நாம் தினந்தோறும் இணையத்தில் அதிக நேரம் செலவிடுகிறோம். அது பெர்சனல் கம்ப்யூட்டராகவோ அல்லது மொபைல் சாதனமாகவோ இருக்கலாம். தகவலைத் தேடிப் பெற இவற்றைப் பயன்படுத்தி இணையத்தில் உலா வருகிறோம். இதில் தகவல் தேடிப் பெற பலரின் விருப்பமாக இருப்பது கூகுள் தேடல் சாதனமே. இந்த தேடல்களில், பல நம்முடைய தனிப்பட்ட விருப்ப தேடல்கள் நிச்சயம் இருக்கலாம். இந்த தேடல்களை மற்றவர்கள் அறியக் கூடாது என விருப்பப்படுவோம். ஆனால், இவை நம் கம்ப்யூட்டரில், மொபைல் சாதனங்களில் இயக்கப்படும் கூகுள் சர்ச் இஞ்சினில் பதியப்பட்டு, அதனைப் பயன்படுத்தும் மற்றவர்கள் பார்க்கக் கிடைக்கும். இவை தனிப்பட்ட நபரின் தேடல்கள் என்றால், இவை காட்டப்படக் கூடாதே. இவற்றை சர்ச் இஞ்சினிலிருந்து நீக்கப்படும் வழிகளை நாம் தெரிந்து கொண்டால், நிச்சயம் நிம்மதியாக இருப்போம். அவற்றை இங்கு காணலாம்.
புதன், 18 பிப்ரவரி, 2015
எக்ஸெல் டிப்ஸ்... அப்போதைய நேரம் பதிய.. பேஸ்ட் பட்டன்.. ஒர்க்புக் பிரிண்ட் பிரிவியூவுடன் சேவ் செய்திட
அப்போதைய நேரம் பதிய: சிலர் எக்ஸெல் புரோகிராமில் பணி செய்கையில், தாங்கள் ஈடுபடும் பல்வேறு வேலைகளில், தாங்கள் செலவழிக்கும் கால அளவை அறியத் திட்டமிடுவார்கள். அதற்கென, வேலை தொடங்கும் போது அல்லது முடிக்கும் போது, அல்லது இடைவெளியின் போது, அப்போதைய நேரத்தைப் பதிய விரும்புவார்கள். இவர்கள், நேரத்தைப் பார்த்து, அதனை டைப் செய்து எண்டர் தட்ட வேண்டியதில்லை. செல் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, Ctrl+: (: -கோலன்)என்ற கீகளை அழுத்தினால் போதும். கோலன் அமைக்க ஷிப்ட் கீ அழுத்தப்பட வேண்டும் என்பதால், இதனை Shift+Ctrl+: எனவும் கூறலாம். இந்த கீகளை அழுத்திவிட்டால், எக்ஸெல், நீங்கள் தேர்ந்தெடுத்த செல்லில், சிஸ்டத்தின் அப்போதைய நேரத்தினை அமைக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உடனே என்டர் அழுத்தி, அதனை ஏற்றுக் கொள்வதுதான்.
Labels:
கணணி மையம் (Microsoft Excel)
ப்ளக் இன் புரோகிராம்களை நீக்கி பிரவுசரைப் பாதுகாக்க
பிரவுசர்கள் திறன் குறைவாக வடிவமைக்கப்பட்ட காலத்தில், அதன் கூடுதல் செயல்பாடுகளுக்கு ப்ளக் இன் புரோகிராம்கள் தேவைப்பட்டன. ஆனால், காலப் போக்கில், வைரஸ் மற்றும் மால்வேர் அனுப்புபவர்கள், இந்த ப்ளக் இன் புரோகிராம்களில் உள்ள பிழைக் குறியீடுகளை இலக்காகக் கொண்டே செயல்பட்டனர். எனவே தான், பல பிரவுசர்கள், ப்ளக் இன் புரோகிராம்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளை, பிரவுசர்களே மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டன. ப்ளக் இன் புரோகிராம்களை அவையே நீக்கி வைத்தன. எடுத்துக் காட்டாக, யு ட்யூப், ப்ளாஷ் புரோகிராமினை அறவே தன்னிடமிருந்து நீக்கியது. வேறு சில பிரவுசர்களும் இதே போல சிலவற்றைத் தள்ளி வைத்தன.
Labels:
கணணி மையம் (Web Browsers)
வேர்ட் டிப்ஸ்...
டேப்பின் இடைவெளி அமைக்க: வேர்ட் ரூலர் நமக்குப் பல வழிகளில் உதவுகிறது. வழக்கமாக டேப்களை நாம் செட் செய்கிறோம். ஒவ்வொரு டேப்பிற்கும் இடையே உள்ள தூரத்தினை ரூலர் மூலம் அறிந்து கொள்கிறோம். ஆனால் ஒரு டேப் பாய்ண்ட் ரூலரின் இடது புறம் இருந்து எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அதே போல வலது புறத்திலிருந்து எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அறியலாம். இதற்கு ரூலரில் டேப் உள்ள இடத்தில் கர்சரைக் கொண்டு வைக்கவும். இப்போது இடது பக்க மவுஸ் பட்டனை அழுத்தவும். அதனை விட்டுவிடாமல் வலது பக்கம் மவுஸ் பட்டனையும் அழுத்தவும். இப்போது குறிப்பிட்ட டேப் இரு புறத்திலிருந்தும் எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்று காட்டப்படும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
'பேஸ் புக்'கில் வலை விரித்தாள்... கரம் பிடித்தேன்... கரு கலைத்து பறந்து போனாள்! 'ஜிம்' நடத்தி வரும் வாலிபர் 'ஜம்'மென ஏமாந்த கதை
திருமணம் செய்து, மூன்று லட்சம் ரூபாய் மோசடி செய்த துடன், சமூக வலைதளங்கள் வாயிலாக ஆண்களை வீழ்த்தி வரும், ஐ.டி., பெண் ஊழியர் மீது நடவடிக்கை கோரி, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
தனியார் விடுதியில்...:
சென்னை, தி.நகரைச் சேர்ந்தவர், கார்த்திகேயன், 27; ஜிம் மாஸ்டர். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு:
தனியார் விடுதியில்...:
சென்னை, தி.நகரைச் சேர்ந்தவர், கார்த்திகேயன், 27; ஜிம் மாஸ்டர். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு:
Labels:
பித்தலாட்டங்கள்,
பேஸ்புக் (Facebook)
ரஜினிக்கு எதிராக ஜெயலலிதாவைத் தூண்டி விடுகிறார்களா "லிங்கா விநியோகஸ்தர்கள்"?
லிங்கா விவகாரத்தை பக்கா அரசியலாக்கிவிட்டார்கள், அதன் விநியோகஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர்.
லிங்காவுக்கு நஷ்ட ஈடு கேட்பதாகக் கூறிக் கொண்டு, படம் வெளியான முதல் வாரமே படத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள். அடுத்த சில தினங்களில் சீமான், வேல் முருகன் போன்ற அரசியல்வாதிகளை அழைத்து உண்ணாவிரதமிருந்தார்கள்.
லிங்காவுக்கு நஷ்ட ஈடு கேட்பதாகக் கூறிக் கொண்டு, படம் வெளியான முதல் வாரமே படத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள். அடுத்த சில தினங்களில் சீமான், வேல் முருகன் போன்ற அரசியல்வாதிகளை அழைத்து உண்ணாவிரதமிருந்தார்கள்.
Labels:
சினிமா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




