மாரடைப்பு வந்தது தெரியாமல் கூட பலர் இருக்கிறார்கள். இந்த நிலையில் அந்த அபாயத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள ரத்தபரிசோதனையே போதும் என்ற அளவுக்கு மருத்துவ விஞ்ஞானம் முன்னேறி இருக்கிறது.
வெள்ளி, 19 நவம்பர், 2010
பழைய காரொன்றை வாங்குவதற்காக தமது மகளை விற்பனை செய்த பெற்றோர்
பாவனை செய்யப்பட்ட காரொன்றை கொள்வனவு செய்வதற்காக பெற்றோர் தமது மகளை விற்பனை செய்த சம்பவம் பிரான்ஸில் இடம் பெற்றுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
ஆர்ஜன்டீனாவில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் சக உறுப்பினரை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு (காணொளி இணைப்பு)
ஆர்ஜன்டீனா நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவர் தனது சக உறுப்பினர் ஒருவரின் கன்னத்தில் அறைந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Labels:
காணொளிகள் (Videos)
எம். என். நம்பியார் நினைவு நாள்
தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.
Labels:
இன்று
தேங்காய் உடைத்தால் கணவர் விடுதலையாவாரா? (படங்கள் இணைப்பு)
இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பதவியேற்ற அதே நேரத்தில் கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள பத்திரகாளியம்மன் ஆலயத்துக்குச் சென்று தனது கணவரின் உடல் நலம் காக்குமாறும், அவரின் விடுதலை வேண்டியும் அனோமா பொன்சேகா தேங்காய் உடைத்து வழிபட்டுள்ளார்.
Labels:
இலங்கை
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முக்கியஸ்தர் கைது!
புலனாய்வுப் பிரிவினர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்களை கடந்த ஞாயிற்று கிழமை கைதுசெய்துள்ளனர். அவர் கறுவாக்கேணி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
Labels:
இலங்கை
தீபம் தொலைக்காட்சி, ஜிரிவி ஆகியவற்றில் பணியாற்றிய ஊடகவியலாளரான கார்த்திகேசு திருலோகசுந்தர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் கைது!
லண்டனைச் சேர்ந்த ஊடகவியலாளரான கார்த்திகேசு திருலோகசுந்தர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜே.வி.பி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற லெபனான் பிரஜைகள் இன்று நாடு கடத்தப்படவுள்ளனர்
ஜே.வி.பி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற லெபனான் தம்பதியினர் நாடு கடத்தப்பட உள்ளதாக இலங்கைக் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூளானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
Labels:
இலங்கை
100 அடி ஆழமான கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பாதுகாப்பாக மீட்பு (காணொளி இணைப்பு)
ஆர்ஜென்டீனாவில் 100 அடி ஆழமான குழாய் கிணறில் விழுந்த 3 வயது சிறுமியொருவர் பாதுகாப்பாக வியாழக்கிழமை மீட்கப் பட்டுள்ளார்.
புயனொஸ்அயர்ஸ் மாகாணத்தில் புளோரென்சியோ வரேலாவிலுள்ள வயலில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்த வனேஸ்ஸா மமானி என்ற இந்த சிறுமியை 6 மணி நேரம் போராடி மீட்புப் பணியாளர்கள் மீட்டெடுத்துள்ளனர்.
புயனொஸ்அயர்ஸ் மாகாணத்தில் புளோரென்சியோ வரேலாவிலுள்ள வயலில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்த வனேஸ்ஸா மமானி என்ற இந்த சிறுமியை 6 மணி நேரம் போராடி மீட்புப் பணியாளர்கள் மீட்டெடுத்துள்ளனர்.
Labels:
வினோதமான செய்திகள்
குவைத்தில் ஊசி ஏற்றப்பட யுவதி குறித்து சட்ட நடவடிக்கை
குவைத் நாட்டில் ஊசியேற்றப்பட்டுத் துன்புறுத்தலுக்குள்ளான வி.இலட்சுமி தொடர்பாக மேலதிக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி.எஸ்.ரணவக்க தெரிவித்தார்.
காணாமல்போனோரை வைத்து அரசியல்
காணாமல்போனோரின் குடும்பங்களை வைத்து எதிர்க்கட்சிகள் செய்து வரும் அரசியல் நடவடிக்கைகளின் ஒரு பகுதி யாழ்ப்பாணத்தில் அரங்கேறியது.ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ரில்வின் சில்வா, விஜித ஹேரத், சுனில் ஹந்துனெத்தி ஆகியோருடன், ஜே.வி.பி. சார்பு பல்கலைக்கழக மாணவர் அமைப்புப் பிரதிநிதிகளும் “நாம் இலங்கையர்” என்ற புதிய அமைப்பின் பெயரில் காணாமல்போனோர் தொடர்பான விபரங்களை வெளியிடுமாறு யாழ்ப்பாணத்தில் ஒரு போராட்டத்தை திங்களன்று (15-11-2010)நடத்தினர்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
போரின் உண்மையை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பாகிஸ்தான்
கார்கில் போரில் தங்களுக்கு நேரடி தொடர்பு இல்லை என்று கூறிவந்த பாகிஸ்தான் ராணுவம், போர் முடிவடைந்து 11 ஆண்டுகள் கழித்து, தற்போது போரில் மரணமடைந்த ராணுவ வீரர்களின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Labels:
உலகப்பார்வை
புலிகள் இறுதிப்போரின் போது பெரும்பாலும் சிவில் உடையுடனேயே தாக்குதல்களை நடத்தினர்
புலிகள் இறுதிப்போரின் போது பெரும்பாலும் சிவில் உடையுடனேயே தாக்குதல்களை நடத்தினர் என 58 வது படையணியின் தளபதியும் தற்போது ஐக்கிய நாடுகளின் பிரதி நிரந்தர பிரதிநிதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Labels:
இலங்கை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார் இரா.சம்பந்தன்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இரண்டாவது தடவையாகவும் பதவி ஏற்பதை முன்னிட்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
அதேநேரம், ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படத் தயாரெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படத் தயாரெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Labels:
இலங்கை
தந்தை, சிறிய தந்தை மகள் மீது துஷ்பிரயோகம்
பெலியத்தை மஹவெலகெதர வெலித்தன்னை பிரதேசத்தில் 18 வயது யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்த அவரது தந்தையார் இன்று பெலியத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Labels:
இலங்கை
மிதிவெடி வெடித்து இளைஞர் படுகாயம்
மாதகல் மாந்தவத்தைப் பகுதி யில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை தவறுதலாக மிதிவெடி வெடித்ததில் படுகாயம் அடைந்த இளைஞர் ஒருவர் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.
Labels:
இலங்கை
நியமிக்கப்பட்டார் பேராசிரியர் ஹூல்
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்படவுள்ள பொறியியற் பீடத்தின் இணைப்பாளராக பேராசிரியர் எஸ்.ஆர்.எச்.ஹூல் உத்தியோகபூர்வமாக நியமனம் பெற்றுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கவால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
Labels:
இலங்கை
அறுபது படையினரை புலிகள் கூட்டாக கொன்று புதைத்தனர்
இராணுவத்தினரை கூட்டாக படுகொலை செய்து புதைக்கப்பட்ட இடமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.போர் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கைது செய்யப்பட்ட குறித்த படைவீரர்கள் கூட் டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Labels:
இலங்கை
உரும்பிராய்-மருதனார்மடம் வீதியில் மினிபஸ்-மோ.சைக்கிள் விபத்து ஒருவர் பலி ; ஒருவர் படுகாயம்
உரும்பிராய்-மருதனார்மடம் வீதியில் இடம்பெற்ற மினி பஸ்-மோட் டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.இப்பரிதாப சம்பவத்தில் சுன்னாகம் சபாபதி முகாமைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஜெயச்சந் திரன் (வயது 30) என்பவரே உயிரிழந்தவராவார்.
Labels:
இலங்கை
விடுதலைப் புலிகளின் சொகுசுவீடு வெள்ளவத்தையில் விற்பனை - விசாரணை தொடர்கிறது
கொழும்பின் வெள்ளவத்தைப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியைக் கொண்டு நிர் மாணிக்கப்பட்டு பின்னர் விற்பனை செய்யப்பட்ட சொகுசு இல்லம் தொ டர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
Labels:
இலங்கை
மாவீரர் தினத்தில் யாழ் வரும் இந்திய அமைச்சர் கிருஷ்ணா
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மாவீரர் தினமான 27ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகிறார். இங்கு வரும் அவர் இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்துவார் என கொழும்பு ஊடகங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன.
Labels:
இலங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)


















