ஞாயிறு, 29 டிசம்பர், 2013
பிரசவத்திற்குப் பின்னர் பெண்களில் ஏற்படும் உளவியல் மாற்றங்கள்
பெண்கள் தமது குழந்தையைப் பிரசவித்து தாய்மைப்பேற்றை அடைந்த பின்னர் வரும் பிரசவத்திற்குப் பின்னரான காலப்பகுதி ஒரு முக்கிய விடயமாகும். இக்காலப் பகுதியில் மேற் கொள்ள வேண்டியதும் கவனிக்கப்பட வேண்டியதுமான விடயங்கள் பல பெண்களுக்கு உள்ளன. ஆனால் நடைமுறையில் இவை யாவும், பெண்கள் மத்தியில் புறக்கணிக்கப்பட்ட விடயங்களாகவே இருந்து வருகின்றன. கர்ப்பமாகிய பெண்ணொருவர் தமது பிரசவத்தை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்? அதாவது சிசேரியன் பிரசவமா? அல்லது சாதாரண சுகப் பிரசவமா? எனப் பல ஏக்கங்களுடன் இருப்பார்கள். பிரசவத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள் பற்றி தொடர்ந்து ஆராய்வோம்.
Labels:
பெண்கள் பக்கம்
83 வயது மாமியாரை பட்டினி போட்டு சித்திரவதை செய்த மருமகள் பொலிஸாரால் கைது!
இரண்டு மாடி ஆடம்பர வீட்டின் பின்புறம் குடிசை ஒன்றில் பசியால் வாடிய மாமியாரை பொலிஸார் மீட்டனர்.
அம்மாவா, நானா? இரண்டுல ஒண்ணு முடிவு பண்ணுங்க” என கோஷமிட்டு விவாகரத்துப் படியேறுபவர்கள் இன்று எக்கச்சக்கம் என்கின்றனர் 'கவுன்சிலிங்” வல்லுனர்கள். இங்கிலாந்தில் நடந்த ஆய்வு ஒன்றில் 60 சதவீதம் பெண்களுக்கு மாமியாருடன் சண்டையாம். அது வாழ்நாள் முழுதும் ஒரு விதமன அழுத்தத்தைக் அவர்களுக்கு கொடுக்கிறதாம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் டெரி அப்டர் நடத்திய ஆய்வின் முடிவு இது.
அம்மாவா, நானா? இரண்டுல ஒண்ணு முடிவு பண்ணுங்க” என கோஷமிட்டு விவாகரத்துப் படியேறுபவர்கள் இன்று எக்கச்சக்கம் என்கின்றனர் 'கவுன்சிலிங்” வல்லுனர்கள். இங்கிலாந்தில் நடந்த ஆய்வு ஒன்றில் 60 சதவீதம் பெண்களுக்கு மாமியாருடன் சண்டையாம். அது வாழ்நாள் முழுதும் ஒரு விதமன அழுத்தத்தைக் அவர்களுக்கு கொடுக்கிறதாம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் டெரி அப்டர் நடத்திய ஆய்வின் முடிவு இது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
வீரகேசரி
ஏ.கே. 47 ஐ நான் ஏன் கண்டுபிடித்தேன்?
வேதனையடைந்த மிக்கைல் கலஷ்னிகோவ்!
ஏ.கே.47 ரக துப்பாக்கியைக் கண்டுபிடித்த ரஷ்யாவின் மிக்கைல் கலஷ்னிகோவ் தனது 94 ஆவது வயதில் 23.12.2013 திங்கட்கிழமை காலமானார். மூன்றாம் உலக நாடுகளின் மரபுவழி இராணுவங்கள் முதல் உலகிலுள்ள அனைத்து விடுதலை இயக்கங்கள் வரை பொதுத் தாக்குதல் ஆயுதமாக பயன்படுத்திய ஏ.கே.47 என்ற பெயரால் உலகம் முழுவதும் அறியப்பட்ட தானியங்கி துப்பாக்கியின் உருவாக்குனரும் தயாரிப்பாளருமான மிக்கைல் கலஷ்னிகோவ், நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கடந்த ஒரு மாத காலமாக உடலினுள் குருதிப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் ரஷ்யாவிலுள்ள அவரது சொந்த ஊரான இஷிவ்ஸ்க் நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார்.
Labels:
கட்டுரைகள்
உலகின் இளைய தேசத்தை ஆட்டிப் படைக்கும் இனமுரண்பாடு
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். இந்தக் கதையை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. அன்றைய சூடானிய தேசத்தில் இருந்தவர்களால் கூடி வாழ முடியவில்லை. வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் பிரச்சினைகள் நீடித்தன. கூடி வாழ்வதை விட தனித்து வாழ்ந்தால் தான் நல்லதென வடக்கும், தெற்கும் தீர்மானித்தன. கூடி வாழ்வதால் கிடைக்கும் நன்மையை விட தனித்தனியாக வாழ்வதால் கிடைக்கும் அனுகூலங்கள் அதிகமென உலக நாடுகள் கருதின.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
இறுதி வரை துணிச்சல் காட்டிய சதாம்!
சதாமின் மார்பளவுச் சிலையின் கழுத்தில் அவரைத் தூக்கிலிடப் பயன்படுத்தப்பட்ட உண்மையான கயிறு. அருகில் மொவாபக் அல் ருபேய்.
சதாம் ஒரு குற்றவாளி; உண்மை தான், ஒரு கொலைகாரர்;உண்மை தான், படுகொலை புரிந்தவர்; உண்மைதான். ஆனால், அவர் தன் இறுதி நிமிடம் வரை துணிச்சல் காட்டினார். ஒரு போதும் வருத்தப்படவில்லை, வருத்தம் தெரிவிக்கவுமில்லை.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்
நாய்கள் யோசிப்பதை கண்டுபிடிக்கும் Headset! (வீடியோ)
நாய்களுடைய யோசிப்பதை கண்டறிந்து அதனடிப்படையில் அதனுடைய வார்த்தைகளை மொழி பெயர்க்கும் Headset ஒன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இது நாய்களுடைய மூளையை ஸ்கேன் செய்து வார்த்தைகளை மொழிப் பெயர்க்கின்றது. பெரும்பாலும் மனிதனுடைய செயற்பாடு எதுவென நாய்களால் அறிந்து கொள்ள முடியும். ஆனால் நாய்களுடைய சிந்தனையை மனிதனால் இதுவரை புரிந்து கொள்ள முடியாமலிருந்தது. இதை கவனத்தில் கொண்டு நாய்களின் மனதில்தோன்றும் எண்ணங்களை மொழிபெயர்ப்பு செய்யும் நோக்கில் இந்த Headset வடிவமைக்கப்பட்டுள்ளது.
Labels:
வினோதமான செய்திகள்
சீன பெண்ணை வரதட்சணை கொடுத்து மணந்த தமிழக என்ஜினியர்
குமரி மாவட்டம் கருங்கல், அய்யன்விளையை சேர்ந்தவர் தங்கராஜ். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மனைவி ரத்தினம். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களது இளைய மகன் அமிர்தராஜ். ஐஐடியில் உயர் படிப்பு பயின்றவர். இந்த நிலையில் கடந்த 5 வருடமாக சீனாவில் உள்ள யு யாங் ஹூனன் பகுதியில் உள்ள ஐபிஎம் சாப்ட்வேர் கம்பெனியில் பிராஜக்ட் எக்ஸ்சிகியூட்டிவாக பணியாற்றி வருகிறார்.
Labels:
இந்தியா,
தமிழர்கள்,
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)









