வவுனியாவில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இவரை வெள்ளை வானில் வந்தவர்களே கடத்திச்சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா பேருந்து நிலையத்திற்கு அண்மை யில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள் ளது. அவ் இளைஞன் கடைக்குச் சென்ற பொழுதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திங்கள், 13 டிசம்பர், 2010
மோ.சைக்கிள் மதிலுடன் மோதி விபத்து - இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கோயில் மதிலுடன் மோதி விபத்துக் குள்ளானதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இச்சம்பவம் நேற்று மாலை 5.30 மணி யளவில் பன்னக்கட்டை பருத்தித்துரை விநா யகர் ஆலயத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
Labels:
இலங்கை
பரிசோதனையின் போது மாணவன் பலி
மட்டக்களப்பில் பாடசாலை மாணவன் ஒருவன் விஞ்ஞான பாடப் பரிசோதனையில் ஈடுபட்ட போது தீப்பற்றிப் பரிதாபகரமாக உயி ரிழந்தார்.மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி யில் வகுப்பு 9இல் கல்வி பயிலும் குகராஜா கேசாணன் என்னும் மாணவனே மேற்படி விஞ்ஞான பாடப் பரிசோதனையில் ஈடுபட்டி ருந்தபோது தீப்பற்றி உயிரிழந்தவராவார்.
Labels:
இலங்கை
சங்கானையில் நடந்தது என்ன?
கொள்ளையர்கள் கைகளில் துப்பாக்கியா- அது சாத்தியமா? இரவு எட்டுமணி. குப்பென்ற இருட்டு. எவரும் எதிர்பாராத வேளையில் மிகப் பெரும் திகில் சம்பவம் நடந்தேறியது. சங்கானை முருகமூர்த்தி ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ நித்தியா னந்தக் குருக்கள் ஆலய பூசையை முடித்துக்கொண்டு வீடு திரும்பியிருந்தார்.அவரின் வீடும் கோவிலும் மிகவும் அண்மித்த தூரங்களைக் கொண்டவை.
Labels:
இலங்கை
வான்வெளிப் பயணம் முதற்தடவையாகச் சோதிக்கப்பட்டது
ரைட் சகோதரர்கள் ஓர்வில், வில்பர் என்ற அமெரிக்கர்கள் முதன் முதலில் டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள்.
Labels:
இன்று
எனது கணவருக்கு நான் மயக்க ஊசி ஏற்றினேன் காதலர் மின்சாரம் பாய்ச்சி அவரை படுகொலை செய்தார் (படங்கள் இணைப்பு)
ஈரானில் திருமணத்துக்கு அப்பாலான காதல் தொடர்புக்காக கல்லால் எறிந்து மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள ஷகினெஹ் மொஹமடி அஷ்தியானி தோன்றி விளக்கமளிக்கும் நிகழ்ச்சி அந்நாட்டு அரசாங்க “பிரெஸ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
Labels:
உலகப்பார்வை,
வினோதமான செய்திகள்
பாப் பாடகரின் கையெழுத்து பிரதி ரூ.2 கோடிக்கு ஏலம்
ஆலிவுட்டில் கடந்த 1960-ம் ஆண்டுகளில் பிரபல பாப் இசை பாடகராக திகழ்ந்தவர் பாக் டைலான். 1964-ம் ஆண்டு அவர் எழுதிய `தி டைம்ஸ்...' என்ற பாடல் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் பிரபலமாக விளங்கியது. அந்த பாடலை அவர் கைப்பட எழுதிய இரண்டு பக்க கையெழுத்து பிரதி சமீபத்தில் ஏலம் விடப்பட்டது.
Labels:
வினோதமான செய்திகள்
அதலபாதாளத்தில் விக்கிலீக்ஸின் ஆவணங்கள் (படங்கள் இணைப்பு)
அமெரிக்காவின் இராணுவ மற்றும் தூதரக இரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்டு உலகையே பரபரப்பில் ஆழ்த்தியது. இந் நிலையில் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் மீது சுவீடனில் 2 பெண்களைக் கற்பழித்ததாக தொடரப்பட்ட வழக்கில் லண்டன் பொலிஸார் அவரைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.
Labels:
உலகப்பார்வை,
படங்கள்,
Wikileaks on Srilanka
அழகு குறிப்புகள்
பெண்களுக்கான குறிப்புகள் மட்டும் அல்ல இவை. ஆண்களும் இவற்றைப் பின்பற்றலாம்.
1. தலைமுடி வளர:
அரை லிற்றர் நல்லெண்ணெய்யை காய்ச்சி இறக்கி அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைப் போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெய்யை அடிக்கடி தலையில் தேய்த்துக் குளித்து வரவும். தலையில் தேய்க்கு முன் இலேசாக சூடு படுத்தித் தேய்க்கவும்.
1. தலைமுடி வளர:
அரை லிற்றர் நல்லெண்ணெய்யை காய்ச்சி இறக்கி அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைப் போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெய்யை அடிக்கடி தலையில் தேய்த்துக் குளித்து வரவும். தலையில் தேய்க்கு முன் இலேசாக சூடு படுத்தித் தேய்க்கவும்.
Labels:
பெண்கள் பக்கம்
காலியான நாற்காலிக்கும் நோபல் பரிசு
சீனாவின் கடும் எதிர்ப்புக்கும், கோபத்துக்கும் இடையில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில், சீன அறிஞர் லியு ஷியா போவுக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டது. சிறையில் இருக்கும் அவரைக் குறிப்பிடும் விதத்தில், மேடையில் வைக்கப்பட்டிருந்த காலியான நாற்காலி ஒன்றில் நோபல் விருது வைக்கப்பட்டது.
Labels:
உலகப்பார்வை
அமெரிக்க நிதி மோசடியாளரின் மகன் தூக்கிட்டு தற்கொலை (படங்கள் இணைப்பு)
மார்க் மாடோப்
பழைய முதலீட்டாளர்களின் நிதியை பயன்படுத்தி புதிய முதலீட்டாளர்களுக்கு வட்டி வழங்கும் மோசடியான நிதி நிறுவனத்தை நடத்தி உலகளாவிய தியில் பரபரப்பை ஏற்படுத்திய அமெரிக்க முதலீட்டாளர் பெர்னார்ட் மாடோப்பின் மகன்களில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Labels:
உலகப்பார்வை
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)







