார்கள் என்கிற ஒருவகையான தவறான நம்பிக்கை இருந்துவருகிறது.

பிரபாகரனும் துரோகிப் பட்டியலில் இணைக்கப்படுவாரா?

துரோகி: ஈழ அரசியலின் பூமறாங்


1

எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது - அது 1990 - விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் கோபால சாமி மகேந்திரராஜா எனப்படும் மாத்தையா எனது சொந்தக் கிராமமான தம்பலகமத்திற்கு வருகிறார். ஊரே திரண்டு அவரை வரவேற்கிறது. வீதிகள் தோறும் நிறைகுடம் சகிதமாக மக்கள் அவரை மலர் தூவி வரவேற்றனர். எங்கள் முறையின் போது நான் மாத்தையாவிற்குச் சந்தனப் பொட்டு வைத்த நினைவுகள் இப்போதும் பசுமையாகவே இருக்கின்றன. அப்போது இயக்கம் என்ற சொல்லைத் தவிர வேறு ஏதும் அறிந்திராத வயது. தமிழ்த் தேசியம் என்னும் சொற்தொடரை நான் ஒருபேச்சுக்குத்தானும் கேள்வுற்றிராத காலம் அது. எனது கிராமத்தில் ‘இயக்கம்’ என்னும் சொல்கூடப் பெரியளவில் புழக்கத்தில் இருந்திருக்கவில்லை. பொதுவாக இயக்கங்களைப் ‘பொடியள்’ என்றே மக்கள் அழைப்பதுண்டு. பின்னர் காலம் என்னையும் தமிழ்த் தேசிய அரசியலின் பக்கமாக நகர்த்தியது. ஆனால் ஆச்சரியம் - தமிழ்த் தேசியத்தைச் சொற்களாகக்கூடக் கேள்வியுற்றிராத காலத்தில் மலர் தூவி வரவேற்கப்பட்ட மாத்தையா, நான் தமிழ்த் தேசிய அரசியல் குறித்து அறிந்துகொள்ள முற்பட்டபோது, எனக்குத் துரோகியாகவே அறிமுகமானார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல