சனி, 25 ஆகஸ்ட், 2012
ரொம்ப இடைவெளி விடாதீங்க சுவாரஸ்யம் இல்லாம போயிரும்!
ஓய்வற்ற பணிச்சூழல், அடிக்கடி வெளியூர் பயணம் செல்வது என தம்பதியரிடையேயான பிஸியான சூழ்நிலை அவர்களின் தாம்பத்ய வாழ்க்கையில் இடைவெளியை ஏற்படுத்திவிடும். சில தின இடைவெளி என்றால் பராவாயில்லை. அதுவே வாரக்கணக்கில், ஏன் மாதக்கணக்கில் கூட சில தம்பதியர் இணையாமல் இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு இடையே பிணைப்புகள் இன்றி இடைவெளிகள் அதிகரிக்கத் தொடங்கிவிடும். இடைவெளியை குறைத்து இணக்கத்தை அதிகரிக்க என்ன செய்யவேண்டும் என்பதை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.
Labels:
பாலியல்,
பெண்கள் பக்கம்
இராஜாஜி செய்த கொலை
இராஜாஜி சேலத்தில் தொழில் செய்து வந்த காலத்தில் நாமக்கல்லில் டி. விஜயராகவாச் சாரியார் என்பவர் மாவட்ட துணை ஆட்சிய ராக இருந்தார். அவருடைய நீதிமன்றத்தில் அடிக்கடி தோன்றுவார் இராஜாஜி அவர்கள். இராஜாஜி அவர்களுடைய மதிநுட்பத்தையும், வாதத் திறமையையும் கண்ட நீதிபதிக்கு அவரிடம் மிகுந்த பற்று உண்டாயிற்று. அதுவே பின்னர் இவ்விருவருக்கும் ஏற்பட்ட நட்புக்குக் காரணமாக இருந்தது.
Labels:
பலதும் பத்தும்
சிலந்தி வலையின் விந்தை !
சிலந்தி தான் கட்டிய வலையில் சிக்கிக்கொள்வதில்லை. ஏன் தெரியுமா? சிலந்தி கட்டுகின்ற வலையில் வட்டமாகவும், குறுக்காகவும் இழைகள் இருக்கும். அதில் வட்டத்தில் உள்ள இழைகளில்தான் பசை இருக்கும். குறுக்காச் செல்கிற இழைகளில் பசை இருக்காது, சிலந்தி அதன் வலையில் நடமாடும் போது, இந்தக் குறுக்கு இழைகளில் தான் நடக்கும். வட்டமான இழைகளைத் தொடாது. அப்படி வட்ட இழைகளில் பட்டுவிட்டாலும் ஒட்டிக்கொள்ளாதிருக்க அதன் வளைந்த கால்களும், கால்களில் உள்ள பிரத்தியேக ரோமங்களும் உதவுகின்றன.
Labels:
அறிவுக்களஞ்சியம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







