வெள்ளி, 15 அக்டோபர், 2010

மும்மொழி மூலம் இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா??

சிங்கள செறிந்து வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழியினையும், தமிழர் வாழும் பிரதேசங்ளில் சிங்கள மொழியினையும் கற்பித்து நாட்டின் இனப்பிரச்சினையிலிருந்து விடுபட இலங்கை, இந்தியாவிடம் மூன்று மொழி கற்கை நெறிகள் கற்பிப்பது தொடர்பில் உதவி கோரியுள்ளது.

கலங்க வைக்குது "கட்டிப்பிடி' கலாசாரம்

தமிழகத்தில் பொது இடங்களில் பரவி வரும், "கட்டிப்பிடி' கலாசாரம் இளைய சமுதாயத்தை பாழாக்கி வருகிறது.
கலாசாரத்தில் தோய்ந்த நம் பண்பாட்டை சீரழிக்கும் விதமாக, சென்னை போன்ற பெரு நகரங்களில் பெருகி வரும் பைக் காதல், பீச், பார்க் மறைவிட காதல்களால், மாணவ, மாணவியர் தவறான பாதைக்கு செல்லக் கூடிய அபாயகரமான சூழல் ஏற்பட்டு வருகிறது.

சன் சீ உரிமையாளர் என பெண் ஒருவர் விசாரணை!

இலங்கையில் இருந்து கனடாவுக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற சன் சீ கப்பலின் உரிமையாளர்கள் என்ற அடிப்படையில் பெண் ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபையின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த பெண் அகதியாக கனடா சென்றுள்ள நிலையில், குடியுரிமை தொடர்பில் தமது நான்காம் கட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அவரது அடையளம் உறதிப்படுத்தப்படாத நிலையில், தொடர்ந்தும் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பகிறது. குறித்த பெண்ணின் கணவரும் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்கப்படுகிறார். அவர் வன்குவார் சீர்திருத்த முகாமில் தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன.

9 ஆயிரம் டாலர் செலவில் கேல்எல் டவரில் திருமணம்

உலகில் திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்கள் மேகக்கூட்டங்கள் நடுவே திருமணம் செய்ய ஆசைப்படுவர். அதற்காக அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செலவிட தயாராக இருப்பர்.

குளிக்க மறுத்த கணவனிடமிருந்து விவாகரத்து

திருமணமாகி சில வாரங்களே ஆன கணவனிடமிருந்து விவாக ரத்து கோரி வழக்கு தொடுத்த பெண்ணுக்கு ஆதரவாக எகிப்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கலிபோர்னியா அரசு வக்கீலாக கமலாதேவிக்கு ஒபாமா ஆதரவு

க‌ம‌லாவுட‌ன் ஓபாமாவும் பாரியாரும்

அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பதவிக்கு போட்டியிடும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணுக்கு, அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வக்கீலாக இருப்பவர் கமலாதேவி ஹாரிஸ்(45).

தலிபான் கொடுமைக்கு தீர்வு (படங்கள் இணைப்பு)

ஆப்கானிஸ்தானில் தலிபான் கணவர் குடும்பத்தால் மூக்கும், காதும் துண்டிக்கப்பட்ட பெண், அமெரிக்காவில் அறுவை சிகிச்சைக்கு பிறகு பழைய உருவத்தைப் பெற்றுள்ளார்.

கடல்களும். அவற்றின் பரப்பளவும்

(பரப்பளவு சதுரக்கிலோமீட்டர்)

1.தென் சீனக் கடல் --- 29,64,615.

2.கரீபியன் கடல --- 25,15,926.

3.மத்திய தரைக் கடல --- 25,09,969.

4.பேரிங் கடல் --- 22,61,070.

அமெரிக்காவைச் சென்றடைய முயன்ற இலங்கையர் இருவர் கைது

இலங்கையர் இருவர் உட்பட மீன்பிடிபடகு ஒன்றில் அமெரிக்காவைச் சென்றடைய முயன்ற சட்டவிரோத பயணிகள் 31 பேரை கடந்த திங்கட்கிழமை அந்நாட்டு கடலோர காவல் துறையினர் இடைமறித்துப் பிடித்துள்ளார்கள்.

வட்டமான முட்டை (படங்கள் இணைப்பு)

முட்டைப் பெட்டியில் வழமையான கோள வடிவ முட்டைகளுக்கு மத்தியில் நேர்த்தியான வட்ட வடிவ முட்டையொன்றைக் கண்டு சமையல்கலை நிபுணர் ஒருவர் திகைப்படைந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது.

“வெள்ளைக்கொடிக்கு' விறுவிறுப்பான செய்திக்கான விருது கிடைக்கும் என நினைத்து விண்ணப்பித்தேன்; கிடைக்காமையால் இதயம் வலிக்கின்றது

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் வழங்கப்படுகின்ற ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பிலான செய்திக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த விறுவிறுப்புச் செய்திக்கான விருது கிடைக்கும் என நினைத்து விண்ணப்பித்திருந்தேன். எனினும் அந்த விருது கிடைக்கவில்லை. அதனால் எனது இதயம் வலிக்கின்றது என்று “சண்டே லீடர்' பத்திரிகையின் பிரதம ஆசியர் பிரட்ரிகா ஜான்ஸ் தெரிவித்தார். கட்டுரையின் இறுதிப் பந்தியில் வசனத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பந்திகளில் மாற்றம் செய்யப்பட்டதா என்பது தொடர்பில் எனக்கு ஞாபகம் இல்லை; என்னிடம் பதிவுகளும் இல்லை என்றும் அவர் கூறினார்.

அறிந்து கொள்வோம்

o தினந்தோறும் உலகம் முழுவதும் 16 ஆயிரம் கோடி மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. அவற்றுள் 97% தேவையற்றவை.

o இரத்த அணுக்களின் அளவுடைய கிட்டார் கருவியை நனோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கியுள்ளனர்.

500 முன்னாள் புலி உறுப்பினர்கள் குடும்பங்களுடன் இணைக்கப்படவுள்ளனர்!

500 முன்னாள் புலி உறுப்பினர்கள், அவர்களது குடும்பங்களுடன் மீள இணைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஒரு வருடங்களுக்கு மேலாக குறித்த புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

தயா மாஸ்டர் ‐ ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் சம்பந்தமான விசாரணை அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிப் பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் சம்பந்தமாக தயாரிக்கப்பட்டுள்ள விசாரணை அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மி சிங்கப்புலி நேற்று (14) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்வைத்த விடயங்களைக் கவனத்தில் கொண்ட நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கஜேந்திரா உலகின் சிறிய மனிதரானார் (படங்கள் இணைப்பு)

நேபாள நாட்டைச் சேர்ந்த கஜேந்திரா தபா மகர், உலகின் மிகச் சிறிய மனிதனாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல