வெள்ளி, 17 டிசம்பர், 2010

நிபுணர்கள் குழு இலங்கை விஜயம்

ஐ.நா நிபுணர்கள் குழு இலங்கை விஜயம் மேற்கொண்டு கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை சந்திக்கக் கூடிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியது இல்லை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒருபோதும் நிதி வழங்கியது இல்லை என இந்திய தமிழ் மையத்தின் நிர்வாக அறங்காவலர் பாதிரியார் ஜெகத் கஸ்பார் கூறியுள்ளார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்கள் தவறானது - அமைச்சர் டக்ளஸ் மற்றும் கருணா மறுப்பு

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட் டங்களில் உள்ள தமிழ் வர்த்தகர்களை கடத்தி கப்பம் பெற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வுக்கும்,பிரதி அமைச்சர் முரளிதரனுக்கும் பாதுகாப்பு அமைச்சு ஆதரவு வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்ட தக வலை இருவரும் மறுத்துள்ளனர்.இது தொடர்பாக தமது மறுப்பை பி.பி.சி. தமிழோசையிடம் தெரிவித்தனர்.

மனித உரிமை மீறல் செயல்களில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டனர்! - விக்கிலீக்ஸ் தகவல் வெளியீடு

விக்கிலீக்ஸினால் புதிதாக வெளியிடப்பட்ட அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் தகவல் பரிமாற்ற ஆவணத்தில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றியும் இதனைக் கண்காணிப்புக் குழு கண்டும் காணாமல் இருந்தமை பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் அல்ல - தேரர் சாட்சியம்! தமிழ்கட்சிகள் கடும் கண்டனம்

வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகம், தமிழ்த் தேசி யம் என்று எவரும் உரிமை கொண்டாடமுடியாது. அதற் கான ஆதாரங்களும் இல்லை; வடமுனை முதல் தென்கரை வரை ஆட்சி புரிந்தவர்கள் சிங்களவர்கள் தான் என்று அடித்துக் கூறுகின்றார் எல்லாவல மேத்தானந்த தேரர். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஐக்கியத்துடன் இணைந்து வாழ்வோம்.

தென் ஆபிரிக்க தேனிலவு படுகொலை சந்தேகநபரான பிரித்தானிய கோடீஸ்வரர் ஒரு தன்னின சேர்க்கையாளர்

தென் ஆபிரிக்காவுக்கு தேனிலவுக்கு சென்ற வேளை தனது புது மனைவியை ஆட்களை வைத்து படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள இந்திய வம்சாவளி பிரித்தானிய கோடீஸ்வரரான ஷயன் தேவானி பணத்தைக் கட்டணமாக செலுத்தி தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக தெரிவித்த ஆணொருவரை பிரித்தானிய பொலிஸார் தீவிர விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். ஜேர்மனிய முனிச் நகரைச் சேர்ந்த வழி காட்டியான மேற்படி 39 வயது நபர், ஷரியன் தேவானி தன்னுடன் 3 தடவைகள் தன்னின சேர்க்கை பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

தேனிலவு படுகொலை குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பிரித்தானிய கோடீஸ்வரருக்கு எதிராக புதிய கொலை வழக்கு

தென் ஆபிரிக்காவுக்கு தேனிலவுக்காக சென்றபோது புதுமனைவியை ஆட்களை வைத்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகி பிணையில் விடுதலையாகியிருக்கும் இந்திய வம்சாவளி பிரித்தானிய கோடீஸ்வரரான ஷரியன் தேவானி, மருத்துவர் ஒருவரின் படுகொலை தொடர்பான புதிய குற்றச்சாட்டு விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.
ஷரியன் தேவானியின் பணத்தைப் பெற்று அவரது மனைவியை அன்னியை (28 வயது) காரில் கடத்திச் சென்று படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகிய வாடகைக் கார் சாரதியான ஸொலா தொங்காவுக்கு (31 வயது) தென் ஆபிரிக்க நீதிமன்றமொன்று 18 வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

பண்பான நடத்தையால் 17 மில்லியன் டொலர் பசு

தனது பண்பான நடத்தையின் காரணமாக நபரொருவர் அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பில் 17 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பரிசை வென்ற சம்பவம் பிலிப்பைன்ஸில் இடம்பெற்றது.

பிரபல விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தின்பண்ட பொதியில் எலிக்குஞ்சுகள்

பிரபல விற்பனை நிலையமொன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நொறுக்கு தின்பண்டப் பொதியொன்றில் எலிக் குஞ்சுகளை கண்டு கொள்வனவாளர் ஒருவர் அதிர்ச்சியடைந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது.

மோனாலிஸாவின் கண்களில் சங்கேத எழுத்துக்கள்

உலகப் பிரபல ஓவியர் லியனார்டோ டாவின்சியின் மோனாலிஸா ஓவியத்தின் கண்களில் சங்கேத எழுத்துக்கள் எழுதப்பட்டிருப்பதை ஓவிய நிபுணர்கள் முதல் தடவையாக கண்டறிந்துள்ளனர்.

சுடுநீருக்குள் குழந்தையை விழவிட்டு படுகொலை

சுடுநீருக்குள் 16 மாத ஆண் குழந்தையொன்றை விழவிட்டு படுகொலை செய்த குற்றச்சாட்டில் குழந்தையின் தாயின் காதலர் கைது செய்யப்பட்டுள்ள சம் பவம் அமெரிக்க டலஸ் நகரில் இடம்பெற்றுள்ளது.
ஜப்ரேலொன் பப்லஸ் என்ற மேற்படி குழந்தையை கையில் வைத்திருந்தபோது, அது தவறுதலாக சுடுநீர் நிரப்பப்பட்டிருந்த கொள்கலனில் விழுந்ததாகவும் தான் திட்டமிட்டு மேற்படி குற்றச்செயலை செய்யவில்லை எனவும் கைது செய்யப்பட்டுள்ள காதலர் கார்ல்னேலஸ் டிலனி சிமன்ஸ் தெரிவித்தார்.

103 ஆவது வயதில் தன்னால் வடிவமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தை திறந்து வைத்த கட்டிட கலைஞர் (படங்கள் இணைப்பு)

பிரெஸிலைச் சேர்ந்த பிரபல கட்டிட கலை நிபுணரான ஒஸ்கார் நிய்மெயர் தனது 103 ஆவது பிறந்த தினத்தில் தன்னால் வடைவமைக்கப்பட்ட அருங்காட்சியகமொன்றை திறந்து வைத்துள்ளார்.

5,480 போத்தல்களால் நத்தார் மரம்


 இஸ்ரேலிய ஹொய்பா நகரில் மீள்சுழற்சிக்குட்படுத்தப்பட்ட 5,480 போத்தல்களால் உருவாக்கப்பட்ட நத்தார் மரம்

உலகின் விலை உயர்ந்த கிறிஸ்துமஸ் மரம் (படங்கள், காணொளி இணைப்பு)

உலகின் மிக விலை உயர்ந்த கிறிஸ்துமஸ் மரம் அபுதாபியில் உள்ள ஒரு ‌நட்சத்திர ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 11 மில்லியன் டாலர்கள் என அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியி்ட்டுள்ளன .

இஸ்ரேலை தாக்கிய கடும் புயலால் வெளித்தோன்றிய ரோமன் கால உருவச்சிலை (படங்கள் இணைப்பு)

இஸ்ரேலிய கடற்கரை பிராந்தியத்தைத் தாக்கிய பாரிய புயலொன்றையடுத்து பல நூற்றாண்டுக் காலமாக புதையுண்டிருந்த ரோமன் உருவச் சிலையொன்று வெளித்தோன்றியுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல