திங்கள், 18 அக்டோபர், 2010

இன்று ஸ்ரீவித்யா நினைவு நாள்

இவர் ஒரு புகழ்பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். கர்நாடக இசை பாடகி எம்.எல்.வசந்த குமாரி அவர்களின் மகள். இவர் 1970களில் இருந்து 2000களின் தொடக்கம் வரை நடித்து வந்தார். 2003ஆம் ஆண்டு மார்புப் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட அவர் 2006, அக்டோபர் 19ஆம் தேதி இறந்தார்.

தமிழர்களிடையே ஒற்றுமையில்லை என்று காரணம் சொல்வதை ஜனாதிபதி மஹிந்த நிறுத்த வேண்டும்: மு.கருணாநிதி

அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை என்று காரணம் சொல்வதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிறுத்த வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி  தெரிவித்துள்ளார்
தமிழ் மக்கள் அமைதியான வாழ்க்கைச் சூழலை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று திங்கட்கிழமை கூறியுள்ளார்.

சந்திரகாந்தனை கொல்ல முயற்சித்தேன்: அமைச்சர் சுபைர்

நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் தற்போதைய கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை கொல்ல வேண்டும் என பல தடவை நான் எண்ணியிருந்தேன். அதுபோல் அவரும் என்னைக் கொல்ல பல தடவைகள் முயற்சித்திருந்தார். ஆனால் தற்போது யுத்தம் நிறைவடைந்து சமாதானம் நிலவுகின்றது. இன்று இருவரும் ஒன்றாக இணைந்து கிழக்கு  மாகாணத்தின் அபிவிருத்தி பற்றி சிந்தித்து செயல்படுகின்றோம் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

பாலியல் துஷ்பிரயோகப் புகார் : மன்னார் சிறுமியர் இல்லத்தை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு

பாலியல் துஷ்பிரயோகம் குறித்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து, மன்னார் மாவட்ட நீதிபதி ஏ.யூட்சனின் உத்தரவுக்கமைய மன்னார் முருங்கன் பகுதியில் அமைந்துள்ள  சிறுமியர் இல்லமொன்று  சீல் வைத்து மூடப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிச்சுட்டான் பகுதியில் உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது!

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிச்சுட்டான் பகுதியில் உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் நேற்று மாலை 5.30 மணியளிவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒட்டிச்சுட்டான் 14 ஆம் கட்டைப் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த சடலம் அதேபிரதேசத்தைச் சேர்நத 53 வயதுடைய ஆள்வாபிள்ளை துறைராசாவினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசி திருடர்களை கல்லால் எறிந்து கொன்ற குழுவினர்

தென் ஆபிரிக்காவில் கையடக்கத் தொலைபேசியொன்றை திருடிய சந்தேகத்தில் இரு இளைஞர்களுக்கு கல்லால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றிய அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுநீர் மூலம் கண்டு கொள்ள முடியும்

ஆண்களை பாதிக்கும் பிராஸ்டேட் கேன்சர் உள்ளதா இல்லையா என்பதை அவர்களின் சிறுநீர் மூலம் கண்டு கொள்ள முடியும் என இங்கிலாந்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதிசய லில்லி (படங்கள் இணைப்பு)

அதிசய 'லில்லி' இனங்களில் பலவகை இருக்கின்றன. அவற்றில் மிகவும் பிரமாண்டமானது ‘விக்டோரியா அமசோனிகா’ என்னும் வகை லில்லியாகும்.

நடனமாடும் ரோபோ

ஜப்பானிய டோக்கியோ நகரில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இலத்திரனியல் கண் காட்சியில் அந்நாட்டின் உயர் தொழிற்றுறை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நிறுவ னத்தின் “எச்.ஆர்.பி - 4 சி' என்ற 1.58 மீற்றர் உயரமான ரோபோ நடனமாடி பார்வையா ளர்களை வியப்பில் ஆழ்த்திய போது எடுக்கப்பட்ட படம் இது. மேற்படி நிறுவனமா னது மனித வடிவான ரோபோக்களுக்கான “சோயோனொயிட்' என்ற பொழுதுபோக்கு மென்பொருளை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாக்கிஸ்தானிய கர்ப்பிணிப் பெண் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்பு

கர்ப்பிணியான 23 வயது பாகிஸ்தானிய பெண்ணொருவர், பிரித்தானியாவிலுள்ள அவரது வீட்டுத் தோட்டத்தில் தீப்பிளம்பாக எரிந்து உயிழந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அஸியா கான் (23 வயது), 9 மாதங்களுக்கு முன்பு பெரியவர்கள் பார்த்து நிச்சயம் செய்த மணமகனை கரம் பிடிக்க பிரித்தானியாவுக்கு வந்தார். அங்கு அவருக்கும் நவீத் கான் (27 வயது) என்பவருக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

அபூர்வ தினங்களில் 3 குழந்தைகளை பிரசவித்து அமெரிக்க பெண் சாதனை (படங்கள் இணைப்பு)

அபூர்வ தினங்களில் மூன்று குழந்தைகளை பிரசவித்து அமெரிக்காவைச் சேர்ந்த பார்பரா சொப்பர் என்ற பெண்மணி சாதனை படைத்துள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சாதனை தொடர்பான செய்தி சர்வதேச ஊடகங்களில் சனிக்கிழமை வெளியாகியுள்ளது.

இனிப்புக்கடை திருடனின் கையை வெட்ட ஈரானிய நீதிபதி தீர்ப்பு

இனிப்புக் கடையொன்றிலிருந்து சொக்லேட்டையும் தின்பண்டங்களையும் திருடிய இளைஞன் ஒருவனின் கரங்களை வெட்டுமாறு ஈரானிய நீதிபதியொருவர் தீர்ப்பளித் துள்ளார்.

அவுஸ்திரேலிய முதல் துறவிக்கு திருச்சபையின் உத்தியோகபூர்வ அங்கீகாரம்

பாப்பரசர் 16 ஆம் ஆசீர்வாதப்பர், அவுஸ்திரேலிய முதல் துறவியான மேரி மக்கில்லொப்பிற்கு உத்தியோகபூர்வ அங்கீகாரமளித்துள்ளார்.
மெல்போர்னில் பிறந்த மேரி மக்கில்லொப், ஏழைச் சிறுவர்களுக்கு சேவை யாற்றி வந்தார்.

மாமியாரை அடுப்புக்குள் தள்ளிக் கொன்ற மருமகள் தலிபான் போராளிகளால் படுகொலை

ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் தனது மாமியாரை படுகொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒருவர் தலிபான் போராளிகளால் கொல்லப்பட்டுள்ளார்.

30 வயது குறைந்த 19 வயது பெண்ணை மணந்த ஒபாமாவின் அண்ணன்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அண்ணன் மாலிக் ஒபாமா (52). முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இவர் கென்யாவில் தங்கியுள்ளார். இவர் அதிபர் ஒபாமா தந்தையின் முதல் மனைவியின் மகன் ஆவார். இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில், தற்போது 3-வது மனைவியாக 19 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பள்ளி மாணவியான இவர் திருமணத்துக்கு பின் தன் படிப்பை நிறுத்தி விட்டார்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல