அவ்ரோ விமானத் தாக்குதலுக்குத் திட்டமிடுகின்ற அளவிற்கு எமக்கு மத்தியில் நம்பிக்கையும் உறுதியும் வேர்விட்டிருந்தது. ஏதோ பெரிய தாக்குதலை நடத்தி முடிக்கப் போகிறோம் என்ற பய உணவெல்லாம் எம்மிடம் இருக்கவில்லை. கடந்து சென்ற ஒரு வருடத்தினுள் எமது இராணுவத் தாக்குதல்களின் வெற்றியும், இயக்கதினுள் ஏற்பட்டிருந்த ஒழுங்கமைப்பும் நாம் குறிப்பிடத்தக்க பிரதான அமைப்பாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது.
புதன், 10 பிப்ரவரி, 2010
11 மனைவிகள் 21 குழந்தைகளுக்கு சொந்தக்காரன்
அமெரிக்காவில் 29 வயது வாலிபர் ஒருவர் 11 மனைவிகளின் மூலம் 21 குழந்தைகள் பெற்று அதிர வைத்துள்ளார்.இந்தவாலிபர் (இல்லை கில்லாடி ) டெஸ்மாண்ட் ஹாட்செட் (Desmond Hatchett). இவருக்கு இரண்டு முறை ஒரே ஆண்டில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. இவரது மூத்த குழந்தைக்கு 11 வயதாகிறது. கடைசி குழந்தைக்கு 11 மாதம் மட்டுமே ஆகிறது. குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வருவதால் இவரால் அனைத்து குழந்தைகளையும் பராமரிக்க முடியவில்லை.
Labels:
வினோதமான செய்திகள்
ஜீன்ஸ் பிறந்த கதை
1850 ஆண்டு சான்பிரான்சிஸ்கோவின் ஒரு பகுதியில் தோண்ட தோண்ட தங்கம் கிடைப்பதாக யாரோ புரளி பரப்ப, அதை நம்பிய அந்நகரத்து மக்கள் அங்கு சென்று இரவு பகலாய் தோண்டினார்கள். அங்கு தோண்ட வந்தவர்கள் தங்குவதற்கு கூடாரம் போடுவார்கள் என்று நம்பி ஒருவன் கூடாரத் துணிக் கடை போட்டான். வியாபாரம் சுமார்தான். ஆனால், தோண்டுபவர்கள் அணிந்திருந்த ஆடைகள் தோண்டும்போது அதிகமாக கிழிவதால், நல்ல முரட்டு ரகத்திலான துணி குறித்து மக்கள் யோசிக்கும்போதே, வியாபாரி கூடாரத் துணியில் காற்சட்டை தைத்து விற்க தொடங்கிவிட்டான். இது தான் ஜீன்ஸ் பிறந்த கதை.
Labels:
அறிவுக்களஞ்சியம்
‘எண்’ சிறப்பு
ஒரு எண்ணை, ஒன்பதால் வகுத்தால் எட்டும், எட்டால் வகுத்தால் ஏழும், ஏழால் வகுத்தால் ஆறும், ஆறால் வகுத்தால் ஐந்தும், ஐந்தால் வகுத்தால் நான்கும், நான்கால் வகுத்தால் மூன்றும், மூன்றால் வகுத்தால் இரண்டும், இரண்டால் வகுத்தால் ஒன்றும் விடை வரும்.
அந்த எண் 2519
அந்த எண் 2519
Labels:
அறிவுக்களஞ்சியம்
புயல் எப்படி உருவாகிறது?
புயல் உருவாவதற்கு முக்கிய காரணம் பூமியின் அமைப்புதான். ஒரு ஆரஞ்சுப்பழம் போன்ற அமைப்புடைய பூமி அதன் அச்சில் நேர் செங்குத்தாக நிற்காமல் ஒருபக்கமாக அதாவது 23 1/2 டிகிரி சாய்ந்து சுற்றுவதால் சூரியனிடமிருந்து வரும் உஷ்ணம் பூமியின் எல்லாப் பரப்பின் மேலும் ஒரே சீராகப்படுவதில்லை. இதன் காரணமாக பூமியின் ஒரு பகுதி அதிக வெப்பமாகவும் இன்னொரு பகுதி குறைவான வெப்பமாகவும் இருக்கும். வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் காற்று விரிவடைந்து மேலே செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து ஒரு வெற்றிடம் உண்டாகிறது. அந்த வெற்றிடத்தை நோக்கி காற்றின் அழுத்தம் அதிகமாக உள்ள பகுதியிலிருந்து காற்று வேகமாய் வீச ஆரம்பிக்கிறது. அப்போது பூமியின் சுழற்சியின் காரணமாக காற்று அலைக்கழிக்கப்பட்டு சூறாவளியாக மாறி புயலாய் அதாவது குறைந்த காற்று அழுத்த மண்டலமாக உருவாகிறது.
Labels:
அறிவுக்களஞ்சியம்
குண்டு துளைக்காத கார்கள்
தீவிரவாதிகளால் ஆபத்து என்று கருதப்படுகிற உலகத் தலைவர்களுக்காக குண்டு துளைக்க முடியாத கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை எப்படி அந்தத் தலைவர்களைப் பாதுகாக்கின்றன என்பது தெரியுமா? இந்தக் கார்களின் கண்ணாடிகள் ‘கெவ்லார்’ எனப்படும் ரசாயனப் பொருள் கலந்து கனமாக தயாரிக்கப்படுகின்றன. இந்தக் கண்ணாடியின் மேல் குண்டு படும்போது அதன் வேகம் குறைந்து வழுக்கிக் கொண்டு போய் ஏதாவது ஒரு பக்கம் விழுந்துவிடும். இந்தக் கண்ணாடியைத் தவிர காரில் பயணிகள் உட்காரும் இடத்தைச் சுற்றிலும் 10 மில்லிமீட்டர் கனத்துக்கு இரும்புத் தகடுகளும் வைக்கப்படும். இந்த இரும்புத் தகடுகளும் துப்பாக்கித் தோட்டாக்களை உள்ளே அனுப்பாது.
அதே போல் யாராவது காரைப் பின் தொடர்ந்து வந்தால் காரை மறைக்கும் வித்த்தில் வெண்மையான புகை மண்டலத்தை எழுப்பி எதிரிகளை குழப்பிவிடும் வசதியும் இதில் உள்ளது.
குண்டு துளைக்காத கார்களைத் தயாரிப்பதில் முதலிடம் வகிப்பது இத்தாலிய நாடு. வருஷத்துக்கு 2000 கார்கள் வரை தயாரிக்கிறது. குண்டு துளைக்காத காரின் எடை சாதாரண காரின் எடையைக் காட்டிலும் 500 கிலோ அதிகம்; விலையோ நான்கு மடங்கு அதிகம்.

மாரத்தான் (Marathon) ஓட்டத்தின் வரலாறு
கிரீஸ் நாட்டில் உள்ள மாரத்தான் என்ற இடத்திலிருந்து தொடங்கியதால் இந்த ஓட்டத்திற்கு இப்பெயர் வந்தது. மாரத்தானின் தொடக்க வரலாறு சுவாரசியமானது. கி.மு.490ல் இது தொடங்கியது. பெர்சிய சக்ரவர்த்தி டேரியசின் படையெடுப்பைத் தோற்கடிக்க, ராணுவ உதவியை வேண்டி, 48 மணி நேரம் இடைவிடாது, ஏதென்ஸ் நகரிலிருந்து ஸ்பார்ட்டா நகருக்கு - மூச்சுப் பிடிக்க ஓரே ஓட்டமாக ஓடினான் - பிடிபிடிஸ் என்ற கிரேக்க வீரன். காடு, மலை, நதியெல்லாம் கடந்து ஓடினான் இவன்.
மாரத்தான் என்ற இடத்தில் பின்பு டேரியஸை எதிர்த்து சண்டையும் போட்டு, மீண்டும் ஏதென்சுக்கே ஓடினான் - வெற்றிச் செய்தியைக் கூற. இது 24 மைல் தூரம். ஓட்டமாக ஓடி, “மகிழ்ச்சியான செய்தி, தோழர்களே! நாம் வென்றோம்!” என்று கூறி, மயங்கி விழுந்து, உயிர் துறந்தான். அவனது நினைவாகத்தான் மாரத்தான் ஓட்டம் நடைபெற ஆரம்பித்தது.
இப்போதைய ஒலிம்பிக்ஸ் எப்போது தொடங்கியது தெரியுமா? கி.பி.1896ல். கிரீஸ் நாட்டு ஏதென்சில், முதல் முதலாக தொடங்கியது இது. அப்போது மாரத்தான் ஓட்டம் ஓடிய பிடிபிடிஸின் நினைவாக மாரத்தான் ஓட்டமொன்று நடத்த ஏற்பாடாயிற்று. லூயிஸ் என்ற கிரேக்க விவசாயிதான் இதை ஓடி பரிசு பெற்றார். கிரேக்கர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பெண்கள் அவரது காலடியில் தமது நகைகளை வீசி எறிந்தார்கள். ஒரு ஓட்டல்காரர் ஒரு வருட காலத்துக்கு இலவச உணவை அவனுக்கு அளிக்க முன்வந்தார். ஒரு சிறுவன் அவனது காலணிகளுக்கு இலவசமாக ஆயுள் முழுதும் பாலிஷ் போட முன் வந்தான். ஒலிம்பிக் மாரத்தானின் தூரம் தற்போது 26 மைல்கள், 385 அடிகள்!

