ஞாயிறு, 14 டிசம்பர், 2014
பள பளக்கும் கூந்தலுக்கு.....
பெண்களின் அழகுகளின் ஒரு பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக, அடர்த்தியாக இருந்தால் அழகு தேவதை தான். அன்றை நாட்களில் உள்ள மங்கைகளுடன் ஒப்பிடும் போது இன்றைய நவநாகரிக நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்ககூட போதிய நேரங்கள் கிடைப்பதில்லை. அதன் விளைவாக பிளவுப்பட்ட அடர்த்தியின்றி, கருமையில்லா கூந்தல் கிடைகிறது. தலைமுடி அடர்ந்து வளர சில டிப்ஸ்
Labels:
அழகு குறிப்புகள்
தக்காளியால் மேம்படும் அழகு
உங்களுக்கு பிடித்த காய்கறிகளை பட்டியலிடுங்கள் என்றால், கண்டிப்பாக அதில் தக்காளிக்கு இடமிருக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் காய்கறி தான் தக்காளி. அதனை சமையலில் சேர்த்தால் உணவிற்கு ருசி கொடுக்கும். சாறு நிறைந்த இந்த தக்காளியை அப்படியே கூட விரும்பி சாப்பிடுபவர்கள் பலர் உள்ளனர். இது மட்டுமா? இதனை சாறு எடுத்து பருகவும் கூட பலரும் விரும்புவார்கள். பழச்சாறு கடைகளில் கிடைக்கும் வெகு சில காய்கறி ஜூஸ்களில் இதுவும் ஒன்று என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இதையெல்லாம் தாண்டி தக்காளி சூப்பும் மிகவும் பிரபலம். ஹோட்டல்களில் உள்ள மெனுக்களில் தக்காளி சூப் இல்லாமல் கண்டிப்பாக இருக்காது. இப்படிப்பட்ட தக்காளியில் பலவித உடல்நல பயன்கள் அடங்கியுள்ளன. இதனால் நாவிற்கும் மட்டும் ருசி சேராமல், உட்புற உடலுக்கும் பலவித ஆரோக்கியங்கள் கிடைக்கும். அதை பற்றி பேச வேண்டுமானால் தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். சரி அவ்வளவு தான் இதன் பயன் என்றால் அது தான் இல்லை.
Labels:
அழகு குறிப்புகள்
மூக்கின் மேல் இருக்கும் சொர சொரப்பை நீக்க
ஆண்கள், பெண்கள் என அனைவருக்குமே பட்டுப்போன்ற மென்மையான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு இடையூறை விளைவிக்கும் வண்ணம் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை முகத்தில் ஏற்பட்டுவிடும். ஒருவேளை பருக்கள் முகத்தில் இல்லாமல் இருந்தாலும், மூக்கின் மேல் மற்றும் அதனைச் சுற்றிய இடங்கள் மட்டும் சொரசொரவென்று லேசாக கருப்பாகவும், வெள்ளையாகவும் இருக்கும். பருக்களையும், பருக்களால் வந்த தழும்புகளையும் நீக்க 20 வீட்டுக்குறிப்புகள் கரும்புள்ளி பிரச்சினையானது எண்ணெய் பசை சருமத்தினருக்கு தான் அதிகம் இருக்கும். அதிலும் சருமத்துளைகளில் இருந்து வெளிவரும் எண்ணையானது வெளியேறாமல் அடைக்கப்படும் போது ஏற்படும். சருமத்தின் மென்மையைத் தடுக்கும் கரும்புள்ளி பிரச்சினையை தடுக்க சமையலறையிலேயே நிறைய பொருட்கள் உள்ளன. இங்கு கரும்புள்ளியை நீக்க உதவும் சமையலறைப் பொருட்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அதனை அன்றாடம் செய்து உங்கள் முகத்தை பட்டுப்போன்று மென்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.
Labels:
மருத்துவம்
தர்மம் தலைகாக்கும்
பிச்சை என்பது உழைக்க உடல் வலிமை இல்லாதவர்கள், இரண்டு கண்களும் தெரியாதவர்கள், வாய்பேச முடியாதவர்கள், உடல் வலிமையற்ற விதவைகள், அநாதைகள், வயோதிபர்கள், கை கால் அற்றவர்கள், கடும் நோய்வாய்ப்பட்டவர்கள், தங்களால் உழைத்து உண்பதற்கு முடியாமை காரணமாக தம் பசியைப் போக்குவதற்கு வசதிபடைத்தவர்களிடம் பொருளோ, பணமோ இரந்து கேட்பது என்று பொருள்படும்.
Labels:
கட்டுரைகள்,
பலதும் பத்தும்
அகச்சிவப்புக் கதிர்களை கண்கள் காண இயலுமா?
எம்மைச் சுற்றி எத்தனையோ மின்காந்த அலைகள் விரைந்து செல்கின்றன. வானொலி, தொலைக்காட்சிக்கான தகவல்களைக் கொண்டுவரும் வானொலி அலைகள், தகவல் பரிமாற்றங்களைக் காவிச்செல்பவை எனப் பல அலை நீளங்களைக் கொண்ட மின்காந்த அலைகள் அங்குமிங்கும் பயணித்துச் செல்கின்றன. இயற்கையான மின்காந்த அலைகள் சூரியனிலிருந்தும் வருகின்றன. அவற்றில் அபாயகரமான சக்தியைக் கொண்ட கதிர்ப்புக்கள், அதாவது புறவூதாக் கதிர்கள் ஓசோன் படையினால் உறிஞ்சப்பட, ஏனையவை புவியை வந்தடைகின்றன.
Labels:
பலதும் பத்தும்
எறிந்தவரை வந்தடையும் ‘பூமராங்’ இயக்கத்தின் பின்னணி
தென்னிந்திய தொலைக்காட்சி விளம்பரமொன்றில் ‘பூமராங்’ (Boomerang) இனை வீசி எறிகையில் அது திரும்பி வருவதைக் காண்பித்து குறிப்பிட்ட துறையில் முதலீடு செய்தால் அது முழுமையாகத் திரும்பிவரும் என உருவகப்படுத்தப்படுகிறது. விளம்பரக் காட்சிக்குப் பயன்படும் இப் ‘பூமராங்’ என்பது முன்னைய கால மக்களின் பறந்து இலக்கைத் தாக்கிவிட்டு மீண்டும் திரும்பி வரும் ஆயுதமாகப் பயன்பட்டது. எவ்வித இயந்திரங்களும் உள்ளடக்கப்படாத நிலையில் மரத்தினால் ஆக்கப்பட்ட, எளிமையாகத் தோன்றும் இந்த ஆயுதம் எப்படி பயணித்துச் சென்று திரும்புவது எவ்வாறு சாத்தியம் எனப் பலரும் எண்ணியிருக்கக்கூடும்.
Labels:
பலதும் பத்தும்
நாய்கள் குரங்குடன் விளையாடுவதை பார்ப்பதற்காக மக்கள் படையெடுப்பு
உடுவில்: சுன்னாகம் பேருந்து நிலையப் பகுதியில் கடந்த சில நாட்களாக குரங்கும் நாயும் நெருக்கமாக நட்புடன் விளையாடுவதைப் பார்ப்பதற்காக இப்பிரதேசத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
Labels:
தமிழர்கள்,
யாழ் செய்திகள்,
யாழ்ப்பாணம்
சுமார் 25 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்த நபர் வீடு திரும்பினார்
உடுவில், குண்டு வெடிப்பின் பின்னர் காணாமல் போன நிலையில் சுமார் 25 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் மீண்டும் தனது சொந்த இடத்துக்குத் திரும்பியுள்ளார். சுன்னாகம் பெற்றோல்செற் ஒழுங்கையைச் சேர்ந்த எஸ்.வைரவநாதன் (வயது 53) என்பவரே இவ்வாறு மீண்டும் சொந்த இடத்துக்குத் திரும்பியுள்ளார்.
Labels:
தமிழர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)










