வெள்ளி, 14 டிசம்பர், 2012

புரோகிராம் இன்ஸ்டால்

புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், சில புரோகிராம்கள், அந்தக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கின்றன. சில, எந்த யூசர் அக்கவுண்ட்டில் இன்ஸ்டால் செய்கிறோமோ, அந்த பயனாளருக்கு மட்டுமே கிடைக்கின்றன. இதனை மாற்றி, அனைவருக்கும் கிடைக்கும்படி செய்திட......

ஜிமெயில்

ஜிமெயில் அக்கவுண்ட் வைத்துள்ளவர்கள், அதில் தாம் நினைவு படுத்த வேண்டிய பணிகளை எப்படி குறித்து வைப்பது என்ற விபரம்

விண்டோஸ் 7 டிப்ஸ்.........

உங்கள் லேப்டாப் கணினியை உங்கள் நண்பர்கள் பயன்படுத்தும் போது உங்களுக்குப்பிடிக்காத புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து மாற்றங்களை ஏற்படுத்தாமல் தடுக்க

டிப்ஸ்.........

மூடப்பட்ட ஓர் இணைய தளத்தை, உடனடியாகத் திறக்க
கண்ட்ரோல் + ஷிப்ட் +ட்டி (Ctrl+Shift+T) கீகளை அழுத்துங்கள். உடனே அப்போது இறுதியாக மூடப்பட்ட தளம் திறக்கப்படும். அதற்கு முந்தைய தளம் எனில், மறுபடியும் அதே கீகளை அழுத்தவும். இப்படியே முந்தைய தளங்களைத் திறக்கலாம். இந்த ஷார்ட்கட் கீகள் தொகுப்பு பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், கூகுள் குரோம் ஆகிய அனைத்திலும் செயல்படுகின்றன.

அனைத்து பிரவுசர்களிலும் இந்த செயல்பாட்டிற்கு ஒரே கீ முறைதான் இயங்குகிறது.
Image Hosted by ImageShack.us

வேர்ட் டாகுமெண்ட்

நாம் உருவாக்கிய சில வேர்ட் டாகுமெண்ட்களை அச்செடுக்கையில், கொட்டேஷன் மார்க் எனப்படும் மேற்கோள் குறிகள் சரியான முறையில் பிரிண்ட் ஆவதில்லை. சில வேளைகளில் இந்த குறியீடுகளுக்குப் பதிலாக வேறு குறியீடுகள் அச்சாகின்றன.

கூகுள் தரும் கூடுதல் மெயில் வசதி

அண்மையில் கூகுள் தன் ஜிமெயில் தளத்தில், புதிய கூடுதல் வசதிகளை அளித்துள்ளது. தற்போதைக்கு சோதனை ஓட்டத்தில் கிடைக்கும் இவை, விரைவில் செம்மைப் படுத்தப்பட்டு நமக்கு முழுமையாக இன்னும் சில வசதிகளுடன் கிடைக்கும். அவற்றை இங்கு காணலாம்.

வினாடி வினா விளையாட

ஏதேனும் வினாடி வினா நிகழ்ச்சியினை தொலைக் காட்சி நிகழ்ச்சியாய்ப் பார்க்கையில், நாமும் கலந்து கொள்ளலாமே என்ற எண்ணம் தோன்றும். இவர்களின் விருப்பத்தினைப் போக்கும் வகையில், இணையத்தில் சில தளங்கள் உள்ளன.

அழித்த பைல்களை மீளப் பெறுவதில் சந்தேகங்கள்

பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், நாம் அழித்த பைல்களை எளிதாக மீட்டுப் பெற்று விடலாம் என்று அனைவரும் எண்ணுகிறோம். ஒரு சிலர், அனைத்தையும் பெற முடியாது என்று கூறுகின்றனர். ஆனால், அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் ஒத்துக் கொள்வதாய் இல்லை. இது குறித்து நிலவும் சந்தேகங்களையும், அவை சரியானவை தானா என்பதனையும் இங்கு காணலாம்.

எம்.எஸ். ஆபீஸ் முக்கிய ஷார்ட்கட் கீகள்

வேர்ட் தொகுப்பு:

Ctrl + Shift + Spacebar: பிரிக்க முடியாத ஸ்பேஸ் ஒன்றை சொற்களுக்கு நடுவே தருகிறது. இந்த இடைவெளியினை டெக்ஸ்ட் ராப்பிங் போன்ற பார்மட் வழிகள் எடுக்க முடியாது.