போர்நிறுத்தம் செய்த புயல்
1888 ஆம் ஆண்டு ஜெர்மனியை ஆண்டு வந்த மன்னர், தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள - சமோவா என்றழைக்கப்படும் தீவுக்கூட்டங்களை தன் காலனிக்குள் கொண்டு வர விரும்பினார். அதற்காக ஒரு படைக்கப்பலை சமோவாவிற்கு அனுப்பினார்.
ஜெர்மானிய வீரர்கள் அந்தத் தீவின்மீது குண்டுகளை வீசித் தாக்கினர். அதில் சில குண்டுகள், அந்தத் தீவிலிருந்த அமெரிக்க நாட்டுக்குச் சொந்தமான சொத்துக்கள் மீதும் விழுந்தன. அங்கிருந்த அமெரிக்கக் கொடியை ஜெர்மானிய மாலுமிகள் கீழிறக்கினர். இதைக் கேள்விப்பட்டு கோபமடைந்த அமெரிக்க அரசு, பதில் தாக்குதலுக்காக தனது போர்க்கப்பலை அங்கு அனுப்பியது. இருநாட்டுக் கப்பல்களுக்கும் இடையே கடும்போர் மூளவிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்த்து. பெரும் புயல் ஒன்று சமோவா துறைமுகத்தைத் தாக்கியது. அதில் இருநாட்டுக் கப்பல்களும் அழிந்தன. அதனால் பெரும்யுத்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது. இரத்தம் மட்டுமே தோய்ந்திருக்கும் உலகப் போர் வரலாற்றில் மெல்லிய புன்னகை வரவழைக்கும் சம்பவமாக இன்றும் இது இருக்கிறது.

கலண்டரின் கதை
“கணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் ‘கலண்டே’ எனும் இலத்தீன் உச்சரிப்பிலிருந்து உருவானதுதான் காலண்டர் (Calendar) எனும் ஆங்கிலச்சொல். புவியியல் மற்றும் காலநிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே துவக்ககால கலண்டர்களுக்கு அடிப்படையாக அமைந்தன. நைல் நதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கை அடிப்படையாகக் கொண்டு புராதன எகிப்தியர் உருவாக்கிய கலண்டர் இதற்குச் சான்று. இன்று நம் முன்னே இருக்கும் கலண்டரின் அடிப்படை கி.மு.45 இல் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் கலண்டரே.
இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் கலண்டர் முறையே கிரிகோரியன் காலண்டர். பதிமூன்றாம் போப் ஆண்டவராக இருந்த போப் கிரிகோரியின் ஆணைப்படி, அலோயிஷியஸ் லிலியஸ் என்னும் மருத்துவரே 1582 பிப்ரவரி 24 இல் ஜூலியன் கலண்டரில் காணப்பட்ட குரைபாடுகளைத் திருத்தியமைத்து கிரிகோரியன் கலண்டரை உருவாக்கினார். ஏசு கிருஸ்துவின் பிறந்ததினத்தை அடிப்படையாகக் கொண்டே இக்கலண்டரின் வருடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டது.
ஸ்பெயின், போர்ச்சுக்கல், போலிஷ் லிதுவேனியன் காமன்வெல்த், இத்தாலியின் பெரும்பாலான பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் கலண்டரை முதன்முதலில் ஏற்றுக்கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் கலண்டரைப் பயன்படுத்தத் துவங்கின.
இங்கிலாந்தும்,அமெரிக்காவும் 1752 இற்கு பின்பே கிரிகோரியன் கலண்டரை அங்கீகரித்தது. கிரீஸ் இந்தப் பட்டியலின் கடைசி நாடு.

கவரிமான் இருப்பது உண்மையா?
கவரிமான் என்றொரு மான் வகையே கிடையாது. இமயமலையில் இருக்கும் ஒரு வகைக் காட்டு மாடு, சடைமுடியுடன் இருக்கும். கவரி என்றால் மயிர். மா என்றால் விலங்கு. இதுவே கவரிமா. இமயமலையில் கடுங்குளிரில், பனிப்பொழிவில் வாழும் இந்த மாடு, உடம்பில் மயிரை இழந்துவிட்டால், குளிரில் தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்துவிடும்.
இதைத்தான் திருவள்ளுவர், ‘மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமா’ என்கிறார். மற்றபடி கவரிமான் அல்ல அது. அன்னப்பறவை போல, நாமாக உருவாக்கிய ஒரு உயிரினம் கவரிமான்.
இதைத்தான் திருவள்ளுவர், ‘மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமா’ என்கிறார். மற்றபடி கவரிமான் அல்ல அது. அன்னப்பறவை போல, நாமாக உருவாக்கிய ஒரு உயிரினம் கவரிமான்.
Labels:
அறிவுக்களஞ்சியம்
இடதுகைப் பழக்கம் ஏன்?
நம்மில் சிலபேர் இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம். இது ஏன் என்று தெரியுமா?
நமது மூளையின் வலப்பாகம் உடம்பின் இடதுபாக உறுப்புகளையும், இடப்பாகம் உடம்பின் வலதுபக்க உறுப்புகளையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கட்டளை பிறப்பித்து வருகிறது. பொதுவாக மனிதர்களில் 90 சதவீதம் பேருக்கு இடப்பக்கம் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. எனவே அவர்கள் வலதுகை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ள 10 சதவீதம் பேருக்கு மூளையின் வலப்பாகம் சக்தி வாய்ந்ததாக இருப்பதால் அவர்கள் இடதுகைப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல்.

பூமியின் ஆழம் எவ்வளவு?
பூமியின் மேற்பகுதியிலிருந்து மையம் வரை உள்ள ஆழம் சுமார் 4000 மைல். பெட்ரோலியம், உலோக தாதுக்களுக்காக பூமியில் சுமார் 5 மைல் ஆழம்வரை தோண்டிப் பார்க்கப்பட்டிருக்கிறது. அதற்கும் கீழே கடுமையான வெப்பம் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் மனிதனால் உள்ளே தோண்டிக் கொண்டே போக முடியாது. அப்படியே தோண்டிக் கொண்டு போவதாக கற்பனை செய்தால், இந்தியாவில் குழி தோண்டி உள்ளே இறங்கும் மனிதன் பூமியைக் குடைந்து கொண்டு வெளியே வரும்போது அவன் அமெரிக்க மண்ணை மிதிப்பான்.
Labels:
அறிவுக்களஞ்சியம்
சிவப்புத் துணியைக் கண்டால் மாடு மிரளுமா?
தமிழ் சினிமாவில் காட்டப்படும் அபத்தங்களில் இதுவும் ஒன்று. ஏனெனில் மாடுகளுக்கு வண்ணங்கள் தெரியாது. எல்லா வண்ணங்களும் அதற்கு ஒன்றே. மாடுகள் மிரண்டு போவது துணியை அசைப்பதால் மட்டுமே. மாடு என்றில்லை, பொதுவாக எல்லா மிருகங்களும் நிறக்குருடு உள்ளவைதான். மனிதர்களில் சிலருக்கும் இக்குறைபாடு உண்டு. இதற்கு ‘colour blindness’ என்று பெயர்
Labels:
அறிவுக்களஞ்சியம்
இடி மின்னலால் ஏதாவது பயனுண்டா?
இடி மின்னலின் போது காற்றில் அதிகமாக நைட்ரஜன் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு, அது மழை நீரில் கரைந்து நிலத்தில் விழுகிறது. இது விவசாயத்திற்குப் பயன்படும் உரமாகி, விளைச்சலை அதிகரிக்கிறது. இதற்கு ‘Fixation of Nitrogen’ என்று பெயர். இடி, மின்னல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் விளைச்சல் அதிகமாக இருப்பதைப் பார்க்க முடியும்.
Labels:
அறிவுக்களஞ்சியம்
பூமி எப்படி அழியும்?
உலகம் அழிவது என்பது சூரியனிலிருந்துதான் தொடங்கும். சூரியனின் நியுக்ளியர் பாலன்ஸ் (NUCLEAR BALANCE) எனப்படும் அணுக்கரு சம நிலை என்றைக்காவது ஒருநாள் சீர்குலைந்து போகும். எப்போது என்றால், 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனில் இருக்கும் ஹைட்ரஜன் வாயு ஹீலியம் வாயுவாக மாறிப் போகும். அப்போதுதான் சூரியனின் ‘நியுக்ளியர் பாலன்ஸ்’ சீர்குலைந்து வெப்பம் அதிகமாகி சூரியன் விரியும். அவ்வாறு விரியும் சூரியன் தனக்குப் பக்கத்தில் இருக்கும் சுக்கிரன், புதன் போன்ற கிரகங்களை தன்னோடு ஈர்த்துக் கொள்ளும். இந்தக் கடுமையான வெப்பத்தின் காரணமாக பூமியில் உள்ள கடல்கள் கொதித்து ஆவியாக மாறும். உயிரினங்கள் அழியும்.
Labels:
அறிவுக்களஞ்சியம்
அறுவை சிகிச்சையில் பயன்படும் நூல் எது?
அது நூல் அல்ல, நூல் போன்ற நரம்பு. அதற்குப் பெயர் கேட்-கட். இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். அறுவை சிகிச்சை செய்து முடித்ததும் இந்த கேட்-கட் நரம்பு நூலினால்தான் மருத்துவர்கள் தையல் போடுவார்கள். இந்தத் தையலை மீண்டும் பிரிக்க வேண்டியது இல்லை; பிரிக்கவும் முடியாது. அறுவை செய்யப்பட்ட ரணம் ஆறிக்கொண்டு வரும்போது இந்த நரம்பு நூலும் உடலோடு சேர்ந்துவிடும். இந்த நூல் நரம்பு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா? செம்மறியாட்டின் வலுவான குடல்தசை நார்களிலிருந்துதான்.
Labels:
அறிவுக்களஞ்சியம்
கண்நோய்க்கு மெட்ராஸ் ஐ என பெயர் வந்தது எப்படி?
இந்த நோய் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது சென்னையில்தான். 1918-ல் சென்னையில் ஒரு புதுவிதமான கண்நோய் வேகமாகப் பரவியது. அந்த நோய்க்கான காரணத்தை சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஆராய்ந்து, அதற்கு மூல காரணமாக ‘அடிநோ’ வைரஸ் என்ற கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் முதலில் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டதால், அதற்கு ‘மெட்ராஸ் ஐ’ என்று பெயரிடப்பட்டது.
Labels:
அறிவுக்களஞ்சியம்
மாலைக்கண் நோய்
‘NIGHT BLINDNESS’ எனப்படும் மாலைக்கண் நோய் இருப்பவர்களுக்கு சூரியன் மறைந்த்தும் கண் தெரியாமல் போவது ஏன்?
மாலைக்கண் நோய் உள்ளவர்களுக்கு பிரகாசமான வெளிச்சம் இருந்தால் மட்டுமே அவர்களால் பொருள்களை நன்றாகப் பார்க்க முடியும். சூரிய ஒளிக்கு மட்டுமே அந்த சக்தி உள்ளது. சூரிய ஒளிக்கு குறைந்த வெளிச்சத்தில் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்ளும் விழித்திரை செல்கள் அவர்களுக்கு மிகவும் குறைவாக இருப்பதால் சூரியன் மறைந்த உடனேயே அவர்களுடைய பார்வை மங்கிப் போய்விடுகிறது.
இந்த மாலைக்கண் நோய் ஏற்படுவதற்குக் காரணம் வைட்டமின் ‘ஏ’ பற்றாக்குறைதான். குழந்தைகளுக்கு மூன்று வயது முதலே பால், கீரை, பப்பாளி, கேரட், மீன், மூட்டை, பழங்கள் கொடுத்து வந்தால் கண் சம்பந்தப்பட்ட எல்லா நோய்களையும் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் நிறுத்திவிடலாம்.

மருத்துவம்
பேஸ்மேக்கர் என்ன செய்யும்?
இருதய ஆபரேஷன் செய்து கொள்பவர்களில் சிலர் ‘பேஸ் மேக்கர்’ என்னும் கருவியை உடம்போடு பொருத்திக் கொள்கிறார்கள். இந்த பேஸ் மேக்கரின் வேலை என்ன தெரியுமா?
Labels:
மருத்துவம்
என்ன செய்யும் இந்த FUNCTION KEYS?
கணனி விசைப் பலகையின் மேல் வரிசையில் F1, F2 என பெயரிடப்பட்ட 12 விசைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இவை (Function Keys) பன்ங்ஷன் கீஸ் எனப்படுகின்றன. இந்த பன்ங்ஷன் விசைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளன.
Labels:
கணணி மையம் (Keyboard)
அப்பளம் தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்:
சுத்தப்படுத்தப்பட்ட உழுத்தம் பருப்பு 2 கிலோ
எண்ணெய் 100 ml
சீரகம் 10 கிராம்
பெருங்காயம் சிறு துண்டு
உப்பு தேவையான அளவு
உழுத்தம் பருப்பைச் சுத்தம் செய்து கல்லுரலில் இட்டு மிகச் சன்னமாக மாவாக அரைத்து அதனை நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும். சலித்த மாவை கவனமாக தட்டில் கொட்டி, சீரகத்தையும் கலந்து அளவாக உப்பு சேர்த்து வேண்டிய அளவு தண்ணீர் தெளித்து இறுக்கமாகப் பிசைந்து கொள்ள வேண்டும்.

சமையல்
சாம்பார் பொடி
தேவையானப்பொருட்கள்:
காய்ந்த மிளகாய் - 1 கப்
தனியா (மல்லி) - 3/4 கப்
மிளகு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - சுண்டைக்காயளவு (கட்டி பெருங்காயம் இல்லையென்றால், பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்)
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 4 ஈர்க்கு (விருப்பமானால்)
எண்ணை - 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன்

தக்காளி தயிர் பச்சடி
தேவையானப் பொருட்கள்:
தக்காளி - 2
தயிர் - 2 கப்
பச்சைமிளகாய் - 2
புதினா - சிறிது
இஞ்சி - சிறு துண்டு
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்.
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
தக்காளியை நடுத்தரத் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
தயிரை நன்றாகக் கடைந்துக் கொள்ளவும்.
இஞ்சி, பச்சைமிளகாய், புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அத்துடன் பெருங்காயத்தூள், நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், புதினா சேர்த்து சிறிது வதக்கவும். பின்னர் அதில் தக்காளித்துண்டுகளைப்போட்டு சற்று கிளறி சிறு தீயில் மூடி வைத்து ஒரு நிமிடம் வேகவிடவும். (குழைய விடக்கூடாது).
வெந்த தக்காளியை தயிரில் சேர்த்து, உப்பு போட்டு கலக்கவும்.
பச்சை கொத்துமல்லி அல்லது சிறிது புதினா தழையைத் தூவி பரிமாறவும்.
குறிப்பு:
செர்ரி தக்காளி என்று சொல்லப்படும், சிறிய வகை தக்காளியை பயன்படுத்தினால், பார்க்க அழகாக இருக்கும்.

பூண்டு சட்னி
தேவையானப்பொருட்கள்:
பூண்டுப்பற்கள் - 10 அல்லது 15
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, மிகஸியில் போட்டு , சிறிது தண்ணீரை ஊற்றி நன்றாக அரைத்து எடுக்கவும். இதில் நல்லெண்ணையை ஊற்றிக் கலந்து பரிமாறவும்.
வெந்தயத் தோசையுடன் தொட்டு சாப்பிட சுவையாயிருக்கும்.

தேங்காய் சிவப்பு சட்னி
தேவையானப் பொருட்கள்:
தேங்காய்த்துருவல் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 4
புளி - கொட்டைப்பாக்களவு
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - சிறிய துண்டு
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி அதில் பெருங்காயம்,கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், புளி ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். கடைசியில் தேங்காய்த்துருவலைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கவும். ஆறியபின் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

வெள்ளரிக்காய் மோர் கூட்டு
தேவையானப்பொருட்கள்:
வெள்ளரிக்காய் - 1
தயிர் - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
பச்சைமிளகாய் - 1 அல்லது 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
வெள்ளரிக்காய் - 1
தயிர் - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
பச்சைமிளகாய் - 1 அல்லது 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
Labels:
சமையல்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)