வேர்ட் தொகுப்பில் வேகம்

நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், இணையத்திற்கு இணையாக நாம் பயன்படுத்துவது எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பாகும். இதில் அனைவரும் பயன்படுத்துவது வேர்ட் தொகுப்பே. பொதுவாக தட்டச்சு மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாட்டின் அடிப்படையைத் தெரிந்து கொண்டவர் அனைவரும், வேர்ட் புரோகிராம் பயன்படுத்துகின்றனர். இதற்கெனத் தனியே எந்த சிறப்பு பயிற்சி வகுப்பிற்கும் செல்வதில்லை. இதனாலேயே, வேர்ட் தரும் வசதிகளில் 10 சதவிகித வசதிகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். நம் வேலைகளை எளிதாக்கவும், வேகமாகச் செயல்படவும் வேர்ட் பல டூல்ஸ்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் நீண்டு கொண்டே செல்லும் மெனுக்களிலும் டூல்பார்களிலும் புதைந்து இருப்பதனால், பலர் இவற்றைக் கண்டு கொள்வதில்லை. இவற்றை விரித்துப் பார்த்தாலும், எப்படி பயன்படுத்துவது என்று தெரியாததனால், பயன்படுத்தாமல் விட்டுவிடுகின்றனர். இவற்றில் சிலவற்றைப் பயன்படுத்துவது குறித்து இங்கு காணலாம். வேர்ட் 2003, 2007 மற்றும் வேர்ட் 2010 ஆகிய தொகுப்புகளில் உள்ள சில டூல்ஸ்களை இங்கு காணலாம்.

ஸ்கைப் வழி வைரஸ்

இந்தியாவில் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கம்ப்யூட்டர் அவசர கால உதவிக் குழு (Computer Emergency Response Team (CERTIn)), இந்தியாவில் ஸ்கைப் பயன்படுத்துவோர் பெற்று வரும், கெடுதல் விளைவிக்கும் ஸ்பாம் மெயில் குறித்து எச்சரிக்கை கொடுத்து வந்தது. தற்போது இந்த ஸ்பாம் வேகமாகப் பரவி வருவதாக அறிவித்துள்ளது.

ஆன்லைன் வீடியோ வகுப்பறைகள்

கல்லூரியில் நடத்தப்படும் பாடங்கள் உங்களுக்கு போர் அடிக்கிறதா? தொடர்ந்து அமர்ந்தவாறு அவற்றைக் கவனிக்க முடியவில்லையா? உங்களுக்காகவே ஆன்லைனில் அனைத்து பாடங்களுக்குமான வீடியோ வகுப்பறைகள், பாடக் குறிப்புகள், அனிமேஷன் வழி பாடங்கள், படித்ததைச் சோதனை செய்து கொள்ள ஆன்லைன் தேர்வுகள், ஆடியோ உரைகள் என அனைத்து வழிகளிலும் கற்றுக் கொள்வதை உற்சாகப்படுத்தும் இணைய தளம் ஒன்று இயங்குகிறது.

மெசஞ்சரை மூடி ஸ்கைப் திறங்க

மைக்ரோசாப்ட் நிறுவனம், அடுத்த 2013 தொடக்கத்தில், தன் விண்டோஸ் லைவ் மெசஞ்சர் வசதியை மூட இருப்பதாக அறிவித்துள்ளது. இதனைப் பயன்படுத்துபவர்கள் அனைவரையும், ஸ்கைப் தொகுப்பினைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளது. மெசஞ்சரில் உள்ள அனைத்து காண்டாக்ட் முகவரிகளை, ஸ்கைப் புரோகிராமிற்கு மாற்றிக் கொள்ளும் வசதியை இப்போதே தருகிறது.

பைல்களின் தன்மை தகவல்

பைல் ஒன்றின் தன்மைகளை நாம் அறிந்து கொள்ள பைல் ப்ராப்பர்ட்டீஸ் என்ற வசதியினைப் பயன்படுத்துகிறோம். பைலைத் தேர்ந்தெடுத்து, அதன் பெயர் மீது ரைட் கிளிக் செய்தி விரியும் கட்டத்தில் Properties என்ற பிரிவில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

ஜிமெயில்

ஜிமெயிலில் ஒன்றுக்கு மேலாக உள்ள காண்டாக்ட் முகவரிகளை ஒன்று சேர்க்கும் முறை

ஜிமெயிலில் டூப்ளிகேட் காண்டாக்ட் முகவரிகள் பல வழிகளில் ஏற்படுகின்றன. சில பிரச்னைகளால், அனைத்து காண்டாக்ட் முகவரிகளும் டூப்ளிகேட் ஆகின்றன என்று ஒருமுறை நான் படித்திருக்கிறேன்.

வேர்ட், நோட்பேடில் கர்சர் துடிக்காமல், நிலையாக இருக்க விரும்பினால்.....

டெஸ்க்டாப்பில் எழுதும் முனை எங்கிருக்கிறது என அறியத்தான், கர்சரைத் துடிக்கும் (blinking) வகையில் அமைத்திருக்கின்றனர்.

இதனை மாற்ற விரும்பினால் “Start” பட்டன் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் “Settings” என்பதனைத் தேர்ந்தெடுத்து அதில் “Control Panel”ல் கிளிக் செய்திடவும்.

டிப்ஸ்...

நார்மல் டெம்ப்ளேட்:

வேர்ட் தொகுப்பைத் தொடங்கும்போது புதிய டாகுமெண்ட் ஒன்று திறக்கப்பட்டு நம் பயன்பாட்டிற்கு தயாராக இருக்கிறது அல்லவா? இந்த செட் அப் தான் நார்மல் டெம்ப்ளேட் அன அழைக்கப்படுகிறது. இதுதான் அனைத்து டாகுமெண்ட்களின் அடிப்படை ஸ்லேட்டாக இருக்கும். இதனை மாற்றினால் அடுத்து தயாராகும் புதிய டாகுமெண்ட்கள் அனைத்தும் மாற்றங்களுடன் கூடிய டெம்ப்ளேட்டையே புதிய நார்மல் டெம்ப்ளேட்டாக வைத்துக் கொள்ளும். இந்த நார்மல் டெம்ப்ளேட் பைல் நீங்கள் வேர்ட் தொகுப்பை இன்ஸ்டால் செய்த டைரக்டரியில் இருக்கும். இதனை நீங்கள் தெரியாமல் அழித்துவிட்டால் வேர்ட் தொகுப்பு புதிய நார்மல் டெம்ப்ளேட் பைல் ஒன்றை உருவாக்கிக் கொள்ளும்.

பிரான்ஸை கவர்ச்சி மூலம் கட்டிப்போட்ட கிம் கர்டஷியன்! (படங்கள் இணைப்பு)

அதீத கவர்ச்சியால் போஸ் கொடுப்பது, மொடலிங் செய்வது கிம் கர்டஷியனுக்குப் புதிதில்லை.

யூடியூப்பிற்கு போட்டியாக ஈரானின் 'மேர்'

யூடியூப் போன்ற காணொளிகள் பகிரும் தளமொன்றை ஈரான் ஆரம்பித்துள்ளது. ஈரானிய அரசாங்கம் தான் தடைசெய்துள்ள தளங்களுக்கு மாற்றீடாக சில தளங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.

அவ்வரிசையிலேயே யூடியூப்பிற்கு பதிலாக 'மேர்' (Mehr)
யூடியூப்பிற்கு போட்டியாக ஈரானின் 'மேர்'என்ற தளத்தை ஆரம்பித்துள்ளது.

புதுவகை பெண்ணுறையை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை!

எச்.ஐ.வி. தொற்று மற்றும் கருதரித்தல் ஆகியவற்றிலிருந்து பெண்களை பாதுகாக்கக்கூடிய விசேட பெண்ணுறையொன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

குறித்த பெண்ணுறையானது கரையக்கூடியது என்பதுடன் இரசாயனப் பொருட்களை விடுவிக்கவும் கூடியது.

தெரியாத ஆலய தகவல்

தர்மபுரியிலுள்ள "மல்லிகார்ஜுனர்" கோயிலில் உள்ள "நவாங்க" மண்டபத்தில் நூறு தூண்கள் உள்ளன. அதில் இரு தூண்களின் அடி, பூமியைத் தொடுவதில்லை. ஒரு.மெல்லிய குச்சியை நுழைத்து தூணின் மறுபக்கத்திலிருந்து எடுத்து இதைப் பரிசீலித்துப் பார்க்க முடியும். ஒவ்வொரு தூணும் 2 டன் முதல் 3 டன் வரை எடை கொண்டது.
Share |
Image Hosted by ImageShack.us

இறந்துபோன பிரபாகரனின் மருத்துவ செலவுக்கு நிதி சேகரிப்பாம்!

விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மருத்துவ செலவுக்காக என்று கூறி வெளிநாடுகளில் நிதி சேகரிக்கப்படுவதாக கொழும்பில் இருந்து வெளியாகும் சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகள் நெடியவன் அணியினர் இந்த நிதி சேகரிப்பில் இறங்கியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொட்டம்மானின் சகா வட்டி சூரி கைது, 2000 கோடிக்கு இவர் அதிபதி!


புலம்பெயர் தமிழர்களால் வட்டி சூரி என்று அறியப்படுகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தர் திருகோணமலையில் இன்று பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டு உள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல